![]() |
Pehowa, Haryana, Kartikeya Temple |
கதறவிட்ட சீமான் ; அம்பலபடுத்திய திருமுருகன் என்று youtube போன்ற தளங்களில் விளம்பரம் தேடி கொள்ளும் கிருஸ்தவர்கள் கொஞ்சம் மற்ற மத உள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்வேன்.
தமிழ் நாட்டில் , இன்னும் சொல்ல போனால் இந்தியாவிலேயே ஒரு வடிகட்டின முட்டாள் அரசியல்வாதி என்றால் அது நிச்சயம் இந்த சீமான் என்ற செபாஸ்டீன் தான் என்பேன். பொருளாதாரம் பேச சொன்னால் ஆடு மாடு மேய்தல் அரசு வேலை என்று பேசுவது ஆரம்பித்து வரலாறு இவர் மூளைக்கு என்ன தோணுதோ அது தான் வரலாறு என்று தேனாம்பேட்டை சிக்னலில் மேடையை போட்டு ஏக வசனத்தில் உணர்சி பொங்க நரம்புகள் புடைக்க பேசிவிட்டால் அது வரலாறு ஆகாது.
அறிவு இருக்கிறவன் கொஞ்சமாது தான் நினைப்பது சரியா என்று விவரம் தேடுவான். ஆனால் அந்த குறைந்த பட்ச தன்மை கூட இந்த முட்டாளுக்கு இருப்பதை நான் பார்த்ததே இல்லை. வாயில் வந்த வசனத்தை பேசிவிட்டு பின்னால் மண்டையை சொரிவது இவர் வழக்கம்.
----------------------------------------------
முதலில் சீமான் முருகன் கோவில் விவகாரம்:
-பழனி முருகன் கோவில் எந்த அளவு பழமையானதோ அதே அளவு பழமையான கோவில் தான் ஹிரியானா மாநிலத்தில் உள்ள Pehowa என்னும் இடத்தில் இருக்கும் கார்த்திகேயன் கோவில். இரண்டும் ஏறக்குறைய 5ஆம் நூற்றாண்டை தொடும் அளவு பழமையானவை. நான் சென்றுவந்த வரை Pehowa இன்னும் பழமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஹிமாச்சல் பிரதேஷ் தர்மசாலவில் இருக்கும் மியுசியம் சென்று வரவும் , அங்கே பல ஆதாரங்கள் கிடைக்கும்.
பஞ்சாப் , ஹிமாச்சல் , குஜராத் என்று அனைத்து இடங்களிலும் காத்திகேயன் வழிபாடு உண்டு. என்ன முருகன் என்று சொன்னால் உடனே அவர்களுக்கு பெயர் குழப்பம் வரும் கார்த்திகேயா , செந்தில் என்று கூறினால் புரிந்து கொள்வர்.
-சிவ பக்தர்களுக்கும் - இமய மலைக்கும் உள்ள தொடர்பை இந்த உலகமே அறியும்.
எனவே சிவனையும் முருகனையும் வச்சு ஹிந்துகளை குழப்பலாம், பிரிவினை பேசலாம் என்று திரியும் சீமான் போன்ற தெய்வநாயகம் வழி வந்த கிருஸ்தவ அடிமைகள் கொஞ்சம் ஹிந்துக்களில் உள் விவகாரத்தில் வராமால் இருப்பது நல்லது.
இந்தியாவில் எந்த மொழியின் இலக்கியம் தேடினாலும் அது 90% ஹிந்துகளின் மத வழிபாடு , ஹிந்து மத கடவுள்களை போற்றி தான் இருக்கும். இந்த நாடு இந்த மக்கள் இந்த நாட்டில் உள்ள மொழிகள் இந்த நாட்டில் உள்ள பல்லாரியிரம் நம்பிக்கைகள் அனைத்தும் நீக்கமற ஹிந்து தெய்வங்கள் கலந்து நிற்கும். இதில் இருந்து எவனாலும் இந்த மண்ணின் இந்த ஆன்மாவை பிரிக்கவே முடியாது.
