Showing posts with label NaMo. Show all posts
Showing posts with label NaMo. Show all posts

Wednesday, October 16, 2013

Keerthivasan

மோடியின் நாமா... (1)

மோடியின் நாமா...
ஆக்கம்: மது பூர்ணிமா கிஷ்வார்
http://en.wikipedia.org/wiki/Madhu_Kishwar

மொழி பெயர்ப்பு: கீர்த்திவாசன்

தொடங்கும் முன்: என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதை மொழியாக்கம் செய்துள்ளேன். தவறுகள் சுட்டி காட்டினால் திருத்தப்படும். இது ஒரு ஆய்வுக் கட்டுரையாக ஆங்கிலத்தில் வந்தது. இதில் வரும் அனைத்தும் இதை எழுதிய எழுத்தாளரின் படைப்பு மட்டுமே. அனைவருக்கும் இது சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு நான் என்று குறிப்பிடுவது இந்த கட்டுரை எழுதுபவரையே குறிக்கும். உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களே ஊக்கமளிக்கும் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கீர்த்திவாசன்...

நரேந்திர மோடி குஜராத் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்துவர்கள் பார்வையில்... (1)

பிப்ரவரி 2002ல் அனைவரின் கவனமும் குஜராத் கலவரத்தின் மீது இருந்த சமயம். தேசிய ஊடகங்களின் மற்றும் என்னுடய சக நண்பர்களின் தவல்களால் மோதிதான் இதற்க்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்த பலரில் நானும் ஒருவன் ஆதலால், நானும் பல நேரங்களில் மோதிக்கு எதிரான மனுக்களில் கையெழுத்து வாங்க உதவிகள் செய்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வசூலித்து தந்திருக்கிறேன் ஆனால், அதை பற்றி விரிவாக என் சொந்த கருத்துக்களை நான் எழுதியதில்லை காரணம் குஜராத்தில் என்ன நடந்தது என்று என்னால் நேரில் சென்று விசாரிக்க முடியாத நிலையில் நான் இருந்ததே காரணம். என்னோடய பழைய அனுபவங்களில் இது போன்ற கலவர நிகழ்வுகள் ஊடகங்களின் வாயிலாக சரிவர உண்மையை அறிந்துக் கொள்ள முடியாது என்ற படிப்பினையை நான் உணர்ந்திருந்தேன் அது காஷ்மீர் கலவரமோ அல்லது பஞ்சாப் கலவரமோ அதை எழுதும் எழுத்தாளரின் IdeIdeological மட்டுமே முதன்மையாக பளிச்சிடும் அதை ஒட்டியே அச்செய்தி இருக்கும் என்பதை என் படிப்பினை எனக்கு கற்றுகொடுத்த காரணத்தினாலும், குஜராத் கலவரம் பற்றி நான் என் கருத்துக்களை சொல்வதை தவிர்த்தேன்.o

1984 சீக்கியர்கள் படுகொலை, தொடர் மீரட் கலவரங்கள், 1980ல் மல்லியானா, 1993 மும்பாய் (அன்றைய பம்பாய்), 1989ல் ஜம்மு போன்ற மிக பெரிய கலவரங்களை மட்டுமல்லாது பிஹார்ஷரிஃப், பிவாண்டி, ஜம்ஷெத்பூர் மற்றும் தொடர் கலவரங்களான அஹமதாபாத், சூரத் (மோடி பதவிக்கு முன்) ஆகிய கலவரங்களை ஆராய்ந்த அனுபவங்கள் எனக்கு உண்டு. தில்லியில் 1984ம் ஆண்டு நடந்ததை தவிர்த்து மீதம் உள்ள அனைத்திற்க்கும் காங்கரஸ் மற்றும் பி ஜே பியின் பங்கு அதில் இருந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்பில் வந்த கலவரத்திற்க்கு பி ஜே பியின் பங்குக்கு இணையான பங்கு காங்கரஸுக்கு உண்டு என்பதை என் பல விசாரனைக்கு பின் நான் அறிந்தேன்.

