Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Wednesday, September 14, 2016

Keerthivasan

அவுரங்கசீப் எழுதிய உயில்

 

போரில் சூழ்ச்சியாலும் பல ஆயிரம் முகலாயர்கள் சேர்ந்து வெறும் 40 சீக்கியர்களை தாக்கிய போரில் வெற்றி பெற்றார் அவுரங்கசீப். அதன் பின்னர் குரு கோபிந்த சிங்கும் தப்பிக்க வேண்டிய நிலைமை. கடிதத்துக்கு ஒரு பெயர் உள்ளது. ஜாபர்னாமா. போர் பற்றிய விவரங்களை தவிர்க்கிறேன். இந்த கடிதம் அவுரங்கஜீபை அடைந்ததும், இதை படித்த பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமானது. பெரும் துன்பம் செய்தேன் என்றார். கடிதத்தில் இருந்த ஆன்மிக பொருள், வீர வாக்கியங்கள் அவரை தாக்கின. தான் பாராளும் வேந்தனல்ல என்று உணர்ந்தார். சில நாட்களில் உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து இறந்தார்.

நமக்கெல்லாம் அவுரங்கசீப் ஒரு தாலிபானாக, அன்று இருந்த ஒரு ISIS காரனாகத்தான் தெரியும். ஒரு நேர்மையான கடிதத்தை பார்த்த பின்னர், வெறும் கடிதம் மூலமாக வெளிப்படையாக உண்மை ஒரு மனிதரை சந்தித்த பின்னர் அவருக்கு நடந்த ஒரே மாற்றம் மரணம். அதற்கு முன்னர் அவர் தன் வாழ்க்கையி வெறுத்தார். நிலை கொள்ளவில்லை. உயில் எழுதினார். இதை ஹிந்துக்கள் படிக்கவேண்டும். உங்கள் முஸ்லீம் நண்பர்களிடம் பகிர்ந்து படிக்க சொல்லவேண்டும். குரானின் வழிகாட்டுதல் படி வாழ்ந்த ஒரு மனிதன் கடைசியில் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எப்படி தவித்தான் என்று மக்கள் உணரட்டும்.

எனக்கு நான் யார் என்று தெரியவில்லை. எங்கிருக்கிறேன், எங்கு செல்லவேண்டும், என்னை போன்ற ஒரு பாவிக்கு என்ன நேரும் என்று தெரியவில்லை. என்னை போல வந்து சென்றுவிட்டார்கள். அல்லா என் மனதில் இருந்தார். நான்தான் அவரை உணராமல் போய்விட்டேன். அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் நான் எப்படி வரவேற்கப்படுவேன் என்று தெரியவில்லை. எனக்கு நல்ல எதிர்காலம் சொர்க்கத்தில் அமையும் என்று நம்பவில்லை. நிறைய பாவங்களை செய்துள்ளேன். என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியவில்லை.

நான் இந்த பாரதத்தை ஆண்டேன் என்பதில் ஐயமில்லை. இந்த காலத்தில் என்னால் ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை. என்னுடைய ஆத்மா என்னை சபிக்கிறது. இப்போது வருந்தி என்ன பயன்? என்னுடைய கடைசி காரியத்தை என் மகன் ராஜம் செய்யட்டும். வேறு யாரும் என்னுடலை தீண்ட வேண்டாம்.

குரான் எழுதி, தொப்பி செய்து விற்ற பணம் உள்ளது. அதிலே எனக்கு சவப்பெட்டி வாங்குங்கள். என் பிணத்தை மூட வேண்டாம்.

குரான் விற்ற பணம் ஆயா பேஜிடம் உள்ளது. அதில் ஏழை முஸ்லிம்களுக்கு உணவளியுங்கள்.

என்னுடைய பொருட்களை என் மகனிடம் தந்துவிடுங்கள். அடர்ந்த காட்டில், முகம் ஆகாயத்தை பார்த்தபடி என் பிணத்தை புதையுங்கள். சொர்கத்துக்கு முகம் காட்டி போனவனது பாவம் மன்னிக்கப்படும் என்று படித்திருக்கிறேன்.

