Tuesday, May 26, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 13 – கடவுளை மனிதன் படைத்தானா? - 2

ஒரு தத்வார்த்த பயணம் – 13 – கடவுளை மனிதன் படைத்தானா? - 2


நேற்று கடவுள் என்னும் தன்மைக்கு பகுத்தறிவு ரீதியான பதிவைக் கண்டோம்!! இன்று ஆன்மீக அடிப்படையில் இந்தப் பதிவைத் தருகிறேன்!!

இது கடவுளை மனிதன் படைக்கவில்லை ஆனால் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்னும் கருத்தையொட்டிய ஆன்மீக/ விஞ்ஞான ரீதியான வாதமாகக் கொள்ளலாம்!!

மனிதன் உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள லட்சோபலட்சம் ஜீவராசிகளைக் கடவுள் என்று ஒருவன்தான் படைத்தான் என்று நம்பும் அளவு என்ன ஆதாரம் சொல்ல முடியும்? என் கருத்து இந்த இடத்தில் முதல் மனிதன் உருவானதை ஒட்டி வருகிறது! முதல் மனிதன் எப்படி உருவாகியிருப்பான்? அவன் ஆணா அல்லது பெண்ணா? அவன் ஆணாக இருந்தால் பெண்ணின்றி எப்படி உருவாகியிருக்க முடியும்? அது பெண்ணாக இருந்தால் ஆணின் உறவின்றி எப்படிப் பெண் உருவாகியிருக்க முடியும்? எனக்குத் தெரிந்து இந்தக் கேள்விக்கு சரியான விடையை இதுவரை எந்த உயிரியல்/மரபியல் விஞ்ஞானியும் அளிக்கவில்லை என்றே கருதுகிறேன்! இது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டையா என்பது போன்ற கேள்விதான்!

ஆனால் நமது மதத்தில் இதற்கு அருமையான ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் ஒரு விளக்கம் அளிக்கப் படுகிறது! அது தவறு என்னும் விளக்கம் நிரூபிக்கப் படும்வரை இந்த விளக்கமே நிற்கும்! நமது மதத்தில் மனிதன் என்னும் உயிரினம் கடவுளால் உருவாக்கப் பட்டது என்று சொல்கின்றனர்! சரி அப்படியென்றால் கடவுளர் எப்படி உருவாகினர்? இந்தக் கேள்விக்குதான் பரப்ரம்மம் என்னும் அறுதிக் கடவுள் நிலையே என்றும் உள்ளது என்றும் இதரக் கடவுளர் பரப்ரம்மத்தின் விரிவுதான் என்றும் சொல்லப் பட்டுள்ளது! பரப்ரம்மம் என்பது தோற்றம்/அழிவு இல்லாதது!! ஆக நாம் வழிபடும் மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்துக் கடவுளர்களும் நமது மத சாஸ்திரங்களின் படி 'பிரஜாபதிகள்' (PREGENITORS) என்று அழைக்கப் படுகின்றனர்! PREGENITORS என்றால் உறவு இன்றிப் பிறந்தவர்கள் என்று கொள்ளலாம்! இவர்கள் ப்ரஜாபதிகள் என்று சொல்வதன் காரணம் அவர்கள்தாம் 'மக்களின் தலைவர்கள்' என்று பொருள் கொள்ளலாம்!

இவ்வாறு பரப்ரம்மம் விரிவடைந்து பல ப்ரஜாபதிகள் உண்டான பின் பிரபஞ்சத்தில் இயக்கத்தை உருவாக்க வேண்டி மனிதப் பிறவியை உருவாக்க எண்ணிய பிரம்மா முதல் மனிதர்களாக 'மனு' என்ற ஆணையும் 'சத்ரூபா' என்ற பெண்ணையும் படைத்து அவர்களின் மூலம் பிரபஞ்சத்தில் மனித இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தியதாக நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன!! இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்க ஆதாரபூர்வமான எந்த விஷயமும் விஞ்ஞான ரீதியில் முன்வைக்கப்படாத நிலையில் இக்கருத்தே ஏற்புடையதாக இருக்கும்!!!
தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :