பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை
ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல்
ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS
RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை
நிறுவப்பட்டிருக்கின்றது. ஏன் என்று தெரியுமா?
இறைவனின் ஆனந்த தாண்டவ திருவடிவத்தில் பிரபஞ்சப் படைப்பு தொட்டு, ஒடுக்கம் வரையான அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும் அருமையை விஞ்ஞானிகள் கண்டு வியந்தமையால் ஆகும்.திருவாசகத்தின் திருவண்டப்பகுதியினைக் கண்டு, விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்பது சைவரில் பலருக்குத் தெரியாது.

உலகம் உருண்டை வடிவானது என்று கூறியதோடு மட்டுமல்லாது, அண்ட
பிரபஞ்சங்களின் காட்சியை அழகாக சொல்லிய அருமையோடு, பிரபஞ்ச ஒடுக்கம்
-விரிவையும் தெளிவாக விளக்கியுள்ளார். இவற்றை ஏன் நினைவூட்டுகின்றேன்
என்றால், சைவசித்தாந்தம் என்பது தத்துவ ஆராய்வின் முடிவு என்பதை சைவர்
யாவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே!
சரி, இறைவனின் இயற்கை இயல்பில்(அதாவது சொரூப இயல்பில்) "சும்மா" என்று இருந்த சிவப்பரம்பொருள் எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அவ்வாறு எண்குணனாக தடத்தநிலையில் தன்னை வெளிப்படுத்தும் சொரூப இயல்புடைய சிவப்பரம்பொருள் சச்சிதானந்தம் என்று போற்றப்படுவார்.
அதுவென்ன தடத்தநிலை? விரிவாக பின்பு பார்ப்போம்
- ஞான ஆரண்யம்