Showing posts with label ஒரு தத்வார்த்த பயணம். Show all posts
Showing posts with label ஒரு தத்வார்த்த பயணம். Show all posts

Tuesday, May 26, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 13 – கடவுளை மனிதன் படைத்தானா? - 2

ஒரு தத்வார்த்த பயணம் – 13 – கடவுளை மனிதன் படைத்தானா? - 2


நேற்று கடவுள் என்னும் தன்மைக்கு பகுத்தறிவு ரீதியான பதிவைக் கண்டோம்!! இன்று ஆன்மீக அடிப்படையில் இந்தப் பதிவைத் தருகிறேன்!!

இது கடவுளை மனிதன் படைக்கவில்லை ஆனால் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்னும் கருத்தையொட்டிய ஆன்மீக/ விஞ்ஞான ரீதியான வாதமாகக் கொள்ளலாம்!!

மனிதன் உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள லட்சோபலட்சம் ஜீவராசிகளைக் கடவுள் என்று ஒருவன்தான் படைத்தான் என்று நம்பும் அளவு என்ன ஆதாரம் சொல்ல முடியும்? என் கருத்து இந்த இடத்தில் முதல் மனிதன் உருவானதை ஒட்டி வருகிறது! முதல் மனிதன் எப்படி உருவாகியிருப்பான்? அவன் ஆணா அல்லது பெண்ணா? அவன் ஆணாக இருந்தால் பெண்ணின்றி எப்படி உருவாகியிருக்க முடியும்? அது பெண்ணாக இருந்தால் ஆணின் உறவின்றி எப்படிப் பெண் உருவாகியிருக்க முடியும்? எனக்குத் தெரிந்து இந்தக் கேள்விக்கு சரியான விடையை இதுவரை எந்த உயிரியல்/மரபியல் விஞ்ஞானியும் அளிக்கவில்லை என்றே கருதுகிறேன்! இது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டையா என்பது போன்ற கேள்விதான்!

ஆனால் நமது மதத்தில் இதற்கு அருமையான ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் ஒரு விளக்கம் அளிக்கப் படுகிறது! அது தவறு என்னும் விளக்கம் நிரூபிக்கப் படும்வரை இந்த விளக்கமே நிற்கும்! நமது மதத்தில் மனிதன் என்னும் உயிரினம் கடவுளால் உருவாக்கப் பட்டது என்று சொல்கின்றனர்! சரி அப்படியென்றால் கடவுளர் எப்படி உருவாகினர்? இந்தக் கேள்விக்குதான் பரப்ரம்மம் என்னும் அறுதிக் கடவுள் நிலையே என்றும் உள்ளது என்றும் இதரக் கடவுளர் பரப்ரம்மத்தின் விரிவுதான் என்றும் சொல்லப் பட்டுள்ளது! பரப்ரம்மம் என்பது தோற்றம்/அழிவு இல்லாதது!! ஆக நாம் வழிபடும் மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்துக் கடவுளர்களும் நமது மத சாஸ்திரங்களின் படி 'பிரஜாபதிகள்' (PREGENITORS) என்று அழைக்கப் படுகின்றனர்! PREGENITORS என்றால் உறவு இன்றிப் பிறந்தவர்கள் என்று கொள்ளலாம்! இவர்கள் ப்ரஜாபதிகள் என்று சொல்வதன் காரணம் அவர்கள்தாம் 'மக்களின் தலைவர்கள்' என்று பொருள் கொள்ளலாம்!

இவ்வாறு பரப்ரம்மம் விரிவடைந்து பல ப்ரஜாபதிகள் உண்டான பின் பிரபஞ்சத்தில் இயக்கத்தை உருவாக்க வேண்டி மனிதப் பிறவியை உருவாக்க எண்ணிய பிரம்மா முதல் மனிதர்களாக 'மனு' என்ற ஆணையும் 'சத்ரூபா' என்ற பெண்ணையும் படைத்து அவர்களின் மூலம் பிரபஞ்சத்தில் மனித இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தியதாக நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன!! இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்க ஆதாரபூர்வமான எந்த விஷயமும் விஞ்ஞான ரீதியில் முன்வைக்கப்படாத நிலையில் இக்கருத்தே ஏற்புடையதாக இருக்கும்!!!
தொடரும்
Read More
Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 12 – கடவுளை மனிதன் படைத்தானா?

