Showing posts with label வேதம் கண்ட விஞ்ஞானம். Show all posts
Showing posts with label வேதம் கண்ட விஞ்ஞானம். Show all posts

Thursday, October 17, 2013

Keerthivasan

பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"


ஒரு சிறு தொகுப்பு : பண்டைய  தமிழ் பாடல்களில்  "விஞ்ஞானம்"

[Science in the Ancient Tamil Poetries  ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள்
என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே"
                                          - திருமந்திரம் 2008 [ திருமூலர் ]
இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்"நாட்டு வைத்தியர் தனது உதவியாளருக்குஅணு அளவு பாதரசம்சேர் என் கட்டளை இடுவார்.இதன் கருத்து மிக மிக சிறிய பகுதி என்பது. பின்னத்தில்[fraction] இது 1/165580800 ≈ 6.0393475572047000618429189857761e-09. ஆகும்[ நுண்மை,பொடி, சிறு துகள்கள்,இம்மி,ஆன்மா எனவும் பொருள் படும்]
 
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே"
-ஆசான் திருமூலர்-
இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.
இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..
0 .000000212 mm - ஹைட்ரோஜென்
சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்
மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
NB:The term micron and the symbol µ, representing the micrometre,A micrometre (or micrometer) is 1×10−6 of a metre (SI Standard prefix "micro" = 10−6) or one-thousandth of a millimetre, 0.001 mm, or about 0.000039 inches
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்
0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்
0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)
ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).
இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா?... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருப்பது  . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் "Higgs boson" சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள்"God particle" "கடவுள் துகள்" என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை.ஒரு காலத்தில் "கடவுள் துகள்" இன் அளவு அறியும் போது அதுதான் திருமூலர்  குறிப்பிட்ட   சிவனுடைய  வடிவமோ என அறிய நேரிடும்.
Read More

Tuesday, October 15, 2013

Keerthivasan

தெய்வத்தின் குரல் ( 2)

தெய்வத்தின் குரல் ( 2)

மங்களாரம்பம்

விநாயகர்

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். "கோயில்" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.

தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் "பிள்ளையார்" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். "பிள்ளை" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே "பிள்ளை" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் "பிள்ளையார்" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

"குமாரன்" என்றால் "பிள்ளை" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் "குமரக் கடவுள்" என்கிறோம். ஆனால், அவரைக் "குமரனார்" என்பதில்லை: "குமரன்" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர் அகவலை"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்

சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய

சேரர்....

என்பதில் சொல்லாமல் சொல்கிறார். "அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
Read More
Keerthivasan

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)


தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

தத்துவமயமான விநாயகர்

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல

உங்களுக்கு என்ன பாத்தியதையும்' என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம்,

யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்" , "பிள்ளையார்" என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

நன்றி:
ஜெ ஆனந்த் பரத்வாஜ்
Read More
Keerthivasan

அவதாரமும் அறிவியலும்...


அவதாரமும் அறிவியலும்...

October 18, 2012 at 7:07pm

உயிரியல் விஞ்ஞானி திரு.சார்ல்ஸ் டார்வின் அவர்கள் 1859 ஆண்டு Orgin Of Species என்ற நூலை வெளியிட்டார். அதில் முதல் உயிரி கடலில் இருந்து தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக்கருத்தை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே விளக்கியுள்ளனர். திருமாலின் அவதாரங்களை கவனித்தால் புரியும்.. 



1.மச்ச அவதாரம்(முதல் உயிர் கடலில் தோன்றியது)



2.கூர்ம அவதாரம்(நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள் தோன்றின)


3.வராக அவதாரம்(நிலத்தில் மட்டும் வாழும் உயிர்கள் தோன்றின)


4.நரசிம்ம அவதாரம் (மனித உருவும், மிருக அறிவும் படைத்த ஆதிமனிதன்)


5.வாமண அவதாரம்(வளர்ச்சி அடையாத ஆனால் முழுமைப் பெற்ற மனித உயிர்)


6.பரசுராம அவதாரம்(முழுமைப் பெற்ற, வளர்ச்சியடைந்த ஆனால் கோபக் கணலோடு கூடிய மனிதன்)


7,ராம அவதாரம்(பூரணத்துவம் அடைந்த அடக்கத்துடன் கூடிய மனிதன்)


8,பலராமர் அவதாரம்(பெருமையும் கீர்த்தியும் இருந்தும் அதை பறைசாற்றாத குணாதிசயம்)


9.கிருஷ்ண அவதாரம்(பூரணத்துவம் நிறைந்த, மதிநுட்பம் மிகுந்த, தத்வார்த்தமாகியம் குணாதிசயம்)


10.கல்கி அவதாரம்(கடவுள் மறுப்பாளர்களையும், கபட வேஷதாரிகளையும், வெளியே நாத்திகம் பேசி வீட்டில் விபூதி வாங்கிக் கொள்ளும் கபோதிகளை அழிக்க வரப் போகும் அவதாரம்)


இதில் நரசிம்ம அவதாரம் வரை உயிரின் தோற்றம் என்ற அறிவியல் கருத்தும், எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்ற தத்துவார்த்த கருத்தையும் வலியுறுத்துகின்றது.வாமண அவதாரத்தில் இருந்து ஏனைய மற்ற அவதாரங்கள் மனித பரிணாம வளர்ச்சியும் குணாதிசயத்தையும் விளக்குகின்றது..வாமண அவதாரம் உடற்குறையுடைய மாற்றுதிறனாளிகளும் இறைவன் படைப்பே, அவரையும் ஏற்று உதவி செய்யும் குணம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது...
Read More

Tuesday, July 9, 2013

Keerthivasan

வேதம் கண்ட விஞ்ஞானம் II

வேதம் கண்ட விஞ்ஞானம் II 










 புவியீர்ப்பு விதி என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சேர்.ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழமும் மட்டுமே.காரணம் ஈர்ப்பு விதியை ஐசக் நியூட்டன் கண்டறிந்து உலகறியச்செய்தார் என்பதே வரலாறு..ஆனால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன இந்திய அறிவியலாளர்களும் இந்திய அறிவியலும் ஏராளம்.காரணம் எம்மீது திணிக்கப்பட்ட அந்திய ஆக்கிரமிப்புக்களும் பகுத்தறிவு என்றபெயரில் மழுங்கடிக்கப்பட்ட எங்களின் வேத,புராணங்களுமேயாகும்.காலம் கடந்து இப்படியான சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.





