![]() |
| நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோவில் அது
இடிக்கப்பட்டு, "ஜைனுலப்தின் டாம்ப்" (Zein-ul-ab-ud-din's Tomb) என பெயர்
மாற்றப்பட்டது. (தற்போது ஸ்ரீநகரின் நுழைவாயிலாக அது திகழும் காட்சி) |
பொது ஆண்டு 1819ல் காஷ்மீரை கைப்பற்றிய மஹாராஜா ரஞ்சித் சிங், கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக நடந்து வந்த முஸ்லீம் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார். முஸ்லீம் படைகளின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்துக்களும், புத்தர்களும், சீக்கியர்களும், சுஃபி இஸ்லாமியர்களும் அந்த ஆட்சியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். லாகூரை தலைநகராக கொண்ட சீக்கிய பேரரசு, கொடுங்கோல் சலாஃபிய சட்டங்களை தடை செய்தது, சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் காஷ்மீரின் பாரம்பரியத்திற்கு மீண்டும் புத்துணர்வு ஊட்டப்பட்டது . பசுக்கொலைகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இஸ்லாமிய மதவெறியின் தலைமை கேந்திரமாக இருந்த ஜம்மா மசூதி மூடப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் மீது சுமத்தப்பட்ட வரிகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே வகையான வரி அமலாக்கப்பட்டது. பாரபட்சம் இல்லாத அவரின் நால்லாட்சியில் வாணிபம் செழித்து வளர தொடங்கியது. ஐரோப்பா போன்ற பல தூர தேச பகுதிகளுக்கும் காஷ்மீர் கம்பளிகளும், சால்வைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போதுதான் சீக்கிய மதம் உதயமாகி இருந்த நிலையில், இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லாது இருந்தது. உறவினர்களுள் சிலர் இந்துக்களாகவும், சிலர் சீக்கியர்களாகவும் இருந்து வந்தனர். இந்து தர்மத்தின் ஒரு சத்திரிய பிரிவாகவே சீக்கிய மதம் அத்தருனத்தில் இருந்தது.
பொது ஆண்டு 1820ல், சீக்கிய பேரரசின் ஜம்மு பிரதேச கவர்னராக பொறுப்பேறார் "குலாப் சிங்". பேரரசை மேலும் விஸ்தரிக்கும் வகையில், "லதாக்" மற்றும் இன்றைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள "பல்திஸ்தானை" (Baltistan) அவர் கைப்பற்றினார். அதன் பின் பொது ஆண்டு 1839ல், ரஞ்சித் சிங் இறந்து விட உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான், பஞ்சாப் (கிழக்கு மற்றும் மேற்கு) காஷ்மீர் என பரவி இருந்த சீக்கிய பேரரசு பல அரசர்களின் குறுகிய கால ஆளுமைக்கு வந்து போனது. பாரதத்தில், ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி வசம் விழாத கடைசி பிராந்தியங்களாக அப்பகுதிகள் திகழ்ந்ததால், அதை கைவசப்படுத்த கம்பெனி பெரும் முயற்சிகள் எடுத்து வந்தது..
மகாராஜா ரஞ்சித் சிங் இறந்ததால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த கிழக்கு இந்திய கம்பெனி, 1846ல் முதலாம் ஆங்கிலோ-சீக்கிய போரை துவக்கியது. இதன் மூலம் கிழக்கு இந்திய கம்பெனிக்கும், சீக்கியர்களுக்கு இருந்து வந்த நட்பு முறியத் தொடங்கியது போரினால் இரு தரப்பிலும் கடும் சேதம் ஏற்பட்ட நிலையில், இறுதியாக சீக்கியர்கள் கிழக்கு இந்திய கம்பெனியிடம் சரணடைய வேண்டி வந்தது. சீக்கிய படையில் இருந்த சில துரோகிகள் ஆங்கிலேயர்களுக்கு துனை புரிந்ததும் ஒரு முக்கிய காரணம். போரில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் சீக்கியர்கள் நஷ்ட ஈடு தர நிர்பந்திக்கப்பட்டனர். அதன் பொருட்டு சீக்கிய பேரரசு, காஷ்மீர் மற்றும் "ஹசரா" பகுதிகளை கிழக்கு இந்திய கம்பெனிக்கு வழங்கியது. அச்சமயத்தில் காஷ்மீரின் கவர்னராக இருந்த குலாப் சிங் ஆங்கிலேயர்களிடம் இருந்து "அம்ரிஸ்தர் ஒப்பந்தத்தின்" படி, 75 லட்சம் ரூபாய்களை கொடுத்து அப்பகுதிகளை பெற்றுக் கொண்டார். அதன் மூலம் அவர் ஜம்மு காஷ்மீரின் அரசராகவும் முடிசூட்டிக் கொண்டார் குலாப் சிங்குக்கு பிறகு காஷ்மீரை ஆண்ட அவரின் மகன் "ரன்பீர் சிங்", "ஹஞ்சா" (Hunza) "கில்கிட்" (Gilgit) மற்றும் "நகர்" (Nagar) ஆகிய பகுதிகளை காஷ்மீரோடு இனைத்தார். அவரின் வம்சாவளி 1947 வரை நீடித்தது.