காங்கரஸ் கட்சியின் மிக பெரிய பலம் அது மஹாத்மா காந்தி அவர்களால் முன் மொழியப்பட்ட ஒரு இயக்கம் என்பதே. இந்த ஒரு பார்வையே பாரதத்தின் மூளை முடுக்கெல்லாம் அனைவரும் அந்த இயக்கத்தை பற்றி அறிய செய்தது. படித்த மற்றும் கலவரத்தை நன்குணர்ந்த குஜராத்திகள் என்னிடம் சொன்னது கலவரத்தின் போது சில காங்கரஸ்காரர்களும் கலவரக்காரர்களோடு இணைந்து செயல்பட்டார்கள் என்பதே. அதோடு அதற்க்கு பிறகு கலவரத்தை விசாரித்த அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ள மற்றொரு விடயம். முஸ்லீம்களும் பலர் ஹிந்துக்களை தாக்கினார்கள் என்பது இதனால் பல ஹிந்துக்களும் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள் என்பது.
ஆதலால் பி ஜே பியையும் குறிப்பாக மோடியையும் குறிவைத்து ஒரு கலவரத்திற்க்கு காரணமாக சொல்லப்படுவது இதுவரை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் யாருக்கும் நடக்காத ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த சூழல் மோடிக்கு எதிராகவும் அவரை வெறுக்கும் நிலைக்கும் சாதாரண மக்களை கொண்டு சென்றது. பல வருடங்களாக NGOs, சமூக சேவகர்கள், பத்திரிக்கையாளர்கள், படித்தவர்கள் என்று அனைத்து தரப்பிலும் இந்த எண்ணங்கள் அவரை அழிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்த பொய் பிராச்சரத்திற்க்கு மிக பெரிய பொருளாதர உதவிகளை காங்கரஸிடம் இருந்து பெற்றுள்ளனர்.

1984 சீக்கியர்கள் கலவரத்தில் வட இந்தியாவில் தவரு செய்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கப்பட்டது. இதில் பிரதம மந்திரி திரு. ராஜிவ் காந்தி, உள் துறை அமைச்சர் திரு. நரசிம்ம ராவ், தில்லி கவர்னர் P. G. காவாய் குற்றம் சாட்டப்பட்டார்கள் அனால் பிரதம மந்திரியோ அல்லது உள்துரை அமைச்சரோ அல்லது தில்லி கவர்னரோ தனி மனித குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை (அல்லது ஆக்கப்படவில்லை) ஆனால், 2002 குஜராத் கலவரத்தில் மட்டும் மொத்த குற்றச்சாட்டும் ஒரு தனி மனிதனின் பெயரில் சொல்லப்படுவது எவ்வளவு அபத்தம்?

மிக சமீபத்திய என்னுடன் ஒரு நேர்காணலில் திரைக்கதை எழுத்தாளர் திரு சலீம் கான் ஒரு அருமையான விவாதத்தை சொன்னார். “மும்பை கலவரம் நடந்தபோது அதுவும் 2002 குஜராத் கலவரத்தைவிட கொடுமையான கலவரம் நடந்தபோது மஹாராஸ்ட்டிராவின் முதலமைச்சர் யார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? உ. பி. யில் நடந்த மல்லியானா மற்றும் மீரத் கலவரத்தின் போது அதன் முதலமைச்சார் யாரென்று சொல்ல முடியுமா? அல்லது பகல்ப்பூர் அல்லது ஜம்ஷத்பூர் கலவரம் நடந்த போது அதுவும் காங்கரஸ் ஆட்சியில் பீஹாரின் முதலமைச்சர் யாரென்று சொல்ல முடியுமா? சுதந்திர இந்தியாவில் குஜராத்தில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தபோது யார் யார் ஆண்டார்கள் என்று சொல்ல முடியுமா? குஜராத்தில் நடந்த இந்த கலவரங்களில் சில மிகவும் மோசமான 2002 கலவரத்தை விட மிகவும் கொடுரமான கலவரங்கள். குஜராத்தை பொருத்தவரை மாதத்திற்க்கு இரண்டு கலவரங்களை சந்திக்கும் மாநிலம். தலைநகர் தில்லியில் நடந்த சீக்கியர்கள் கலவரத்தின் போது யாரின் கட்டுப்பாட்டில் தில்லியின் பாதுக்காப்பு பொருப்பு இருந்தது என்று யாராவது நினைவுக்கூற முடியுமா? எப்படி மோடியை மட்டும் 2002 கலவரத்தில் தனி மனிதனாக அனைத்து கொலைகளுக்கும் குற்றவாளியாக சொல்ல முடிகிறது?