தடிமனான மரத்தால் என் சவப்பெட்டியை செய்யுங்கள். விலை உயர்ந்த பொருட்களை அதில் வைக்காதீர்கள். பாதையில் பூக்களை தூவாதீர்கள். என் கல்லறையின் மீது பூக்கள் வைக்கப்படக்கூடாது. இசை கூடாது. நான் அதை வெறுக்கிறேன்.

எந்த ஒரு கட்டிடமும், நினைவுச்சின்னமும் எழுப்பப்படக்கூடாது. வெறுமனே ஒரு மேடையை அமைத்துக்கொள்ளுங்கள்.

என் படை வீரர்களுக்கும், வேலையாட்களுக்கும் சம்பளம் தரவில்லை. கஜானா காலி என்பதை அறிவேன். குறைந்தது என் வேலையாட்களுக்காவது சம்பளத்தை தாருங்கள். நியமட் அலி எனக்காக உண்மையாக உழைத்துள்ளான். என்னையும் கட்டிலையும் தூய்மையாக பார்த்துக்கொண்டான்.

என் நினைவாக மசூதி கூடாது, கல் பதாகை கூடாது. மரங்கள் கூடாது. என் பிணம் மாற நிழலுக்கு அருகதை அற்றது.

என் மகன் ஆஜாம், டில்லியை ஆளட்டும். கம் பக்ஷ் பீஜப்பூர் கோல்கொண்டாவை ஆளட்டும்.

அல்லாஹ் யாரையும் மன்னனாக்க கூடாது. அப்படி ஆகிறவன் துர்பாக்கியசாலி. என் பாவங்களை எந்த கூட்டத்திலும் படிக்காதீர்கள். என் வாழ்க்கை பாடத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்.

(அவுரங்கசிபின் விருப்பப்படி அவரது கல்லறை செங்கலால் கட்டப்பட்டது. மற்ற ஆசைகளை காற்றில் விட்டுவிட்டார்கள். அங்கு ஒரு மசூதி கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. தொழுகை நடக்கிறது. பாங்கு ஓதுகிறார்கள். வெளியே நின்று பார்க்க முடிகிற இடம் வரை போய் வந்தேன். உள்ளே போகவில்லை, தீட்டு என்பதால்.)

ஒரு பயங்கரவாதியை மன்னனானால் என்ன ஆகும் என்பதை இந்த நாடு அவுரங்கசீப் மூலம் பார்த்துவிட்டது. ஆனால், அப்படிப்பட்ட ஆள், ஒரு சத்தியம் நிறைந்த கடிதத்தை பார்த்து, மனம் வெறுத்து, தன்னையே வெறுத்து, தான் ஒரு மனிதனே அல்ல என்று கூறும் அளவுக்கு என்னென்ன பாவங்கள் செய்திருந்தால், அவை அத்தனையும் நினைவுக்கு வந்து இறக்கும் தருவாயில், அச்சத்தில் நடுங்கி, மனப்பிராந்தியால் கண்ட காட்சிகளெல்லாம் ஓட, வாய்விட்டு அலறி, துடித்து, இருக்கிற உள்ளுறுப்புகள் பழுதாகி இறந்திருப்பான்?

என்னமோ, அப்படியே இருந்துவிடப்போகிறோம் என்று ஆட்டம் போட்ட பலரை பார்த்துவிட்டோம். பல நாடுகளையும் பார்க்கிறோம். கண் முன்னே சிதைந்த சாம்ராஜ்ஜியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட நாடுகள் என்று பல. எத்தனை பேரை முஸ்லிமாக்கினேன் கிருஸ்தவனாக்கினேன் என்பதெல்லாம் கணக்கே அல்ல. ஸ்வாமி விவேகானந்தர் சொன்னது போல சுயநலமில்லாதது நன்மை. சுயநலமிகுந்தது தீமை. இந்த நோக்கில் அணுகினால் அனைத்தும் தீரும்.