பிரச்சனை வட மாநிலங்களில் முகாலாயர் காலத்தில் சுமார் 50,000கோவில்கள் வரை இடிக்கபட்டது தான். அதனால் அங்கே பல கோவில்கள் இன்று இல்லை.

-இந்துகள் என்பது ஒரு குறிப்பிட்டு காட்டிவிட கூடிய மதம் அல்ல. அது இந்த மண்ணை புனிதமாக்கும் ஒரு கலாச்சாரம். இன்று நாம் குறிப்பிட்டு காட்டும் இந்துமத கட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. சில நூறு ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், சமய பெரியவர்கள் என்று கூறலாம். எனவே சுருக்கமாக கூறினால் பல்லுருவ வழிபாடு கொண்டவர்கள் ஹிந்துகள்.. (குறிப்பு : ரோம், எகிப்த், அரபியர்கள் என்று எல்லோரும் பல்லுருவ வழிபாடு தான் கொண்டிருந்தனர். மேற்கத்திய நாடுகளில் கிருஷ்து வந்து சென்று 300 ஆண்டுகள் ஏதோ ஒருகாரணத்தால் பெண் கடவுள்களை வணங்குவதை பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகி அது சாத்தானை வணங்கும் கூட்டமாக காட்டபட்டு முற்றிலும் அழிக்கபட்டனர்.. ஏறக்குறைய 30லட்சம் மக்கள் இறந்தனர் என்பது வரலாறு. இதே போல் அரபு தேசம் முழுவதும் இஸ்லாம். அதே போல் எல்லா இடங்களிலும் பல்லுருவ வழிபாடு முழுமையாக அழிந்தது... ஆசியாவில் ஹிந்துகளை தவிர. இன்றும் பெண் கடவுள்களாய் வணங்கும் மிக பழமையான மதம் இதுவே.}
2)மிக முக்கியமான விசயம்
ஏறக்குறைய 3000 வருடம் முன்னர் தெற்காசியா முழுவதும் பரவி இருந்து இந்த மக்கள் ஒரு பக்கம் காளி அம்மன் , துர்க்கை அம்மன் என்று பெண் கடவுள்கள் வழிபாடு இதற்கு பெயர் "சாக்தம்", இன்னொரு பக்கம் சிவன் ஆதியும் அந்தமுமாக அவரை முதற்கடவுளாக கொண்டு ஒரு வழிபாடு இது "சைவம்", இன்னொருபக்கம் விஷ்ணு அவர் தம் அவதாரமாக கொண்டு வழிபாட்டுமுறைகள் இது "வைணவம்" , இன்னொரு பக்கம் முருகன் முதல்கடவுளாக கொண்ட "கௌமாரம்" , இடையில் அனைத்துக்கும் மூலகடவுளாக கணபதி முன்னிறுத்தி ஒரு சமய வழிபட அது "காணாபத்தியம்". இது போதாதென்று சூரியனே அனைத்துக்கும் காரண கர்த்தா இந்த பூமியில் உயிர்கள் பிழைத்து வாழ, எனவே சூரியவழிபாடு அது "சௌரம்".
இப்படி 6 பெரும் பிரிவாக இந்த தேசத்தில் நின்றது இந்த மதவழிபாடுகள். (சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம்.)
