நரேந்திர மோடி ஒரு பார்வை
![]() |
நரேந்திர மோடி |
நரேந்திர
மோடி இளம் வயதில் டீக்கடை நடத்தினார் என்ற சுவாரஸ்யமான தகவல்
வெளியாகியுள்ளது. சிறுவயதில் இருந்தே ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில்
பங்கேற்றதனால்தான் தன்னுடைய மாநிலத்தை லஞ்ச ஊழலற்ற மாநிலமாக மாற்றி அதில்
வெற்றியும் பெற்றுள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 1950 செப்., 17ம்
நாள் குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், தாமோதர் தாஸ்
முல்சந்த் மோடி தம்பதியரின் மகனாகப் பிறந்தார் மோடி.
தனது பள்ளிப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ்., மற்றும் "அகில பாரதிய வித்யார்தி
பரிஷத்' அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல்
தொடர்பான கூட்டங்களில் பங்கேற்ற அவர் அரசியல் ஆர்வத்தால், குஜராத் பல்கலை
கழகத்தில், "அரசியல் அறிவியலில்' முதுகலை பட்டம் பெற்ற மோடி பின்னர் பாரதீய
ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
டீக்கடை ஓனர்
அரசியலுக்கு வருவதற்குமுன்னர் தன்னுடைய இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தியுள்ளார் மோடி. பாஜகவில் சேர்ந்த உடன் அவருக்கு படிப்படியாக ஏறுமுகம்தான். திருமணம் கூட செய்துகொள்ளாமல் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார் மோடி
டீக்கடை ஓனர்
அரசியலுக்கு வருவதற்குமுன்னர் தன்னுடைய இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தியுள்ளார் மோடி. பாஜகவில் சேர்ந்த உடன் அவருக்கு படிப்படியாக ஏறுமுகம்தான். திருமணம் கூட செய்துகொள்ளாமல் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார் மோடி.
தேடி வந்த பதவிகள்
மோடியின் அயராத உழைப்பினால் கடந்த, 1998ல் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி அம்மாநில முதல்வராக கேசுபாய் படேல் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 2001 அக்., 6ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேசுபாய் படேல். அந்த நேரத்தில் எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மோடி, ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
முன் மாதிரி முதல்வர் மோடி
மதவாதி என்றும், கலவரத்திற்குக் காரணமானவர் என்றும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பல துறைகளிலும், முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். இதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்டது. இவரது சாதனையை பாராட்டி இந்தியா டுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என்ற விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது.
சாதனை படைத்த முதல்வர்
2007ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, "மரண வியாபாரி' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவால், விமர்சிக்கப்பட்டவர் மோடி. ஆனால் அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் மோடி.
சாதனைக்கு விருது குஜராத்தில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்தார். குஜராத்தில், கம்ப்யூட்டர் துறையில், இவர் ஏற்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு,"இ-ரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பூரண மதுவிலக்கு குஜராத் மின் மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், "குட்கா'வுக்கு தடை விதித்துள்ளார். மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். மும்பை தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளார்.