Anand Venkat
Read More

Tuesday, July 26, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 28




முகம்மது கஜ்னியின் வருடாந்திர ஜிகாதிய தாக்குதலினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது வடமேற்கு பாரதம். அவனின் கொடூர தாக்குதலினால் பல்வேறு இந்து சமூகங்கள் நிலைக் குலைந்தன. சிந்து பகுதியை சேர்ந்த "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் கட்டாய மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர். ஆனால் முஹம்மது கஜ்னியின் அழிவு பயனம் அதோடு நிற்பதாக தெரியவில்லை. அவனின் அடுத்த இலக்காக ரிக் வேதத்தில் குறிப்பிடப் பட்டதும், 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்றானதுமாக சோமநாதர் ஆலயம் இருந்தது.

குஜராத்தின் சௌராஷ்டிர பகுதியில் இருந்த சோமநாதர் ஆலயம் மிக அற்புதமானதாகவும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் புராண காலத்தை சேர்ந்ததாகவும் இருந்த‌து. மிகப்பெரும் கோவிலாக திகழ்ந்த அதன் வளாகத்தில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது.

பொது ஆண்டு 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான "கோக்னா ரானா"வும் அடக்கம். முஹம்மது கஜ்னி சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை தன் கைகளாலேயே உடைத்து அதன் துண்டுகளை தன் கஜ்னி நகரில் இருந்த ஜாமியா மசூதியின் படிகட்டுகளிலும், தன் தர்பாரிலும் நடை பாதைகளில் பதிக்க செய்தான். மீதி இருந்த துண்டுகளை மெக்காவிற்கும் மெதினாவிற்கும் அனுப்பி அங்கு நடை பாதைகளில் பதிந்திட செய்தான்.. அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.

"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அவன் அழிப்பதனால், பல ஹிந்துக்கள் நம்பிக்கை தளர்ந்திடுவார்கள், அவர்களை முஹம்மதியர்களாய் எளிதாக மாற்றி விடலாம் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே தன் கைப்பட அழித்தான்"
Read More
Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 27


வட மற்றும் மேற்கு பாரதத்தில் ஒரு பேரரசு இல்லாத நிலை முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. காஃபிர்களின் நாடான பாரதத்தின் மீது ஒவ்வொரு வருடமும் "ஜிகாத்" தொடுப்பேன் என்கிற அவனின் சபதத்திற்கு சாதகமான சூழ்நிலையே அப்போது இருந்தது

குதிரைகளில் மிக வேகமாக சென்று ஒரு இடத்தை தாக்குவது, கொளையடிப்பது, தீயிட்டு கொளுத்தியவாறு அவ்விடத்தை விட்டு அகலுவது என்பதே அவனின் யுக்தியாக இருந்தது.. இவ்வாறு மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கினான் கஜினி முகம்மது. "பஞ்சாப், நாகர்கோட், தனேசர், கனௌஜ், க்வாலியர் மற்றும் உஜ்ஜயின்" ஆகியவற்றை தாக்கி அழித்த‌ முகம்மது கஜினி, பஞ்சாபை மட்டும் தன்னோடு இனைத்துக் கொண்டு மற்றவ‌ற்றை தன்னுடைய ஆளுமையின் கீழ் வைப்பதற்கு சில அடிமை இந்து/பௌத்த சேனைகளிடம் ஒப்படைத்தான். இதன் மூலம் இந்துக்கள் இடையே பிரிவையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி இருந்தான். அவனின் படையில் சேர்வதே தங்களுக்கு பாதுகாப்பு என சில‌ உள்நாட்டு மக்கள் உணரத் தொடங்கினர். இதனால் முகம்மது கஜினியின் படை மேலும் பலம் பெற்றது.

