2G ஊழல் வழக்கு - அனைவரும் விடுதலை.
எந்த ஒரு தீர்ப்பு நீதிமன்றம் விசாரணை செய்து வெளியிட்டாலும் அதனை மதிக்கும் பக்குவத்திற்கு மக்கள் வரவேண்டும். உயர் நீதிமன்றம் , ராணுவம் , பசுமை தீர்ப்பாயம் , பாராளுமன்றம் , தேர்தல் ஆணையம் என்று அரசின் உயர்வான அனைத்து அமைப்புகளையும் நாம் மதித்து நடந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.அந்த வகையில் நான் தீர்ப்பை தற்காலிகமாக ஏற்றுகொள்கிறேன். ஆனால் தீர்ப்பை மேல்முறையீடு செய்து குற்றம் நிருபிக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.
மற்றபடி இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் தங்கள் வெற்றியாக எடுத்து கொள்ளலாம். காங்கிரஸ் - திமுக ஆட்சி இருக்கும் போது கடைசி 5வருட ஆட்சியில் நாட்டு நலத்திட்ட விசயத்திலா வேலை பார்த்தார்கள்???? செய்த ஊழல்களுக்கு இருந்த ஆதாரங்களை தேடி அழிப்பது தான் முழு நேரம் வேலை பார்த்தார்கள். எனவே அந்த வகையில் தீர்ப்பை தாராளமாக தங்கள் வெற்றியாக திமுக - காங்கிரஸ் கொண்டாடலாம்.
ஆனால் நாடும் , நாட்டு மக்களும் இதை நம்பபோவது இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை , காங்கிரஸ் ஆட்சியில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ள வகையில் தான் கனிமொழி , ராசா அவர் கூட்டம் தப்பியுள்ளது என்பது தான் என்னை பொறுத்தவரை உண்மை. பிஜேபி இதில் மன்னிப்பு கேட்க அவசியமே இல்லை.. ஏன் என்றால் பிஜேபி இந்த ஊழல்விவகரம் , முறைக்கேடு விஷயத்தை கிளப்பியது தவறு என்றால் எதற்கு 2012 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்????
ரத்து செய்துவிட்டு 2014ல் மீண்டும் ஏலம் விட்ட போது அரசுக்கு Rs. 61,162 கோடி லாபம் எப்படி கிடைத்தது????? அப்போ தவறு நடந்தது அப்பட்டமான ஒன்று.
எனவே குஸ்பு முதல் ராகுல் வரை இதில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கு??? வெக்கம் கேட்ட கூட்டம்.
எனவே
"ஊழலே நடக்கவில்லை என்று கூறவில்லை; தகுந்த ஆதாரம் இல்லை என்று தான் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்".
பிஜேபி இந்த விவகாரத்தை எழுப்பியது - நீதிமன்றம் சென்றது அனைத்துமே சரி. {இன்னொரு விஷயம் 2014ல் ஏப்ரல் மாதம் இந்த வழக்குக்கு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தார்கள். அந்த மாதம் தான் நாடாளுமன்றம் தேர்தல் வந்தது. அதாவது திமுக-காங்கிரஸ் சேர்ந்து ஆதாரம் அழித்து அந்த வழக்கை இல்லாமல் செய்தது தான் அவர்கள் ஆட்சியில் இருந்து செய்த கடைசியாக பணி. மோடி ஆட்சிக்கு வருவது அதன் பின் தான். இப்படி வழக்கை தந்திரமாக நாசம் செய்துவிட்டு போன காங்கிரஸ் - திமுக இன்று வாய்மை , நேர்மை என்று பேசுவது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாத கூட்டம்.}
{இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் நக்சல் அமைப்பினர் இந்தியாவை விமர்சிக்க கிடைத்துவிட்டது இந்த தீர்ப்பு. இனி வலைத்தளம் முழுவதும் இந்தியாவை கீழ்த்தரமாக தாழ்த்தி விமர்சித்து மிமீஸ் பரப்பும் வேலையை கொண்டாட்டமாக ஆரம்பித்துவிடுவார். அப்படியே மோடியையும் வழக்கு தீர்ப்பில் சேர்த்து விமர்சிக்கவும். நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் அவரை கோர்த்து விட்டு பேசியே வந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை என்றால் தூக்கம் வராது} . எது எப்படியோ....
"விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை" என்று சர்க்காரியா கமிஷன் 1976களில் சொன்ன கூற்று 41வருடங்கள் கழித்து மீண்டும் நிரூபிக்கபட்டுள்ளது.
-மாரிதாஸ்