ஒரு தத்வார்த்த பயணம் – 12 – கடவுளை மனிதன் படைத்தானா?





 இந்தப் பதிவு பகுத்தறிவு ரீதியில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் பதிவென்று கொள்ளலாம்! 'பகுத்தறிவு' என்றால் ஏதோ வேண்டாத விஷயமல்ல! நான் சொல்லும் பகுத்தறிவு நம்ப ஊர் பகுத்தறிவு போல அல்லாது சிந்தனைகளின் அடிப்படையில் உள்ள விஷயம்! ஹிந்து மதத்தில் பகுத்தறிவும் ஒரு பிரிவாகவே உள்ளது!! ( ஹிந்து மதப் பகுத்தறிவாளர்களை ஜாபாலிஸ்டுகள் என்று அழைப்பர்!!

நாம் யாரும் இந்தக் கலியுகத்தில் கடவுளைக் கண்டிருக்க வாய்ப்பில்லை! சிலர் உணர்ந்திருக்கலாம் அனுபவங்களின் மூலம்! ஆனால் பகுத்தறிவு ரீதியில் கடவுள் என்னும் சக்தி ஒன்று கிடையாது அதனை மனிதன்தான் படைத்தான் என்னும் வாதம் உள்ளது! அந்த அடிப்படையிலும் மனோதத்துவ அடிப்படையிலும் இதைப் பற்றிச் சிந்திப்போம்!

மனிதன் வெளியில் பெரிய பலசாலி போலவும் எதற்கும் அஞ்சாதவன் போலவும் காண்பித்துக் கொள்கிறானே தவிர உண்மையில் அவன் வாழ்வில் பலப்பல முறைகள் பயந்து நடுங்கவே செய்கிறான்! அவனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது!! ஆறறிவற்ற மிருகங்களுக்கு பிறப்பு இறப்பு பற்றிய எந்த சிந்தனைகளும் கிடையாது!!ஆனால் ஆறறிவு உள்ள ஒரே ஜீவனாக உள்ள மனிதன் மட்டும் பிறந்தது முதலே மரணத்தைக் கண்டு பயப்படும் தன்மை உள்ளவனாகிப் போனான்! இதன் முக்கியக் காரணம் அவனுக்கு மரணத்துக்குப் பின் தான் என்ன ஆவோம் என்பது தெரியாததே!!

இரண்டாவது அவன் மனத்தால் உடலால் பலகீனமாக உணரும்போதெல்லாம் அவனை பயம் சூழ்ந்து கொள்கிறது!! அவன் கடும் நோயால் பாதிக்கப் படும் போதெல்லாம் இறந்து விடுவோமோ என்று அஞ்சி நடுங்குகிறான்!! அதனாலேயே அவனுக்கு தான் துன்பங்களாலும் நோய்களாலும் பாதிக்கப் படும்போது தன்னை விட அதிக சக்தி கொண்ட இயற்கையை விடவும் அதிக சக்தி மிக்க இயற்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள ஒரு அரவணைக்கும் சக்தி வேண்டும் என்று விரும்புகிறான்!! ( HE ALWAYS WANTS A SAVIOUR FOR HIM TO HAVE THE POWER TO REDUCE HIS SORROWS AND TO SHOW HIS GRACE ON HIM) அந்த சக்தியைத் தான் துதித்தால் அது தன்னை அரவணைத்து துன்பங்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் காக்கும் என்று நம்புகிறான்!! அது இயல்பாகவே பெரும் சக்தியும் அதே நேரம் கருணை வடிவுடனும் இருக்க வேண்டுமென்று கருதுகிறான்!! அதற்குக் 'கடவுள்' என்கிற பெயரிட்டு அதை வணங்கினால் தனக்கு இறப்புக்குப் பின்னால் நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்புகிறான்!!

