Friday, August 2, 2013

Keerthivasan

மோடியின் குஜராத் ஒரு பயணம் - I





மோடியை எதிர்ப்பவாரா நீங்கள்?? ஆம் எனில் 2 நிமிடம் இதை படியுங்கள்..

எதுவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம் சாத்தியமல்ல என்று தொடர்ந்து இந்தியர்களாகிய நாம் நம்பவைக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பட்டியல் மிக நீளமானது.

குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? முடியவே முடியாது! நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே! அதை எப்படித் தீர்க்கமுடியும்?

எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா? அது எப்படி முடியும்? மின்சாரம் என்ன மரத்திலா விளைகிறது?

விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? சாத்தியமே இல்லை.

நதிகளை இணைக்க முடியுமா? நதிகளையாவது, இணைக்கிறதாவது?

ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா? அதெல்லாம் நடக்காது.

ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா? வாய்ப்பே இல்லை.

அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில்? கனவிலும் சாத்தியமில்லை.

ஆனால், மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.

மக்களைக் கொண்டே, அவர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை அடையச் செய்யும் நரேந்திர மோடி அரசின் சூத்திரங்களை நாம் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை, நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது. இந்தப் புத்தகம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அல்ல. அவருடைய கட்சியின் தேர்தல் அறிக்கையும் அல்ல. என் தேடலுக்குக் கிடைத்த பதில்.

இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

சில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.

நரேந்திர மோடி சொல்வதைப் போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :