Thursday, December 28, 2017

Keerthivasan

சேலம் உருக்காலை salem steel plant (ssp) தனியார் மயமாக்கல்

சேலம் உருக்காலை salem steel plant (ssp) தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிஜேபி, மோடி அரசு ஏன் எடுக்கவேண்டும்? பிஜேபி இப்படி தனியார் மயம் என்று செயல்படுவது சரியா? {கேள்வி: அருண்}


மாணவர்கள் பிளிஸ் கொஞ்சம் இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ளுங்கள். அது மிக அவசியமான ஒன்று உங்களுக்கு என்று கூறி இந்த பதிவை தொடர்கிறேன்.

இந்திய பொருளாதரம் எப்படி வடிவம் பெற்றது என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள் , பின்னர் அதன் வளர்சி ஏன் மற்ற நாடுகளை விட முக்கியமாக சீனா போன்றவை விட பின் தயங்கியது என்பதற்கு காரணமும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அது முதல் அவசியம், அப்போது தான் இந்த விதம் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நாம் புரிந்துகொள்வது எளிது.

நேரு சுதந்திர இந்தியாவில் எப்படி உற்பத்தி துறையை, சேவை துறையை வடிவமைத்தார் என்றால் - நாட்டில் உள்ள பெரும் வளங்கள் எல்லாம் அரசு நடத்தும் - மற்றவை தனியாருடன் சேர்ந்து அரசு செய்யும்.

அதாவது ரயில்வே , தூர்தர்சன் , நிலக்கரி , துறைமுகங்கள், எரிவாயு , மிம்சாரம் , விமான போக்குவரத்து , பேப்பர் , காப்பர் , டெலிகாம் , அலுமினியம் ஆலை, ஸ்டீல் ஆலைகள், துறைமுகங்கள் என்று இயற்க்கை வளங்கள் , பெரும் சேவைகள் எல்லாமே அரசிடம் இருந்தது. இவைகளை கொண்டு உருவான சுமார் 320 நிறுவனங்கள் அரசிடம் Central Public Sector Enterprises கீழ் இயங்குகின்றன.

indian railway, AIR INDIA LTD, COAL INDIA LTD, GAIL (INDIA) LTD,FOOD CORP OF INDIA, HEAVY ENGINEERING CORP LTD, NATIONAL ALUMINIUM CO.LTD இப்படி 64 பெரும் நிறுவனங்களும் - BHARAT DYNAMICS LTD.,HINDUSTAN SHIPYARD LTD,HMT BEARINGS LTD என்று இரண்டாம் மூன்றாம் தர நிறுவனங்கள் சுமார் 256 நிறுவனங்கள் அனைத்துமே இந்திய அரசின் கீழ் இயங்குகின்றன. அதாவது வளம் கொட்டும் லாபம் தரும் அத்தனை துறைகளையும் அரசிடம் சென்று சேர்ந்தன. இதன் மூலம் நவீன சோசியலிசம் சிந்தனையுடன் 1950களில் தேசம் நகர தொடங்கின. முதல் பத்தாண்டுகளில் HMT(Hindustan Machine Tools Limited) போன்ற நிறுவனகள் இந்த தேசம் ஒரு கோவில் என்றால் இவை கோவில் கலசங்கள் என்று கூறும் அளவுக்கும் அரசுக்கு வருமானம் ஈட்டி கொடுத்தன. ஆனால் பிற்பாடு இந்தகா வளர்ச்சி சரியாய் தொடங்கி ஒரு மந்த நிலையை கடந்த 50வருடம் மேலாக நிலவுகிறது.

ஆனால் இந்தியாவின் உற்பத்தி துறையில் தனியார் கம்பெனிகள் கடந்த 40வருடங்களில் முன்னேறி சாதித்ததை விட 70வருடங்கள் மேல் இயங்கும் இந்த வளமான அரசு நிறுவனங்கள் சாதித்தது மிக மிக குறைவு. இத்தனைக்கும் அனைத்து வளங்களையும் கையில் வைத்து கொண்டு ஏன் எந்த நிலை????