சரி இனி விடயத்திற்கு வருவோம்.புவியீர்ப்பு விசை பற்றி முதலில் கூறியது.ஐசக் நியூற்றன் அல்ல.இந்திய புராணங்களிலும் வேதங்களிலும் ,பண்டைய காலத்திலும் இது பற்றி தெட்டத்தெளிவாக கூறிவிட்டனர்.

இனி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் சார் செய்யுள்களை பார்க்கலாம்...*தர்மத்தின் பாதையில்(page)


பாஸ்கர ஆச்சார்ய என்னும் கணிதமேதை சித்தாந்த சிரோன்மனி என்னும் தனது நூலில்

"அக்ரஸ்டா சக்திஸ்கா தய ஸ்வாஸ்தம்
குரு ஸ்வபிமுகம் ஸ்வஸ்தியா
அக்ரசியாதே தத்பததிவ பதிசமே
சமன்தாத் க்வ பதத்வியாம் சே"

இதன் பொருள் நவீன விஞ்ஞானங்கள் கூறுவதை அப்படியே கூறி எல்லோரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
இதன் பொருள் இதுதான் *தர்மத்தின் பாதையில்(page)
இயற்கையாகவே வானில் உள்ல பொருட்களை தன்னை நோக்கி கவரும் தன்மை கொண்டது பூமி.இத்தகைய ஈர்ப்பு சக்தியினால் எல்லா பொருட்களும் பூமியில் விழுகின்றன.கிரகங்களுக்கு இடையில் சமனான ஈர்ப்பு சக்தி இருக்கும் போது எப்படி விழும் என்று கூறுகின்றனர்.
சூரிய் சித்தாந்தம் புவியீர்ப்பு பற்றி இப்படி கூறுகின்றது

"மத்யே சமந்தாந்தஸ்ய பூகோள வியாமினி திஸ்தாதி
பிப்ஹாரனா பரமம் சஹ்தீம் பிரம்மனோதரனாத்மிகம்"(சூர்ய சித்தாந்தம் அத்தியாயம் 12 சுலோகம் 32)

அதாவது பூமியில் தரனாத்மிகா என்னும் சக்தி உண்டு என்பதாக கூறியுள்ளனர்.அதுவே ஈர்ப்பு சக்தி தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் 11ம் நூற்றாண்டில் பாஸ்கராச்சாரியர் என்பவர் தனது லீலாவத் என்னும் புத்தகத்தில் பூமியானது குருத்கவர்சனா சக்தி(புவியீர்ப்பு சக்தி)
கொண்டது.கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு சக்தி உண்டு எனவும் அதனாலேயே அவைகள் கவரப்பட்டு அண்டத்தில் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்.

இத்துடன் 7ம் நூற்றாண்டை சேர்ந்த சந்திரகுப்தா என்ற புகழ் பெற்ற கணிதவியல் அறிஞர் தனது "பிரம்ம புட்டா சித்தாந்தம்" என்ற கணிதவியல் நூலில் பின்வருமாறு கூறி வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார்.

தண்ணீர் இயற்கையாகவே கீழ் நோக்கி செல்லும் தன்மை கொண்டது..ஏனெனின் பூமிக்கு அவ்வாறான கவரும் ஈர்ப்பு சக்தி சக்தி கொண்டது.அதனாலே பூமியில் எல்லா பொருட்களும் கீழே விழுகின்றன" என்று கூறி தற்கால விஞ்ஞானங்களை அப்போதே தெட்டத்தெளிவாக கூரியுள்ளார்.#தர்மத்தின் பாதையில்(page)

இது போக பிரசன்ன உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய அதிசங்கரன் பின்வருமாறு கூறுகின்றார்.
“ததா பிரிதிவியமாபிமனினி யா தேவதா
பிரசித்தா சைசா
பிருசாஸ்ய அபனா பிர்த்திமவஸ்தபியா
க்ர்ஸ்யா வசிக்ரித்யாய ஈவா
அபகர்சேனா அனுகிரகம் குர்வதி
வர்த்தாத்த இத்யார்தா
எனியாதா ஹி சரிரம் குருத்துவபரித்
சவகசி வோட்கசித்"
இதன் பொருள் என்னவெனின் " மேலே எறியப்படும் பொருட்கள் பூமியால் கவர்ந்திழுக்கப்படுவது போலே உடம்பிலே இருக்கும் உயர்ந்த பிராண சக்தியை அவனா சக்தி இழுக்கின்றது என்று உவமையில் ஈர்ப்பு சக்தியை சாதாரணமாக கூருகிறார்.

பொதுவாக உவமை என்பது ஒரு தெரிந்த விஷயத்தை வைத்து தெரியாத விடயத்தை விளக்குவது ஆகும்..ஆக பூமியின் ஈர்ப்பு விதி அக்காலத்தில் அவ்வளவு தெளிவாக எல்லோரின் தெளிவுடன் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை
Read More