இந்த பிரிவும் தாங்கள் வழிபடும் முறை தான் சிறந்தது என்ற மனபான்மையும் இவர்கள் இடையே ஏறக்குறைய 2000 வருடம்முன்னர் பிரச்சனை வெடிக்கிறது. இது தான் இந்த சமயம் சந்தித்த முதல் பெரிய பிரச்சனை.{இரண்டாவது பிரச்சனை ஜாதிய பிரிவினை}
-தவிர அய்யனார் , கருப்பு, நல்கதேஸ்வரி, மீரா என்று சில நூறு தேவதைகள் , வாழ்ந்து இறந்தவ நல்ல மனிதர்கள் போற்றி வழிபாடுகள்... அது போதாது என்று வீட்டு சாமி , காவல் சாமி , சித்தர்கள், ரிஷிகள் வழிபாடு என்று மிக பெரிய அளவு பிரிவுகளாக இருந்த பல்லுருவ வழிபாடு கொண்ட சமூகமாகமாக விளங்கியது... மேற்கூறிய அனைத்தும் தனி தனியே சடங்குகள் , வழிபடும் முறைகள் என்று தனிதுவம் பெறவே அதுவே பிரச்சனையை வழிவகை செய்தது. {தமிழகத்தில் அய்யனார் , பாண்டி என்றால் அதே போல மேற்குவங்காளத்தில் நல்கதேஸ்வரி என்று இந்தியா முழுவதும் தேவதைகள் வழிபாடு உண்டு.}
இப்போ இதனை ஒன்றுபடுத்த வேதம் நன்கு தெளிவுபெற்ற ஆன்மீக பெரியவர்கள் களம்காண்கிறார்கள். அதாவது இந்த 6 பெரிய மத பிரிவுகளை ஒன்றினைக்க பலவழிமுறைகள் தேடி ஒன்றினைத்து ஒற்றுமையை கொண்டுவருகிறார்கள்.. (இருந்தும் மோதல்கள் இருந்தே வந்தன என்பது மிக முக்கியம். நன்கு கவனித்தால் அனைத்து இடத்திலும் இந்த புத்திசாலிதனமான இணைப்பு அப்படமாகவே தெரியும்.)
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தின் பின்னாலும் இந்த மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி தெரியும். பண்டிகைகள் பல வந்ததே இதன் காரணமாக தான்.
இந்த மிக பெரிய வேலையை முடிக்கவே 1000 வருடம் மேல் போராட வேண்டியதாகிட்டது இந்து சமய பெரியவர்களுக்கு. ஆதிசங்கரர்,நம்மாழ்வார் , அபினாவ், அவ்வையார், காளிதாசர், காரைக்கால் அம்மையார், மங்கயர்கரசியர், நாயன்மார்கள் என்று அறத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஒன்றுபடுத்தினர். யாரும் பகை அல்லது பிரிவினையை ஆதரித்து பேசவில்லை.
மிக மிக முக்கியம் வேறு எந்த நாட்டிலும் ஒரு மதம் வரும் போது அங்கே முன்னர் இருந்த வழிப்பாட்டை அழித்து விட்டு ஒரு முகபடுத்தி ஆன்மிகம் முன்வைத்தனர், ஆனால் இங்கே இந்தியாவில் எந்த மதத்தையும் நம்பிக்கையையும் அழிக்காமல் ஒன்றுபடுத்தினார். இது தான் இந்த மண்ணின் கலாச்சாரம். இயேசு வந்தால் அவரையும் அனுமதிப்போம் - சில ஆயிரம் சித்தர்கள் இருக்கிறார்கள் அவரும் இருந்துவிட்டு போகட்டும். அவர் சொன்ன நல்ல கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க என்ன தப்பு இருக்கு?
பிரச்சனை- அவர் சொன்னதை கேட்க வேண்டும் என்றால் - நாங்கள் எங்கள் இந்த கலாச்சாரத்தை விட வேண்டும் , பெயரை மாற்ற வேண்டும் , பல ஆயிரம் காலமாக இருந்து வந்த இந்த நாட்டை, மண்ணை புனிதமாக கருதாமல் ஜெருசலேம் எங்களுக்கு புனித மண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பொது தான் பிரச்சனை எழுகிறது.