டிசம்பர் 1018 AD ஆம் ஆண்டு அவன் படை யமுனை நதியை கடந்து "புலந்தஷாஹர்" (Bulandshahar) எனும் இடத்தை அடைந்தது. கிட்டத்தட்ட "பத்து லட்சம் திர்ஹாம்களை" அவ்விடத்தில் வசூல் செய்தான் முகம்மது. அதன் பின் மதுராவில் உள்ள "மஹாபன்" எனும் இடத்தை அடைந்து தாக்குதலை மேற்கொண்டான்.
முகம்மது கஜ்னியின் செயலாளராக இருந்த "உத்பி" (Utbi) என்பவர் இதை குறித்து விரிவாக குறிப்பிடுகிறார். "காஃபிர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோட்டைகளை துறந்து விட்டு நதிகளை நோக்கி ஓடினார்கள். ஆனால் பலர் பிடிக்கப்பட்டார்கள். பலர் தப்பிக்க முயன்று முழ்கினார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதன் பின் சுல்தான் மதுராவில் உள்ள கோவில்களை (கிருஷ்ணர் பிறந்த‌ கோவில் உட்பட) நெருங்கினான். அவன் அங்கிருந்த ஐந்து ( 89,300 மிசல் எடையுள்ள) தங்க சிலைகளையும், 200 வெள்ளி சிலைகளையும் பெயர்த்து எடுக்க ஆனையிட்டான், வைரங்களும், வைடூரியங்களும் கைப்பற்றப் பட்டன. அதன் பின் சுல்தான், நாப்தா (naphthala) போன்ற எரிபொருள்களை பயன்படுத்தி கோவில்களை அடியோடு எரியூட்டி அழித்தான். இந்த சூரையாடல் கிட்டத்தட்ட 20 நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதன் பின் சுல்தான் "கனௌஜை" நோக்கி படையை திருப்பினான். கனௌஜில் 10000 கோவில்கள் இருந்தன. ஊமையாகவும் செவிடாகவும் இருந்த அந்த சிலைகளை கண்டு செய்வதறியாத‌ மக்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுல்தான் கோவில்களை சூரையாடவும், தப்பி ஓடியவர்களை அடிமையாக்கி சிறை பிடிக்கவும் ஆனையிட்டான்.

அடுத்து அவன் முஞ்ச் (Munj) பகுதியை தாக்கினான். அங்கிருந்த பிராமனர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை சண்டையிட்டார்கள். வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் முகம்மது கஜ்னியிடம் சிக்கி விடக் கூடாது என்று தங்கள் குழந்தைகளையும், மனைவிகளையும் தீயில் ஏற்றி தாங்களும் மடிந்தார்கள். அசி (Asi) எனும் நாட்டு அரசனும் முகம்மதை கண்டு தப்பி ஓடினான். சுல்தான் அவரின் ஐந்து கோட்டைகளையும் அடியோடு தரைமட்டமாக்க உத்தரவிட்டான். அதில் இருந்த பலர் உயிரோடு புதைக்கப்பட்டனர். பல வீரர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டனர்.
அதன் பின் ஷ்ரவா (Shrawa) எனும் நகரத்திற்கும் அதே விதி ஏற்பட்டது. கொளையடிக்கப்பட்ட பொருட்கள் கிட்டத்தட்ட நூறு ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. கிட்டத்தட்ட மதுராவில் மட்டும் ஐயாயிரம் பேர் அடிமைகளாக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டனர்.

இது போலவே "அல்பெருனி" (Alberuni) எனும் முகமதோடு சென்ற சரித்திர ஆய்வாள‌ர், இதை குறித்து தெளிவாக விவரிக்கிறார். "வட மேற்கு இந்தியாவை முகம்மது கஜ்னி தாக்கியதும் அவ்விடங்களை பஞ்சத்தை ஏற்படுத்தினான். இதன் மூலம் சிதறி ஓடிய இந்துக்களின் நாகரீகம் அழிந்தொழிந்தது. இதனால் தான் இந்துக்களின் அறிவியல் காணாமல் போய் எங்கள் கைகளுக்கு அப்போது எட்டாத "காஷ்மீர்" மற்றும் "பெனாரஸ்" போன்ற பகுதிகளுக்கு சென்றடைந்தது. இறந்து சடலங்களாக கிடந்த இந்துக்களின் சடலங்களை கூட ஆபரண அணிகல‌ன்களுக்காக விடாமல் தேடியது முஸ்லீம் படை. அல்லாவின் நண்பர்கள் நெருப்பையும், சூரியனையும் வழிபடும் இந்துக்களின் பினங்களை மூன்று நாட்கள் தேடி தேடி சலித்தெடுத்தார்கள். தங்கம், வெள்ளி, முத்துக்கள், வைரங்கள் என கிடைத்தவை எல்லாம் எடுத்தார்கள். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட "3 லட்சம்" திர்ஹாம்களாக இருந்தது. பிடிப்பட்ட இந்து அடிமைகள் 2 முதல் 10 திர்ஹாமிற்கு விற்கப்பட்டார்கள். இவை அனைத்தும் கஜ்னி நகரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. தொலை தூர நகரங்களில் பல வியாபாரிகள் கஜினிக்கு இதை வாங்குவதற்கு வந்தார்கள். "மவரௌன்", (Mawaraun-Nahr) "ஈராக்", "குரசான்" போன்ற நாடுகளை செர்ந்த வியாபாரிகள் இதை பெரிதும் வாங்கி சென்றார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தன. பிடிபட்ட இந்திய அடிமைகள் பல சந்தைகளில் விற்கப்பட்டனர்"