காஷ்மீர் பல்வேறு மத, கலாச்சாரங்களை கொண்டதாக இருந்தது. "லதாக்" பகுதி புத்த மதத்தை கொண்ட திபெத்திய கலாச்சாரத்தையும், ஜம்மு பகுதி இந்துக்களையும், சீக்கிய மற்றும் முஸ்லீம்களை கொண்டதாகவும் இருந்தது. அதிக ஜனத்தொகையை கொண்டிருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கிலோ சுன்னி முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்கள் அதிகம் காணப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில், மதம் மாறாமல் தங்கள் ஆதி வேர்களை பாதுகாத்து வந்த காஷ்மீர் பண்டிட்டுகளும் பெரும் எண்ணிக்கையில் வசித்து வந்தனர். வடகிழக்கில் இருந்த "பல்திஸ்தான்" பகுதியோ லதாக் இனத்தை ஒட்டிய ஷியா முஸ்லீம்களை அதிகமாக கொண்டிருந்தது. அதிக மக்கள்தொகை இல்லாத வறண்ட மலைப்பகுதியாக அப்பகுதி திகழ்ந்தது. வடக்கில் இருந்த "கில்கித்" பகுதியோ, ஷியாக்களையும் பலதரப்பட்ட மக்களையும் கொண்டிருந்தது. மேற்கே "பூன்ச்" (Punch) பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒவ்வாத வேறு முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்களை கொண்டிருந்தது.
முஸ்லீம் பெரும்பான்மை கொண்டிருந்த காஷ்மீரை, ரன்பீர் சிங்கின் பேரனான மஹாராஜா "ஹரி சிங்" ஆண்டு வந்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ஸ்ட் 1947ல் சுதந்திரம் பெற, சுயராஜ்ஜியமாக இருந்த காஷ்மீர் யாரோடு சேருவது என்பது கேள்வியாக இருந்தது. முதலில் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளோடும் இனைய வேண்டாம் எனத் தீர்மானித்திருந்தார் ஹரி சிங். ஆனால் 24 அக்டோபர் 1947ல் பூன்ச் பக்தியை செர்ந்த முஸ்லீம்கள் பாகிஸ்தானியர்களின் பின்புலத்தோடு கிளர்ச்சியை தொடங்கினர். அவர்கள் அப்பகுதியை "ஆசாத் காஷ்மீர்" (சுதந்திர காஷ்மீர்) என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் கலக்கமடைந்த ஹரி சிங் பாகிஸ்தானிய அரசோடு உறவுகளை மேம்படுத்த சில வர்த்தக மற்றும் தொழில் சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டார். ஆனால் காஷ்மீரின் மேற்கு பகுதியில் (முசாஃபராபாத்) இருந்த முஸ்லீம்கள், அரசருக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கினர். இதற்கு பின்புலமாக பாகிஸ்தானிய அரசு முழு ஆதரவை நல்கியது. 12000 பத்தானியர்களை கொண்ட ஒரு படையை வடக்கிலிருந்து அனுப்பி காஷ்மீரை கபளீகரம் செய்ய முயன்றது பாகிஸ்தான். அசுரத்தனமாக உள்ளே நுழைந்த அந்த பத்தானிய படை, கண்களுக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்று தீர்த்தது, பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள், சொத்துக்கள் சூரையாடப்பட்டன, அழிக்கப்பட்டன. காஷ்மீரின் வடமேற்கு முசாஃபராபாத் பகுதியில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் முழுவதுமாக இன ஒழிப்பு செய்யப்பட்டனர். வேறு வழி இல்லாமல் ஹரி சிங் இந்தியாவோடு காஷ்மீரை இனைக்கக் கோரி கடைசி ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் "மவுன்ட்பேட்டனுக்கு" கடிதம் எழுதினார். (கடிதத்தை இங்கு படிக்க http://
ஆக்கம்: Enlightened Voice