இங்கே மதம் கட்டாயபடித்த படவில்லை... மிக மிக முக்கியம். ஏன் என்றால் இந்த மதம் நாத்திகர்களையும் கூட அனுமதித்தது. நாத்திகம் தவறாக சொல்லவில்லை மனதிற்கு நேர்மையாக அறத்துடன் வாழ்தால் அதுவே சாலசிறந்தது தான். தினசரி தேவைக்கு கடவுளை வணங்கும் மக்களையும் அனைத்து கொண்டு - உருவ வழிபாடு விட்டு இயற்கையில் இறைவனை தேடிய வரை அனைவரையும் இணைத்து கொண்ட ஹிந்து மததை அழிக்க நினைப்பது என்ன ஒரு கேவலமான புத்தி?.
3.யாரும் கீதை படிக்கவில்லை?
இந்த தேசம் முழுவதும் சமய பெரியவர்கள் பயணம் செய்தனர், அப்படி செல்லும் இடங்களில் அந்த அந்த வட்டார மொழிகளை கற்று அதன் மூலமே வேதம் வாய்வழியாக போதித்தனர்.. அதாவது வாழ்வின் அறம் எது என்பதை போதித்தனர்.. காரணம் ஒற்றுமையாக, அறத்துடன் வாழ்வு இருக்கவேண்டி.
"திருவள்ளுவர் தொட்டு ஒளவை ஆரம்பித்து எல்லோருமே உயிர்களை கொன்று உணவாக உண்பதை முழுமையாக எதிர்த்தனர். இந்தியா முழுவதுமாக இந்த பிரதிபலிப்பை எளிதில் காணலாம். இவர்கள் எல்லோரும் என்ன ஹிந்துதுவாவாதிகளா? ஏன் என்றால் வாய் வழி கற்பிக்கபட்ட வேதமானது அதயே தான் கூறுகிறது. "
"பல மன்னர்கள் ஆட்சி தான். ஆனால் அனைவரும் நன்கு கவனித்தால் பொருளாதார விதி ஒரே போல் இருக்கும். அதாவது வரிவசூல் ஆரம்பித்து, நாட்டை நடத்தி செல்வது வரை அனைவரும் பொதுவாக கொண்ட விதி அர்த்தசாஸ்திரம் கூறியுள்ள வழிமுறையின் பிரதிபலிப்பு தெரியும்."
எனவே கீதை படிக்க விடவில்லை என்ற கூறுவது முட்டாள் தனம். கீதை சொன்ன தத்துவத்தை கொண்டு சேர்த்தார்கள். கீதையை சேர்த்தாலும் ஒன்று தான் அது சொல்லும் நல் அறத்தை சேர்த்தாலும் ஒன்று தான். இடையில் வந்த இந்த ஜாதிய ஏற்ற தாழ்வு தான் இவர்களை பிரித்து நாசம் செய்தது தவிர வேத காலத்தில் அனைவருமே வேதம் கற்றனர். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. வேத வியாசர் தொட்டு ஜபாலி ரிஷி வரை பலர் எடுத்துகாட்டு உண்டு.
எனவே ஹிந்து என்பது ஒருவர் உருவாக்கி, கட்சி போல கொள்கைகள் கொண்டு மதம் மாற்ற உலகம் முழுவதும் போய் வாருங்கள் , மற்ற மதங்களை அழியுங்கள் என்று கூறிய மதம் அல்ல. அனைத்தையும் தன் உள்ளே இழுத்து கொள்ளும் ஒரு திறந்த ஆன்மீக தேடல் கொண்ட மிக எளிமையான வாழ்வு முறை தான் இந்த மதம்.
இன்னொரு விஷயம் புத்தர்- ஹிந்து இல்லை என்று எப்படி ஏன் பிரித்தார்கள் என்று தெரியவில்லை??? அதுவே தவறு என்பது என் தனி கருத்து. ஒரு ஹிந்து அரசர் ஆன்மிகம் தேடல் என்பது மிக இயற்கையான ஒன்று, அவருக்கு வேதம் தெரியும். அவர் என்றுமே வேததை நிராகரிக்கவில்லை என்னும் போது மக்களுக்கு ஆன்மீக தேடலின் வழியை காட்ட முற்பட்டவரை தனியா இந்த மண்ணில் இருந்து பிரித்த மேற்கத்திய சிந்தனை என்னால் ஏற்க முடிவது இல்லை..