ஏன் ஒரே ஒரு கலவரம் மட்டும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது? ஜூலை 2012 ல் நடந்த அஸ்ஸாம் கலவரத்தில் போடொக்களும், இஸ்லாமியர்களும் அவர்களின் உடமைகள் எரிக்கப்பட்டதால் சுமார் 400 கிராமங்களில் இருந்து 270 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். 8 ஆகஸ்ட் 2012 நிலவரப்படி 400,000க்கும் மேலான மக்கள் இந்த முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். அஸ்ஸாம் முதல் மந்திரி தயாரக இருந்த ராணுவத்தினரை 4 நாட்கள் கடத்திதான் களத்தில் இறக்கினார். இன்னும் ஆயிரத்திற்க்கும் மேலானவர்கள் இந்த முகாமில்தான் இருக்கின்றனர் ஆனால் ஏன் இந்த கலவரத்தின் கோர முகத்தை நாம் மறந்தோம்?”

நான் ஒரு வினோதமான ஒரு நிகழ்வை கவனித்தேன் அதாவது மோடியை எதிர்க்கும் குழுவில் உள்ள இஸ்லாமியர்கள் குஜராத்வாசிகளே இல்லை என்பதுதான். எப்போதெல்லாம் குஜராத் முஸ்லீம்கள் இதற்க்கு நேர்மாறாக குரல் கொடுக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள் இதன் கடுமையால் பேசியவர் வாயடைத்து போகிறார். மிக உயர்ந்த நிலையில் மதிக்கத்தக்க மனிதராக இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட திரு. மௌலானா வாஸ்தன்வி தான் வகித்து வந்த தியொபந்தின் Vice Chancellor பதவியிலிருந்து கட்டாயமாக விலக்கப்பட்டார். அவர் சொன்னது இதுதான் “குஜராத் இஸ்லாமியர்களும் மோடி அரசின் வளர்ச்சி கொள்கைகளினால் பயனடைகிறார்கள்” ஷாஹாத் ஷித்திக், “டெய்லி உருது” என்கிற தினப் பத்திரிக்கையின் ஆசிரியர் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு இன்று அவர் மோடிக்கு எதிரான நடவடிக்கையில் தொலைக்காட்சியில் இருக்கிறார்! அவர் செய்த குற்றம் மோடி தன் அரசு எடுத்த நடவடிக்கைகளில் தவறில்லை என்று சொன்ன பேட்டியை அவர் பிரசுரித்தது.

இன்றய அரசியலை மோடி பயம் ஆட்டிவைக்கிறது. நல்ல சாலை வசதிகள், 24 மணிநேர மின்சாரம், சிறந்த ஆளுமை போன்றவற்றை நீங்கள் எடுத்துரைத்தாலும். நீங்கள் பாசிச கொள்கையாளர் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். இன்றய அரசியலில் காஷ்மீர் பிரிவினைவாதிகலுக்காகவும், பாகிஸ்தான் பல தீவிரவாதிகளை உள்ளே அனுப்பினாலும் அதனுடன் நட்பு பாரட்டவும், மாவோயிஸ்ட்டுகளை வருமையின் பிடியில் விளைந்தது என்று காரணங்களை அடுக்கவும் செய்யாமல் ஒரு நல்ல அரசைப் பற்றி ஒரு வார்த்தை பாராட்டிவிட்டால் அரசியலில் நீங்கள் தீண்டதகாதவர் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள். அதொடு நீங்கள் ஒரு பாசிச வெறியர் என்ற வர்ணம் பூசப்படுவீர்கள்.
 