அடுத்து சோமநாதர் கோவிலின் மீது முகம்மது கஜ்னியின் பார்வை திரும்பியது.
 

Englightened Master
Read More
Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 26

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 26



இத்தருனத்தில் முகம்மது கஜ்னியால் எப்படி 18 முறை பாரதத்தை நோக்கி படையெடுத்து வர முடிந்தது என்பதை பார்க்க வேண்டும். 18 முறை அவன் படையெடுத்து வரும் வரை இந்து அரசர்கள் சகித்துக் கொண்டு இருந்தார்களா ? என்றும் சிலர் கேட்பதுண்டு.

முகம்மது கஜ்னி உட்பட முஸ்லீம் படையினர், திடீர் தாக்குதல்களை புரிபவர்களாக இருந்தார்கள். ஒரு ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு, அங்குள்ள மக்களை அடிமைகளாக பிடித்து சென்று விடுவார்கள். முஸ்லீம் படைகளை சேர்ந்த கலீஃபைட் ஆகட்டும், சுல்தான் ஆகட்டும், அமீர் ஆகட்டும், படையின் முன்நின்று போர் புரிபவர்களாக அவர்கள் இல்லை. பாரதத்தில் அவர்கள் இந்துக்களோடு போரிடுகையில் இந்துக்களின் தர்ம நெறிகளை நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் அவர்கள் அரசர்களைதான் குறி வைத்து தாக்குதல் நடத்துவார்கள். அரசன் வீழ்த்தப்பட்டால் அப்படை சரண் அடையும். தோல்வி அடையும் படை வீரர்களை பெரும்பாலும் தங்கள் படையில் அடிமைகளாக்கி சேர்த்துக் கொள்வார்கள். வேறு ஒரு அரசனை தாக்க செல்லும் போது, பிடிபட்ட வீரர்களை படையின் முன் வரிசையில் பகடைகளாக அனுப்புவார்கள். முன்னே செல்லும் பகடை வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் பலியாவார்கள். இதனால் எதிரி படைக்கும் பலத்த சேதம் ஏற்படும். எதிரி பலவீனமாகும் வேளையில் பின்னால் வரும் முஸ்லீம் படை வீரர்கள் எதிரியை கடுமையாக தாக்கி வெற்றிக் கொள்வார்கள்.

மற்றொரு பக்கத்தில் இந்திய அரசர்கள் போர்களில் முன்நின்று போரிடுவார்கள். அதுவே அவர்களுக்கு சத்திரிய லட்சனமாக இருந்தது. சதுரங்கத்தில் நடப்பது போல், பெரும்படையுடன் போருக்கு செல்லும் ஒரு அரசன் போரில் கொல்லப்பட்டால் அந்த போர் முடிவுக்கு வந்துவிடும். அரசன் என்பவன் ஒரு நாட்டின் ஆதார புருஷனாக கருதப்படுவதால் அரசன் இறந்த பிறகு அவனின் படை வீரர்கள் பெரும்பாலும் போரை தொடர்வது வழக்கமில்லை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த‌து போல் இந்துக்களின் போர் முறைகள் தர்ம நெறிகளை பின்பற்றுபவை. சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் மட்டுமே போர்கள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத சமவெளிகளிலேயே பெரும்பாலான போர்கள் நடைபெற்றன. மேலும் போர் என்பது திடீர் தாக்குதல்களாக இல்லாமல், மறைந்து தாக்கும் யுக்திகளாக இல்லாமல் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு இரு படைகள் மோதும் நிகழ்வுகளாகவே இருக்கும். இப்படிப்பட்ட எல்லா நியதிகளையும் தவிடு பொடியாக்கின‌ முஸ்லீம் படைகளின் நாகரீகமற்ற போர் யுக்திகள்.