இவ்வாறுதான் கடவுளின் அடிப்படையை பகுத்தறிவு மற்றும் மனோதத்துவ ரீதியிலான சிந்தனைகள் சொல்கின்றன!! கடவுள் பற்றிய ஆன்மீக ரீதியிலான சிந்தனையை அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

தொடரும்
Read More

Monday, May 25, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 11 – ஹிந்து மதத்தில் இயற்கை சக்திகள் வழிபாடுகள்

ஒரு தத்வார்த்த பயணம் – 11 – ஹிந்து மதத்தில் இயற்கை சக்திகள் வழிபாடுகள்


இதர மதங்கள் போலன்றி ஹிந்து மதத்தில் இயற்கை சக்திகள் அனைத்துமே கடவுளர் நிலையில் வைத்து வணங்கப் படுகின்றன!! உண்மையில் பிரபஞ்ச சக்தி உள்ளிட்ட அனைத்து இயற்கை சக்திகள்தாம் இறை நிலையில் உருவம் தந்து வழிபாடுகள் செய்யப் படுவதாகக் கொள்ளலாம்!! அதை ஒரு புறம் வைத்து அடிப்படை இயற்கை சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்(அ) வெளி இவைகள் ஏன் நமது சனாதன தர்மத்தில் வழிபடப் படுகின்றன என்பதை சிந்தனை பூர்வ நிலையில் வைத்துப் பார்க்கலாம்!!

ஆரம்பக் கால மனிதன் ஆறரிவை உணராத நிலையில் வாழ்ந்தான்!! அவனுக்கு தான் இருக்கும் சூழலில் உள்ள மற்ற எல்லாமுமே பயத்தையே தந்தது!! அப்போது ஆயுதங்கள் எதுவும் செய்யத் தெரியாத சூழலில் காட்டில் இருந்த துஷ்ட மிருகங்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மிகவும் கஷ்டப் பட்டான்! இன்னொன்று அவன் உலகில் உள்ள பிரம்மாண்டத்தையும் தன் நிலையையும் எண்ணி வியப்படைந்தான்!!

இந்நிலையில் வாழும் பூமி என்னும் நிலம் அவனுக்கு கனிகளை, தாவரங்களை உணவாகத் தந்தது! அதேபோல நீரின் பயனும் தாகம் அடங்கும் நிலையில் அறிந்து கொண்டான்!! காற்றின்றி சுவாசிக்க இயலாது என்பதும் அவன் அறிந்த விஷயமாக இருந்தது!! முதன்முதலில் நெருப்பின் பயனை அவன் அறிந்து கொண்டது காட்டுத் தீ மூலம்தான்!! காட்டுத் தீயில் இறந்து கிடந்த மிருகங்களின் மாமிசத்தை உண்ட அவன் அதன் ருசியினால் உணவை சமைக்கும் கலையை அறிந்தான்!!இந்த இயற்கை சக்திகளால் தான் அடையும் பயன்கள் குறித்து அவன் மனதில் நன்றி உணர்ச்சி இருந்த அதே வேளையில் பய உணர்ச்சியும் இருந்தது!!

தனக்குப் பயன்களைத் தரும் இயற்கைச் சக்திகள் சீற்றமடைந்து போனால் அவை தனக்கு தரும் நாசத்தைக் கண்டே அவன் பயந்தான்!! நிலத்தில் பூகம்பமாகவும், நீர் பெருமழை வெள்ளமாகவும், காற்று கடும்புயலாகவும் நெருப்பு பெரும் காட்டுத் தீயாகவும் ஆகி கோரத்தாண்டவம் ஆடி மனித உயிர்களைப் பறித்தது கண்டு அவன் பயந்தான்!! அதனால் அவன் இந்தக் சக்திகளை சாந்த நிலையிலேயே தனக்குப் பயன்களைத் தரும் சூழலில் வைத்திருக்க எண்ணி அதனைத் தெய்வங்களாகக் கருதி அதற்கு வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தான்!!

அதையே ஹிந்து மதத்தில் நிலத்தை பூமாதேவி என்றும், நீரை வருணன் என்றும், நெருப்பை அக்னி என்றும், காற்றை வாயுபகவான் என்று பெயரிட்டு வணங்குகிறோம்!! எங்கும் நிறைந்த எல்லையில்லா வெளியான பிரபஞ்சத்தையே அறுதிக் கடவுள் நிலையில் வைத்து வணங்குகிறோம் என்றே கருதுகிறேன்!!

தொடரும்
Read More
Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 10 – ஹிந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு

ஒரு தத்வார்த்த பயணம் – 11 – பல தெய்வ வழிபாடு




பல தெய்வ வழிபாடு:

இந்த விஷயம் ஒன்றே இதர மதத்தவர்களாலும் இந்த மதத்திலேயே உள்ள பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களாலும் ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேச ஒரு காரணமாக உள்ளது!