என் தேடல்கள் தொடரும்...
Read More

Saturday, August 3, 2013

Keerthivasan

நரேந்திர மோடி ஒரு பார்வை

நரேந்திர மோடி ஒரு பார்வை 

 

நரேந்திர மோடி
 நரேந்திர மோடி இளம் வயதில் டீக்கடை நடத்தினார் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது­. சிறுவயதில் இருந்தே ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதனால்தா­ன் தன்னுடைய மாநிலத்தை லஞ்ச ஊழலற்ற மாநிலமாக மாற்றி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 1950 செப்., 17ம் நாள் குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி தம்பதியரின் மகனாகப் பிறந்தார் மோடி. தனது பள்ளிப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ்., மற்றும் "அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்ற அவர் அரசியல் ஆர்வத்தால், குஜராத் பல்கலை கழகத்தில், "அரசியல் அறிவியலில்' முதுகலை பட்டம் பெற்ற மோடி பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

டீக்கடை ஓனர்
அரசியலுக்கு வருவதற்குமுன்னர­் தன்னுடைய இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தியுள்ளார் மோடி. பாஜகவில் சேர்ந்த உடன் அவருக்கு படிப்படியாக ஏறுமுகம்தான். திருமணம் கூட செய்துகொள்ளாமல்­ கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார் மோடி

டீக்கடை ஓனர்
அரசியலுக்கு வருவதற்குமுன்னர­் தன்னுடைய இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தியுள்ளார் மோடி. பாஜகவில் சேர்ந்த உடன் அவருக்கு படிப்படியாக ஏறுமுகம்தான். திருமணம் கூட செய்துகொள்ளாமல்­ கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார் மோடி.

தேடி வந்த பதவிகள்
மோடியின் அயராத உழைப்பினால் கடந்த, 1998ல் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டா­ர். குஜராத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி அம்மாநில முதல்வராக கேசுபாய் படேல் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 2001 அக்., 6ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேசுபாய் படேல். அந்த நேரத்தில் எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மோடி, ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.

முன் மாதிரி முதல்வர் மோடி
மதவாதி என்றும், கலவரத்திற்குக் காரணமானவர் என்றும் பல குற்றச்சாட்டுக்­கள் முன்வைக்கப்பட்ட­ன. ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பல துறைகளிலும், முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். இதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்டது. இவரது சாதனையை பாராட்டி இந்தியா டுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என்ற விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது.

சாதனை படைத்த முதல்வர்
2007ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, "மரண வியாபாரி' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவால், விமர்சிக்கப்பட்­டவர் மோடி. ஆனால் அந்த விமர்சனத்திற்கு­ பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் மோடி.

சாதனைக்கு விருது குஜராத்தில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்தார். குஜராத்தில், கம்ப்யூட்டர் துறையில், இவர் ஏற்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு,"இ-ரத்ன­ா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பூரண மதுவிலக்கு குஜராத் மின் மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், "குட்கா'வுக்கு தடை விதித்துள்ளார்.­ மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்­ளார். மும்பை தாக்குதலுக்குப்­ பின், குஜராத் கடலோர பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்­ளார்.
Read More

Friday, August 2, 2013

Keerthivasan

மோடியின் குஜராத் ஒரு பயணம் - II

அடிப்படை - மின்சாரம்...

 

குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில் பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு.

2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்.

ஒரு நாள் இரவு அகமதாபாத்தில் தங்கினேன். கடுமையான இடி, மின்னலுடன் மழை கொட்டியது. காதைப் பிளக்கும் இடி ஓசை. மரங்கள்கூடச்சாய்ந்தன. என்ன ஆச்சரியம்! அப்போதும்கூட மின்சாரம் தடைப்படவில்லை. இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை. யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்.

குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தைபதினாறுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மொத்த இந்தியாவும் மின்சாரத்துக்காகத் தவம் கிடக்கும்போது, நரேந்திர மோடி அரசு மட்டும் அதிகமான, தரமான மின்சாரத்தை எப்படித் தயாரித்து வருகிறது? இது ஒரு ஒப்பற்ற தலைமையின் அடையாளம்.
Read More