உண்மையில் முகம்மது கஜ்னி படையெடுத்து வந்தான் என்று சொல்வதே தவறு என்பதே பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. முகம்மது கஜ்னியின் தாக்குதல்கள் பெரும்பாலும் ஒரு பிரதேசத்தை கொள்ளையடிக்க வரும் ஒரு கொளைக்காரனை ஒத்து இருந்ததே தவிர அது ஒரு முழுமையான போராக கொள்ள முடியாது.

மேலும் 11ம் நூற்றாண்டில் பாரதத்தின் வடக்கு பிரதேசம் பேரரசுகள் எதுவும் இல்லாமல் பல‌ சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. மாமன்ன‌ன் ராஜ ராஜ சோழன் மற்றும் அவர் மகன் ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் அரசர்கள் தங்கள் கவனத்தை பாரதத்தின் தெற்கேயும், தென்கிழக்கிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொண்டிருந்தனர். பாரதத்தின் வடக்கே இருந்த குர்ஜர், ராஷ்ட்ரகூடர்கள், மற்றும் முஸ்லீம் கலீஃபைட்டின் விஸ்தரிப்பை தடுத்து நிறுத்திய "ப்ரதிஹாரா" எனும் பேரரசர்களும் மிகவும் பலம் இழந்து சிற்றரசர்களாக இருந்தார்கள். ராஜ்புட் பேரரசு உடைந்து போய் "சமந்தர்கள்" (Samanthas) எனும் பெயரில் சிற்றரசர்களாக சிதறிக் கிடந்தது. இது முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது..


Englightened Master

Read More
Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 25

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 25

முகம்மது கஜினி பாரதத்தை வருடம் தோறும் தாக்க சபதம் எடுத்துக் கொண்டதற்கு மிக முக்கியமாக சொல்லப்படுவது அவனின் ரத்தத்தில் ஊறி இருந்த மதவெறியே !! முகம்மது நபி அவர்கள் எப்படி முஸ்லீம் படையின் தொடக்கத்தில் அரேபியாவில் இருந்த பாகன் நம்பிக்கையாளர்களின் கோவில்களை தேடி தேடி தாக்கி அழித்தாரோ அவ்வாறே பாரதத்தில் உள்ள இந்து காஃபிர்களின் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோவில்களை அழிக்க வேண்டும் என்பது ஒரு மதரீதியான உந்துதலாக அவனுக்கு இருந்தது. மேலும் காந்தாரம் போன்ற (இன்றைய ஆப்கானிஸ்தான்) விவசாயம் இல்லாத வற‌ண்ட மலைகள் நிறைந்த நிலப்பரப்பை கொண்டிருந்த அவனுக்கு செல்வ செழிப்பான பாரதத்தின் பகுதிகள் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்த செல்வ வளங்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தீராத வேட்கையாக அவனிடம் இருந்தது.

பொது ஆண்டு நவம்பர் 28, 1001 தன்னுடைய முதல் தாக்குதலை முகம்மது தொடங்கினான். இன்றைய பாகிஸ்தானில் பெஷாவரில் நடந்த‌ போரில், ஷாஹி வம்சத்தின் ஜெயபாலரோடு நடந்த யுத்தத்தில் முகம்மது கஜ்னி அவரை தோற்கடித்தான். தோல்வியை தாங்க இயலாமல் தன்னை தானே நெருப்பு மூட்டிக் கொண்டு ஜெயபாலர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயபாலரின் பல பகுதிகளை கைப்பற்றினான் முகம்மது. அதன் பின் அவன் கிழக்கே ஒவ்வொரு வருடமும் பாரதத்தை நோக்கி தன் சக்தி வாயந்த குதிரை படையை செலுத்தினான்.