உலகின் இதர பெருமதங்களாக உள்ள கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிலும் ஒரே கடவுள் வழிபாடு உள்ள சூழலில் ஹிந்து மதத்தில் இவ்வாறு பல கடவுளர் உள்ளது பலராலும் கேலிக்கு ஆளாக்கப் படும் விஷயமாக உள்ளது! இதனுடைய உண்மையான தாத்பர்யம் என்ன என்பதைக் காணுமுன் அவ்வாறான தெய்வங்களின் பட்டியலைப் பற்றிக் காண்போம்!

கிறிஸ்தவ மதத்தில் எசுவன்றி மாதாவை மட்டுமே வழிபாடு செய்கின்றனர்! அதே போல இஸ்லாத்தில் அல்லவன்றி நபிகள் நாயகம் மட்டுமே வணங்கப் படுகிறார்! ஆனால் ஏன் ஹிந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள்?

ஒரு சிலர் முப்பத்துமூன்று கோடிக் கடவுளர் உள்ளதாகக் கதை விடுகின்றனர்! நமது மதத்தில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் உள்ளதாகத்தான் சொல்லியிருக்கிறதே தவிர அவர்களுக்கு பெயரிட்டு வணங்குவதெல்லாம் கிடையாது! ஆனால் யாகங்களில் அனைத்து தேவர்களுக்கும் என்று கூறி ஆகுதி தரும் பழக்கம் மட்டுமே உண்டு!

இதைத் தவிர ஹிந்து மதக் கடவுளர் என்று பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் முக்கடவுளர் மற்றும் சரஸ்வதி, லக்ஷ்மி மற்றும் பார்வதி அவர்தம் மனைவியராகவும் சொல்லப் பட்டுள்ளனர். அதே போல பிரம்மனின் மகனாக நாரதரும், சிவபெருமானின் மகன்களாக பிள்ளையாரும் முருகப் பெருமானும் சொல்லப் படுகின்றனர்! அதுவன்றி மகாவிஷ்ணுவின் தங்கையாக துர்க்கையும் சக்தியின் கோர வடிவாக காளியும் சொல்லப்படுகின்றனர்! இதுவன்றி விஷ்ணுவின் தசாவதாரக் கடவுளரும் ஹனுமானும் கடவுளராக கோவில்களில் வழிபடப் படுகின்றனர்!

இன்னமும் கிராமங்களில் காவல் தெய்வங்களாக அய்யனாரும் வீரனும் அதேபோல சில கடவுளரும் வணங்கப் படுகின்றனர்!! இந்தக் கடவுளர் அனைவருமே பெரும்பாலும் மதத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களாலும் வணங்கப் படுகின்றனர்!!

பல கடவுள் வழிபாடு எப்படி வந்திருக்கும்? :

இதர மதங்களில் எல்லாம் ஒரு கடவுள் வழிபாடு இருக்க ஹிந்து மதத்தில் மட்டும் பல கடவுளர் வழிபாடு எப்படி வந்திருக்கக் கூடும்? இந்த விஷயம் பற்றிச் சிந்திக்கையில் ஒரே ஒரு சாதாரண விஷயம் மட்டுமே என் மனதில் தென்படுகிறது!!

ஹிந்து மதத்திலும் கூட அறுதிக் கடவுளாக சொல்லப் படும் 'பரப்பிரம்மம்' என்பது ஒரே கடவுள்தான்!! மும்மூர்த்திகள் உள்ளிட்ட இதரக் கடவுளர் அனைவருமே பரப்ப்ரம்மத்தின் விரிவாகத்தான் சொல்லப் படுகின்றனர்!! ஆனால் பரப்பிரம்ம வழிபாடு என்பது நமது மத மக்களுக்கு பெருமளவில் எற்றதாக் இல்லை! இதன் முக்கியக் காரணம் பரப்ரம்மம் என்பது உண்மையில் உருவமற்ற, குணங்களற்ற பிரபஞ்சமுழுதும் விளங்கி நிற்கும் சக்தியே ஆகும்! ஆனால் பரப்ரம்மமே கூட நீங்கள் எல்லாரும் எந்தெந்த வடிவில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கினாலும் அது என்னையே வணங்கியதாகும் என்றும் சொல்லும் கருத்தும் ஹிந்து மதத்தில் உள்ளது!! பரப்ரம்ம வழிபாடு என்பது பொதுக்கருத்தாகப் பார்த்தால் மன முதிர்ச்சியடைந்த நிலையில் ஞானம் முதிர்ந்த நிலையிலேயே விரும்பப் படும் என்று கருதுகின்றேன்!