இந்தியாவில் அனைத்து பெரும் வங்கிகளையும்(Public Sector Banks மொத்தம் 21) கையில் வைத்திருந்த அரசு ஊழியர்கள் வங்கியை நடத்திய லட்சணத்தால் தான் இன்று சுமார் 8லட்சம் கோடி வாராகடனை கணக்கு காட்டி வங்கிகளை, நாட்டை திவால் ஆகும் நிலைக்கு தள்ளியுள்ளனர். ஆனால் தங்களுக்கு வருமானம் போதவில்லை என்று ஒரு பக்கம் போராட்டம் நடத்துவது - இன்னொரு பக்கம் எவன் வீட்டு சொத்து எப்படி போனா என்ன என்ற வகையில் லஞ்சம் வாங்கி வாங்கி இந்த அனைத்து பெரும் அரசு நிறுவனங்களையும் நாசம் செய்தது வேறு யாரும் இல்லை இந்த அரசு ஊழியர்கள் தான். அவர்களுடன் கைகோர்த்த அரசியல்வாதிகள்.

இதனால் அரசு எடுத்து செல்லமுடியாத துறைகளில் தனியார் அனுமதி வழங்கும் வேலையும் அரசு செய்தது.
------------------------------------------------------
இன்று நீங்கள் கேட்ட SAIL:

சரி அந்த வகையில் இன்று SAIL(Steel Authority of India Ltd) இந்த இரும்பு ஆலையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 1954ல் இருந்து இயங்கும் இந்த நிறுவனம். இதன் கீழ் வரும் முக்கியமான 8 உருக்காலைகள்

Bhilai Steel Plant,Durgapur Steel Plant,Rourkela Steel Plant,Visvesvaraya Iron & Steel Plant,Salem Steel Plant,Chandrapur Ferro Alloy Plant,Bokaro Steel Plant,IISCO Steel Plant

இந்த ஆலைகள் மூலம் வெளியாகும் பொருட்கள் என்று பார்த்தால் ரயில் தண்டவாளங்கள் -ரயில் பேட்டிகள் நட்டுகுகள் , கப்பல்கட்ட தேவையான steel Plates- கார் , ஏசி, வாஷிங் மெசின், பீரோ ,கட்டில் என்று வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க தேவையான cold rolled steel- வீடு, பாலம், பெரும் கட்டுமான பணிகளுக்கு தேவையான TMT , Bars,Rods - கேஸ் சிலிண்டர்கள் , எண்ணேய் சேமிப்பு கிடங்குகள் , எரிபொருட்கள் கொண்டு செல்லபடும் வாகனங்கள் என்று பல தயாரிக்க தேவையான Hot Rolled Steels- விண்வெளி ராக்கெட் , ராணுவம் , விமானங்கள் தேவைப்படும் Special Steels என்று உங்களை சுற்றி உள்ள உலகத்தை பாருங்கள் அனைத்துக்கும் தேவையான ஸ்டீல் உற்பத்தி இங்கே தான் நடக்கிறது. ஆக இது எவ்வளவு முக்கியமான துறை என்பது உங்களுக்கு புரிகிறதா?

இதன் தேவை மிக அதிகம். தேவைக்கு தகுந்த உற்பத்தி நாம் பெருக்க வேண்டும். உண்மையில் ஏற்றுமதி செய்வதை விடவும் இறக்குமதி ஆகாத வண்ணம் நாம் நமக்கு தேவையான அளவாது இந்த ஸ்டீல் தேவையை பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். இதை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள். அதாவது நம் உள்நாட்டின் தேவைக்கு தகுந்த ஸ்டீல் நமக்கு இங்கே கிடைக்கவேண்டும்.

Essar Steel, Bhushan Steel, Monnet Ispat, Electrosteel Steel, JSPL இவை தனியார் உற்பத்தி நிறுவனங்கள்.

------------------------------------------------------

இந்த நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான விவரங்கள் உங்களுக்கு :

1.2004ல் இந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வரும் காலங்களுக்கு தேவையான உற்பத்தி திறனை கூட்ட 25,000கோடியில் expansion programme அறிவிக்கபட்டது. 2000, 2001, 2002களில் மிக பெரிய நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களில் முதலில் இருப்பது இந்த SAIL தான், நஷ்டம் -1,698.85 , -1,696.37 அது கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்ய 2007, 2006 களில் 4,012.97 கோடி , 6,202.29 கோடி லாபம் ஈட்டியது. சென்றவருடம் -4,137.26 நஷ்டம்.
விஷயம் இது தான் இங்கே மிக அதிகப்பதியான தேவை இருக்கிறது - ஆனால் நிறுவனம் லாபகரமாக இயங்கவும் இல்லை - பெரிய அளவில் வளர்சியும் இல்லை.