பொது ஆண்டு 1006ல் அவன் மூலஸ்தானத்தை (முல்தான்) பிடித்தான். ஜெயபாலரின் மகனான ஆனந்த பாலாவை அவன் இடைஇடையே எதிர்கொண்டு போரிட்டான். பொது ஆண்டு 1008ம் ஆண்டு எட்டாவது முறையாக பாரதத்தை நோக்கி வந்த முகம்மது கஜ்னியை ஆனந்தபாலா பெரும் படையோடு தடுத்து நிறுத்தினார். தன் தந்தையின் தோல்வி மற்றும் மரணத்திற்கு பழி வாங்க அவர் மிகப்பெரும் படையை திரட்டி இருந்தார். அவரின் படை வெற்றி பெற்றுவிடும் என்கிற நிலையில் ஆனந்தபாலரின் துரதிஷ்டமோ என்னவோ, அவரின் மிகப்பெரிய படையின் முன்னே சென்றுக் கொண்டிருந்த யானை திடீரென மதம் பிடித்து பின் வாங்கி, தன் சொந்த படைகளையே மிதித்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. இது ஆனந்தபாலரின் படைக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை பயன்படுத்திக் கொண்ட கஜ்னியின் குதிரைப் படை ஆனந்தபாலரின் படையை கடுமையாக தாக்கி வெற்றிக் கொண்டது.

யானை திடீரென மதம்பிடித்து ஓடியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இரவோடு இரவாக ஆனந்தபாலரின் யானைக்கு ஆப்கானிய "அபின்" போதை மருந்துகளை கஜினியின் ஆட்கள் கொடுத்து விட்டிருந்தனர் என்பது ஒன்று. கஜ்னியின் படையை சேர்ந்த யாரோ ஒருவர் வீசிய 'நெருப்பு அம்பு' சரியாக யானையின் கண்களில் பட்டதுதான் காரணம் என்பது இரண்டு. எது எப்படியோ யானை மதம் பிடித்து பின்வாங்கி ஓடியதே போரில் தோற்றதற்கு காரணம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

இந்த போரின் வெற்றியின் மூலம் முகம்மது கஜ்னியின் கைவசம் 'ஷாஹி'களின் பிரதேசங்கள் வந்து சேர்ந்தன. அவனின் ஆளுமையும், ஆற்றலும் இதனால் அதிகரித்தது. அவன் பாரதத்தின் செழிப்பான பிரதேசங்களான இன்றைய பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தை நோக்கி திருப்பினான்.

Englightened Master

Read More

Friday, January 22, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 23

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 23

Englightened Master

பொது ஆண்டு 871ல், இன்றைய ஆப்கானிய காபூலை பிடித்தான் கிழக்கு ஈரானை சேர்ந்த "சஃபார்" (Ya'qub bin Laith as-Saffar) "சஃபார்" என்றால் செப்பு கொல்லன் என பொருள்படும். ஒரு செப்பு கொல்ல‌னாக தொடங்கி போர் படைவீரனாக மாறி பல தேசங்களை பிடித்தான் அவன். அதில் ஈரான், தஜிகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பண்டைய பாரத‌ பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். அவனது அரச பரம்பரை "சஃபாரித் அரசு" (Saffarid Dynasty) என்று அழைக்கப்பட்டது. அதிக வருடங்கள் நீடிக்காத அந்த "சஃபாரித் அரசை" பொது ஆண்டு 913ல் "சமானித் அரச ப‌ரம்பரை" ( Samanid Dynasty) கைப்பற்றியது.

"இஸ்மாயில் சமானி" (Ismail Samani) என்பவனின் தலைமையில் வந்த அந்த சமானிய படை வெறும் 20000 வீரர்களை மட்டுமெ கொண்டிருந்தது. ஆனால் 70000 வீரர்களை கொண்ட வலிமை மிக்க "சஃபாரிய" படையை தோற்கடித்தது. இத்தனைக்கும் "சமானிய படைகள்" வசம் கேடயங்களோ, வாள் போன்ற ஆயுதங்களோ இல்லை. ஆனால் அல்லாவுக்காக போர் புரிகிறோம் என்கிற உத்வேகம் அவர்கள் மத்தியில் தோற்றுவிக்கப் பட்டு இருந்தது. அதுவே வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதைய "அபாசித் கலீஃபாக" இருந்த "அல்முதாயித்" (Al-Mu'tadid ) சஃபாரிய‌ர்களை அங்கீகரிக்காமல், சமானியர்களை அங்கீகரித்ததும் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் இஸ்மாயில் சமானின் மத்திய ஆசிய தாக்குதல்கள் அவனுக்கு வீரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