இதன் காரணமாகவே நம் மக்கள் பல கடவுள் வழிபாடுகளை மேற்கொண்டனர்! இன்னமும் பொருத்தமான விஷயம் ஒன்றும் உள்ளது! ஆரம்பக் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட ஒரு குடும்பத்து மக்கள் ஒரே ஊரிலேயே இருந்து ஒரே தொழிலைக் குடும்பமாக மேற்கொண்டனர்! அவர்களெல்லோரும் ஒரே வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக இருந்தனர்! இன்று போலன்றி அந்தக் காலங்களில் ஒரே ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர் வெவ்வேறு வீடுகளில் வசிப்பது கவுரவக் குறைச்சலாகவே கருதப் பட்டது! இது அந்தக் காலத்து அரண்மனை போன்ற வீடமைப்பைப் பார்த்தாலே தெரியும்! ஒரு வீடு என்றால் அங்குள்ள குழந்தைக்கு முப்பாட்டன், பாட்டன்மார்கள், தகப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மற்றும் அவர்தம் உறவினர்கள், மாமன்கள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் கொண்ட பெரும் கும்பலாக அந்தக் காலங்களில் இருந்தது! இதையே அந்தக் கால பாரத மக்கள் விரும்பவும் செய்தனர்!

அதே அடிப்படையில்தான் கடவுளருக்கும் தனித்தனி குணங்கள், பொறுப்புக்கள் தந்து படைத்தல், காத்தல், அழித்தலுக்கு மும்மூர்த்திகள் மற்றும் செல்வத்துக்கு, கல்விக்கு, சக்திக்கு பெண் கடவுளரான லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் சக்தி யையும் , ஞானத்துக்கு பிள்ளையாரையும், வீரத்துக்கு முருகப் பெருமானையும் இன்னமும் அதேபோல பலப் பல கடவுளரையும் உண்டாக்கி அவர்களுக்குள் உறவுமுறையும் வைத்து வணங்கும் பழக்கத்தை மேற்கொண்டனர் என்றுதான் கருத இடமுள்ளது!! இந்த பல கடவுளர் வழிபாட்டிற்கு இயற்கை சக்திகளுடன் உள்ள தொடர்பை இன்னொரு பதிவில் சொல்கிறேன்!!

தொடரும்
Read More

Saturday, May 23, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 9 – ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’

ஒரு தத்வார்த்த பயணம் – 9 – ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’

ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’



ஹிந்து மதமே ஒரு காமசாஸ்திரமாக வேற்று மதத்தவர்களாலும், போலிப் பகுத்தறிவாளர்களாலும் வர்ணிக்கப்படுகிறது! இது உண்மையா என்பது பற்றிக் காண்போம்!!

         ஹிந்து ஆலய கோபுரங்களில் காமசாஸ்திரத்தை எடுத்துச் சொல்லும் சிலைகள் உள்ளனவே?? சரி ஏன் அவை உள்ளன?? கோவிலுக்குள் செல்லும் முன்னால் ஒருவன் கோபுரத்துக்குள் நுழையும் முன்பே அந்தக் காம உணர்வையெல்லாம் துடைத்து விட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதையே அது மறைமுகமாக வலியுறுத்துகிறது!!

       மாற்றபடி புராணக்கதைகள் எல்லாமே காமம் கலந்து உள்ளதாக பொய்யாக வர்ணிக்கப்படுகிறது!! பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ ஆரம்பிக்கும் பொழுதிலிருந்தே ஹிந்து மதத்தில் காமம் என்பது இருபாலருக்கும் உள்ள ஒரு அணுக்க உணர்வாகவே சொல்லப்படுகிறது!! அதே போல காமம் என்பது அக்காலங்களில் வாரிசு உருவாக்க என்கிற நோக்கத்துக்கு மட்டுமே பயன்பட்டது!! 

