மீடியா என்னும் முட்டாள்கள்!
![]() |
#prestitutes |
மோடி பதவியேற்றது முதல் சில விசயங்கள் அளவுக்கு அதிகமாகவே பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அவற்றில் மிக முக்கியமானது பாரதத்தில் மத வேறுபாட்டை தற்போதைய அரசு மேற்கொள்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது.
ஆரம்பத்தில் சர்சுகள் தக்கப்பட்டதாக செய்திகள் பரவியது. இதை மீடியாக்கள் மேலும் பற்ற வைக்க எந்த அளவுக்கு இது வீரியத்தை ஏற்படுத்தியது என்றால் மதம் மாறியிருந்தாலும் மோடியை விரும்பும் என் தோழன் வரை பாதித்தது. இதை பெரிய விசயமாக பேசிய மீடியாக்கள் உண்மையான குற்றவாளியான 15 மதிக்கத்தக்க அதே சர்ச்சை சார்ந்த சிறுவர்கள் கைதானதும் இதுவரை பரப்பிய பொய் செய்திக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது மீடியா எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
அடுத்து கன்னியாஸ்திரி கற்பழிப்பு. இதற்கு கிறித்துவர்கள் ஒருபடி முன்னேறி மெழுகுவர்த்தி ஊர்வலம் ஆர்பாட்டம் என்று துள்ளி குதித்தார்கள். மோடி இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று ஒரு பாதிரியார் பேட்டியும் கொடுத்தார். இதற்கும் காவி சாயம் பூசப்பட்டு பெரிதாக்கப்பட்டது ஆனால் இதிலும் மூக்கை உடைத்துக் கொண்டது மீடியா கைதானது வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள். இது பிளாஷ் நியூஸில் வந்ததோட சரி. சம்பவம் நடந்த போது பிஜேபியினரை வெளுத்து வாங்கிய மீடியா இஸ்லாமியர் என்றதும் மூச்சு பேச்சு இல்லை..
இதனால்தான் ஜெனரல் விகே சிங்க் உங்களுக்கு ப்ரொஸ்டிடியுட் என்று பொருள் தரும் வகையில் பிரஸ்ட்டிடியுட் என்று டிவீட்டர் செய்ய அதுவே வெகு சில மணிநேரங்களில் உலகிலேயே முதல் டிரண்டாக வளர்ந்து உங்கள் முகத்தில் காரியை முழிந்தது....
பொய் உரைத்து நடக்க போவது என்ன?
ஏற்கனவே சொன்னது போல சர்ச் சம்பவங்களில் மூக்கை உடைத்துக் கொண்ட மீடியாவுக்கு அதற்கு சரியான ஒரு நிகழ்வை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் மிஸ்பா குதாரே என்னும் இஸ்லாமிய பெண் ஒரு குண்டை தூக்கி போட்டார்.
அவரின் குற்றசாட்டு இதுதான்: மும்பையில் வாடகைக்கு வீடு கேட்டு சென்ற போது இஸ்லமியர் என்பதால் எனக்கு மறுக்கப்பட்டது என்பதே அது. அவ்வளவுதான் கிடைத்த அவலை மெல்ல ஆரம்பித்த மீடியாக்களுக்கு மீண்டும் செருப்படி விழுந்திருக்கிறது.
அந்த பெண்னுக்கும் அந்த வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்கும் தரகருக்கும் உண்டான பிரச்சனையை திசை திருப்பிவிட்டிருக்கிறாள் அந்த பெண். சரி அந்த தரகர்தான் அமைதி மார்க்கத்தின் எதிரியா என்றால் அதுவும் இல்லை. அதே அப்பார்ட்மெண்ட்டில் அதே தரகரால் மூன்று இஸ்லாமியர்கள் அங்கு குடியேறி இருக்கிறார்கள். என்றால் பொய் சொல்ல வேண்டியதின் அவசியம் இந்த பெண்ணுக்கு ஏன் வந்தது?
அங்கு குடியிருக்கும் மற்ற இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எங்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை நாங்களும் வெகு சமீபத்தில்தான் குடியேறினோம் ஏன் இந்த பெண் இப்படி சொல்லினாள் என்பது புரியவில்லை என்கின்றனர்.
# இதுவரை நடந்ததை பார்த்தோம் இனி தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் பற்றி பார்ப்போம். நான் ஒரு சைவ வழி வந்தவன் என்று வைத்துக் கொள்வோம் எனக்கு அசைவம் ஆகாது. நான் ஒரு வீட்டை வாங்கி வாடகைக்கு விட நினைக்கிறேன் என்றால்.
அசைவம் சாப்பிடும் ஒருவரை என் வீட்டில் நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?
அரசாங்கம் கோட்டா கொடுப்பது போல நானும் கொடுக்க என்ன அவசியம்?
இது என் வீடு யாருக்கு வாடகைக்கு கொடுக்கனும் யாருக்கு கொடுக்க கூடாது என்பது என் உரிமை இதை கேட்க அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கு?
ஒருசில வீடுகளில் 3 பேருக்கு மேல் இருந்தால் வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள் அப்படியென்றால் கூட்டு குடும்பத்துக்கு வீடு கொடுக்கவில்லை என்று ஒப்பாரி வைக்கனுமா?
பொய் இல்லை என்றாலும் இதில் தவறில்லை...
என் வீடு அதில் யார் குடியிருக்க வேண்டும் என்று நானே முடிவு செய்வேன் சட்டம் என்னை கட்டுபடுத்தாது அப்படியிருக்க மீடியாக்கள் கத்துவதின் மர்மம் புரியவில்லை...
அன்புடன்

கீர்த்திவாசன்...
மேற்கோள் சுட்டிகள்:
மும்பையில் நடந்தது என்ன என்பதற்கான சுட்டி:
http://www.mid-day.com/articles/mumbai-was-tenant-evicted-over-her-religion-or-due-to-issues-with-broker/16247186
ஆக்ரா சர்ச் தாக்குதல் சுட்டி:
1. http://timesofindia.indiatimes.com/india/Spurned-lover-attacked-Agra-church-Cops/articleshow/47033360.cms

2. http://www.dnaindia.com/india/report-agra-church-attack-case-of-love-story-gone-wrong-say-police-2080429
கன்னிகாஸ்திரி கற்பழிப்பு சம்பவத்திற்கான சுட்டி:
http://www.thehindu.com/news/cities/kolkata/two-arrested-in-west-bengal-nun-rape-case/article7035971.ece
http://www.ndtv.com/india-news/4-detained-from-ludhiana-in-west-bengal-nun-rape-case-751289
http://www.ndtv.com/india-news/prime-accused-in-west-bengal-nun-rape-case-arrested-from-sealdah-station-761617
இதே வழக்கிற்கு ஒரு அமைச்சர் கர்வாப்ஸியே காரணம் என்று 007 போல கண்டுபுடிச்சு உளரிய சுட்டி:
http://timesofindia.indiatimes.com/india/71-year-old-nun-gang-raped-in-West-Bengal-minister-blames-ghar-wapsi/articleshow/46570004.cms