அதன் பின் சில ஆண்டுகளில் சமானித் அரசின் அமீராக இருந்த "அப்த் அல் மாலிக்" ( Abd al-Malik) இறந்துவிட, அவருக்கு அடுத்து யார் ஆள்வது என்பதில் சர்ச்சை கிளம்பியது இதை மேற்கே புதியதாக‌ முஸ்லீம்களாய் மதம் மாறி இருந்த‌ துருக்கிய மக்களால் உருவாக்கப்பட்ட "கர்லுக்ஸ் படை" (Karluks) நன்கு பயன்படுத்திக் கொண்டது. கர்லுக்ஸ் படை, "கரகனித் அரசு" (Kara-Khanid) என்று ஒரு அரசை உருவாக்கி, சமானிய பகுதிகள் மீது போர் தொடுத்து கைப்பற்றினர்.

இந்த வாரிசு பிரச்னையை பயன்படுத்திக் கொண்டு, சமானத் பேரரசின் அடிமை தளபதியாக இருந்த "அல்ஃப் டிகின்" (Alp Tigin) தன்னுடைய ஆளுமையின் கீழ் இருக்கக் கூடிய ஒருவனை அமீராக‌ ஆட்சியில் வைப்பதற்கு தீர்மானித்தான். ஆனால் அதை சமானித் அமைச்சர்கள் ஆதரிக்காமல், "மன்சூர்" ( Mansur I ) என்பவனை நியமித்தார்கள். புதிய அமீரால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அல்ப் டிகின் "இந்துகுஷ்" மலைப்பகுதியின் தெற்கே படை எடுத்து சென்றான். அங்கு உள்ள ஆப்கானிய பகுதியான கஜ்னாவை (Ghazna) பொது ஆண்டு 962ல், லாவிக் (Lawik dynasty) அரசிடம் இருந்து கைப்பற்றினான்.

சமானித் அரசின் கீழ் கஜ்னியின் கவர்னராக தன் மருமகன் "செபுக் டிகினை" (Sebük Tigin) அமர வைத்தான் அல்ஃப் டிகின் சமானித் அரசு வீழ்ச்சி பெற துவங்கியதும், கஜ்னாவை தலைநகராக கொண்ட பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுயாட்சியை அறிவித்தான் செபுக் டிகின். இதன் மூலம் கஜ்னவித் பேர‌ரசு ( Ghaznavid Empire) உதயமாகியது.

கஜ்னவித் அர‌சு துருக்கிய வம்சத்தை சேர்ந்தது என்றாலும், அது பாரசீக (ஈரான்-ஈராக்) கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்களையே கொண்டிருந்தது. ஆகையால் அதை சிலர் பாரசீக சாம்ராஜ்யம் என்றும் கூறுவார்கள். செபுக் டிகினின் மரண‌த்திற்கு பிறகு அவனின் மகன் "இஸ்மாயில்" சிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஆனால் முஸ்லீம்களின் சரித்திரத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வான‌ சகோதர யுத்தம் அங்கும் தொடங்கியது. இஸ்மாயிலை பொது ஆண்டு 998ல் "கஜ்னி போரில்" (the Battle of Ghazni) அவன் சகோதரன்"மஹ்முத் கஜினி" வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினான். ஆட்சியை கைப்பற்றியதும் மேற்கே துருக்கிய "கரகனித்" அரசோடு அவன் ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டு எல்லைகளை நிர்னயித்துக் கொண்டான். அதன் பின் சிந்து பகுதிக‌ள் மற்றும் முல்டான் பகுதிகளை அவன் கைப்பற்றினான்.

"கஜினி முகம்மது" என்று அழைக்கப்பட்ட அந்த கொடுங்கோலனின் பார்வை செல்வ செழிப்பு மிகுந்த பாரதத்தின் பகுதிகள் மீது திரும்பியது.
Read More