  இப்போது இது சம்பந்தப்பட்ட ஒரு கதையை சொல்கிறேன்!! பிரளயம் முடிந்து பிரபஞ்சம் இயங்க ஆரம்பித்த நேரம்!! பரப்ரம்மம் பல்வேறு கோள்களையும், பிரஜாபதிகளையும் உருவாக்கி முடித்திருந்தார்!! அந்நிலையில் பூமியில் உயிரினம் உருவாக வேண்டிய சூழல் வந்ததை உணர்ந்த அவர் பிரம்மனிடம் சொல்லவும் பிரம்மப் பிரஜாபதி முதலில் மனு என்கிற ஆணையும் பின்னர் சத்ரூபா என்னும் பெண்ணையும் படைத்தார்!! அவர் எதிரில் இருவரும்அவரை வணங்கி  நின்றிருந்தனர்!! அவர்களுக்கு தாங்கள் யார் ஏன் இங்கே நிற்கிறோம் என்பதெல்லாம் புரியவேயில்லை!! அப்போது பிரம்மா கூறினார் :

      மனு, சத்ரூபா உங்கள் இருவரையும் நான் இப்போது ஒரு முக்கிய செயலின் பொருட்டுப் படைத்திருக்கிறேன்!! அதை நான் இப்போது விவரிக்கிறேன் நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்!! இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பூமி என்கிற கிரகத்தில் உயிரினங்களைப் பெருக்கும் முகமாகவே நான் உங்களைப் படைத்தேன்!! மனு நீ ஆணினம் எனப்படுவாய்!! சத்ரூபா பெண்ணினம் எனப்படுவாள்!! உங்கள் இருவரையும் இப்போது பூமிக்கு அனுப்பி வைப்பேன்!! அங்கு நீங்கள் ஒரு ஆற்றிலிருந்து எழுவீர்கள்!! எழுந்த பின்னால் உங்கள் இருவருக்கும் காமம் என்னும் பரஸ்பர ஈர்ப்பு சக்தி உண்டாகும்!! அதன் மூலம் நீங்கள் இணைவீர்கள்!! சந்தோஷமும் அடைவீர்கள்!! அந்த நிகழ்வின் மூலம் இன்னொன்றும் நடக்கும்!! உங்கள் வாரிசாக உங்களை விட சிறிய அளவுள்ள குழந்தை சத்ரூபாவின் வயிற்றில் கருவாக உதிக்கும். அது பத்து மாதங்கள் அவள் வயிற்றிலேயே வளர்ந்து பின்னால் வெளியில் வரும்!! அது உங்கள் வம்சத்தை வளர்க்க ஆரம்பிக்கும்!! அதன் மூலம் நீங்கள் பல குழந்தைகளைப் பெற்று பூமியில் மக்கள் பெருக்கத்தை உருவாக்க வேண்டும்!! நீங்கள் இருவரும் பெறப் போகும் காமம் என்கிற உணர்வு சந்தோஷம் அளிப்பதாக இருந்தாலும் கூட அதை அதிகமாக அனுபவிக்காமல் வாரிசுகளைப் பெரும் முகமாகவே அளவுடன் பயன்படுத்தி இருவரும் இணைந்து அன்புடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்!! இப்படி சொன்ன பிரம்மாவின் காலில் மனுவும் சத்ரூபாவும் விழுந்து வணங்கினர்!! பின்னர் அவர்கள் விழித்துப் பார்த்த போது ஒரு ஆற்றில் இருந்து எழுந்தனர்!! பிரம்மா சொன்ன விஷயங்களை மேற்கொண்டு அவர்கள் உலகத்தில் மக்கள் பெருக்கத்தை உண்டாக்கினர்!!
 
இப்போது சொல்லுங்கள் ஹிந்து மதம் காம மதமா?
 
தொடரும்
 
Read More
Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 8 – தசாவதாதசாவதாரமும் டார்வினும்

ஒரு தத்வார்த்த பயணம் – 8 – தசாவதாதசாவதாரமும் டார்வினும்

நம்முடைய இந்து மதம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அறிவியலாகத்தான் உள்ளது. அறிவியலில் செய்திகள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. ஆன்மீகத்தில் அது மறைமுகமாகச் சொல்லப் படுகிறது. அவ்வளவே. உதாரணத்துக்கு வாசலில் சாணம் தெளிப்பது. சாணம் என்பது ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே. ஆக சாணம் தெளிப்பது என்பதை ஒரு தற்காப்பு மருத்துவ அறிவியலாகதான் உள்ளது. ஆனால் எப்போதும் மக்கள் நல்ல விஷயங்களை நேரடியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். '' ஆமாம் வந்துட்டாரு மருத்துவம் போதிக்க?'' என்று சொல்வான். 