உலகத்திற்கே soulology கொடுத்தது இந்த மண். இந்த மண்ணின் புனிதம் புரியாமல் பிதற்றுவது வெக்ககேடு. நான் ஆன்மீக வாதி இல்லை. நான் கொண்ட புரிதலை உங்களுடன் பகீர்ந்தேன்.
------------------------------------------
இறுதியாக :
சீமான் போன்ற கிருஷ்டவர்கள் அவர் மாமியார் என்ன சொன்னாலும் வேதம் என்று நினைப்பதை விட்டு விட்டு - கிருஸ்தவ மதம் மாற்றும் கூட்டங்கள் சொல்லும் "திருவள்ளுவர் கிருஸ்தவர் , முருகன் கிருஸ்தவர்" என்ற கேவலமான பல்லவியை இனி பாடவேண்டாம் என்று கேட்டுகொள்வேன். இது நிச்சயம் ஹிந்து - கிருஸ்தவ மதத்திற்கு இடையே மிக பெரிய மத மோதலை தமிழகத்தில் உருவாக்கும்.
மாற்று மத உள் விவகாரத்தில் வருவதை சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும்.
புனித பூமி என்று வட மாநில மக்கள் தெற்கே திருப்பதி , ராமேஸ்வரம் தேடி வருகிறார்கள்... தென் மாநில மக்கள் ஆன்மிகம் தேடி காசி , கங்கை, வைஷ்ணவி தேவி என்று வடக்கு நோக்கி செல்ல ஹிந்துகள் அனைவருக்கும் இந்த மொத்த நாடும் புனித பூமி.. சரி தானே? ஒரு ஹிந்து அமெரிக்காவில் இருந்தாலும் , ஆஸ்திரேலிய சென்று குடியேறினாலும் அவனுக்கு ஆன்மீக தேடல் இந்த மண்ணில் தான் இருக்கும். அவனுக்கு புனிதம் இந்த நாடு.
எப்படி ஆப்ரகாம் வழிதோன்றல்களால் உருவான மதங்களுக்கு பாலஸ்தீனம் , காசா , ஜெருசலேம் தானே புனித பூமி அது போல. ஆக ஆப்ரகாம் மதங்களில் சீமானுக்கு பிரச்சனை இல்லை - ஆனால் முருகன் வழிபாடு பிரிவினை தேடுகிறார்கள் என்றால் என்ன ஒரு கீழ்த்தரமான ஜென்மம் இந்த சீமான்?
யார் ஹிந்து என்று எளிமையான விளக்கம் கேட்டால்? இந்த இந்தியாவை புனிதமாக கருதும் யாரும் ஹிந்து தான். அனைத்து வழிப்பட்டு முறைகளையும் மதித்து நடந்து கொள்ளும் குணம் ஹிந்து. BJP சொல்வது இது தான் மதம் அல்ல விஷயம் இந்த மண் , அதற்கான புனிதம் அதுவே முக்கியம். அதனால் தான் சூபி இஸ்லாம் மக்களுக்கும் பிஜேபிக்கும் பிரச்சனை வருவதே இல்லை. ஆனால் ஜாகீர் நாயக் போன்ற சவூதி அரபிய கலாசாரத்தை இந்தியாவில் பரப்ப விரும்பும் வகாபிச இஸ்லாம் பரப்பும் நபர்களுக்கும் பிஜேபிக்கும் ஆகவே ஆகாது. (2016 சூபிகள் மாநாட்டை தொடக்கி வைத்தவர் மோடி என்பது நினைவில் இருக்கட்டும்)
சீமான் என்ற செபாஸ்டீன் ஒரு முட்டாள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
-மாரிதாஸ்