 

இப்போதே பாருங்கள் சாணம் கிருமிநாசினி என்று நிரூபிக்கப் பட்டவுடன் யாராவது நகரங்களில் சாணம் தெளிக்கிறார்களா என்று? இதனால்தான் அதை சாணம் தெளித்தால் வீட்டுக்குள் மகாலட்சுமி வருவாள் என்று மறைமுகமாகச் சொன்னார்கள். அதுவும் கூட ஒருவகையில் உண்மைதான். சாணம் தெளித்த வீட்டில் வியாதிகள் வராது. அப்போது மருத்துவச் செலவே இல்லாது போக நிறையப் பணம் இருக்கும். இதுதான் நம் மத சடங்குகளின் அறிவியல் தன்மை. நாமெல்லாம் பிரபல உயிரியல் விஞ்ஞானி CHARLES DARWIN பற்றி அறிந்திருப்போம்.

உலகிலே உயிர்கள் தோன்றியது எப்படி, அவை எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்தன அதிலிருந்து எப்படி மனித இனம் உண்டானது என்றெல்லாம் கண்டறிந்து '' THE EVOLUTION THEORY '' என்றதொரு சிறந்த கோட்பாட்டை உருவாக்கினார். இந்து மதத்தில் கூட மனிதப் பிறவிக்கு முன்னால் ஈறாக, பேனாக, பன்றியாக இப்படியெல்லாம் பிறவிகள் எடுக்க வேண்டும் என்றுள்ளது. ஆனால் இந்த டார்வின் தியரி சொல்லும் அந்த விஷயம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இந்து மதத்தில் தசாவதாரம் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது இது உண்மை.

இப்போது பாருங்கள் டார்வின் கொள்கைப்படி முதலில் தோன்றிய இனம் தண்ணீரில் தோன்றியது (HYDRA). அதுவே இந்து மதத்தில் மச்சாவதாரம் என்னும் மீனின் அவதாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. அடுத்து டார்வின் சொல்வது நீரிலும் தரையிலும் வாழும் இனம் (AMPHIBIA). இதுவே தரையிலும் நீரிலும் வாழும் ஆமை உருக்கொண்ட கூர்மாவதாரமாக உள்ளது. அடுத்து தரையில் மட்டும் வாழும் இனம் . இதுவே வராஹ அவதாரம் என்று பன்றியைக் குறிக்கிறது. அடுத்து மிருக குணம் கொஞ்சம் மிருக உருவும் கொண்ட மனிதன் இதுவே நரசிம்ஹ அவதாரமாக உள்ளது.

அப்புறம் மனிதன் சிறிய உருவினனாக வருவது வாமன அவதாரமாகவும் வருகிறது. அடுத்து பெரிய உடலுடன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தாத, வேட்டையாடும் குணமுடைய கோபமுடைய மனிதனாக பரசுராம அவதாரம் உள்ளது. அதையடுத்து நல்ல உடல் பலமும் நற்பண்புகளும் கல்வியும் வீரமும் செறிந்த ராம அவதாரம் வருகிறது. அதன் பின் உடல் பராக்கிரமம் அதிகரித்து சாதனைகள் நிகழ்த்தி மல்யுத்தம் உள்ளிட்ட போர் முறைகளில் நிபுணராக இருந்த பலராம அவதாரம். அடுத்து மனிதன் தன் நற்பண்புகளாலும், குணங்களாலும் அரசனாகி புகழுடன் ஆட்சி செய்து அரசியல் தந்திரங்களில் நிபுணனாகி தெய்வமாக வணங்கப் படும் நிலைக்கு உயர்வதென்பது கிருஷ்ண அவதாரமாக உள்ளது.

அப்புறம் உலகம் விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சத்துக்குப் போய் அழிவு ஆயுதங்கள் பலவற்றையும் செய்து தங்களுக்குள் மக்கள் போரிட்டு அழிவை நோக்கியே அனைவரும் போக வைக்கக் கூடிய கல்கி அவதாரம் வருகிறது. இப்போது சிந்தியுங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்கள் மிருகங்களின் வெவ்வேறு நிலைகளையும் இதர அவதாரங்கள் மனித வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளையும் சித்தரிக்கின்றன என்பது புரிகிறதா? இதனால்தான் தசாவதாரம்தான் டார்வின் கொள்கைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.

தொடரும்
 
Read More