2.iron & steel industry பொறுத்தவரை இந்தியாவின் ஆண்டு உற்பத்தி திறன் 2000களில் 26.9 million metric tons உற்பத்தி செய்த இந்தியா - 2007ல் 53.5MMT , 2013ல் 81.2MMT , 2016ல் 95.6MMT மொத்த உற்பத்தி திறனை அடைகிறது. ஆனால் இதை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மொத்தமாக நாட்டின் உற்பத்தி என்று கொள்ளவும். (2016ல் நாட்டின் ஸ்டீல் உற்பத்தியில் நிறுவனங்களின் பங்களிப்பு TATA Steel Group 95.6 mmt , JSW Steel Limited 14.9, SAIL 14.4mmt , Essar Steel Group 7.5mmt, JSPL 3.5mt)

3.இந்திய வங்கிகள் வாராகடனாக இருக்கும் கடனில் இந்த ஸ்டீல் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள் தான் மிக அதிகம். அதன் மதிப்பு மட்டும் சுமார் ₹1,48,289கோடி. இந்த கடனை திரும்ப செலுத்தாத சூழல் கடந்த 10ஆண்டுகளில் உருவாகியுள்ளது.

4.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் விலை இந்தியாவில் உற்பத்தியாவதை விட மிக குறைவு என்பதால் அதற்கு இறக்குமதி தேவை அதிகம் ஆகிவிடுகிறது. எளிமையாக கூறினால் 900 sq ft அளவில் வீடு கட்டுமானம் செய்தால் அதற்கு சுமார் 4000கிலோ ஸ்டீல் தேவை என்றால் - இந்திய உற்பத்தியாகும் ஸ்டீல் விட சீனாவில் உற்பத்தியாகும் ஸ்டீல் கொண்டு கட்டுமானம் செய்ய உங்களுக்கு சுமார் 60,000ரூபாய் குறைவாக செலவாகும் நிலை. இதனால் இறக்குமதி அதிகரிக்கிறது.

5.இந்திய நிறுவனங்கள் பெரும் சவாலி சந்திக்கக் - அரசிடம் இறக்குமதி வரியை அதிகபடுத்த கேட்டுகொள்ளபடுகிறது. அதன் படி அதிகபட்ச மதிப்பான 25%இருக்குமதி வரி விதித்தும் கூட இந்த சவாலை அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. அதே நேரம் நாட்டின் தேவையும் உள்ளது என்பதால் இது ஒரு சிக்கலான விவகாரம். இன்னும் அதிகம் வரி கூட்டவும் முடியாது - அது WTO மீறும் செயலாகும்.

ஆக மோடி பதவிக்கும் வரும்போது இருந்த பிரச்சனை ?

வாங்கிய கடனை கொடுக்க வில்லை என்று ஸ்டீல் நிறுவனங்கள் மீது வங்கிகள் புகார் சொல்ல ; ஸ்டீல் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆகும் செலவினம் கூடுவது முதல் இறக்குமதி ஆகும் சீனாவின் ஸ்டீல் போட்டியால் உருவான மந்தநிலையை கணக்கில் காட்ட ; இன்னொரு பக்கம் SAIL உற்பத்தி எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாது நிற்க , மற்றொரு பக்கம் automobile, அடிப்படை கட்டுமான நிறுவனகள், உள் நாட்டு இராணுவ உற்பத்தி , electrical machinery, புதிய ரயில் உற்பத்தி, renewable, thermal powerஎன்று அனைத்து விதமான உள்நாட்டு உற்பத்திக்கும் Make in India திட்டம் கைகொடுக்கலாம் - ஆனால் அவைகளுக்கு தேவையான ஸ்டீல்?????

2015 ஏப்ரல் மாதம் ஒரிசாவில் உள்ள Rourkela Steel Plant (RSP) உருக்கு ஆலைக்கு சென்ற பிரதமர் மோடி அவர்கள் இப்படி கூறினார் "அமெரிக்காவை விட அதிகம் நாம் ஸ்டீல் உற்பத்தி செய்கிறோம். ஆனால் சீனாவை விட மிகவும் பின்தங்கியுள்ளோம். Make in india திட்டம் நடைமுறைக்கு இருக்கும் இந்த நேரம் நாம் அதிகம் இதில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது".

என்று பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலையில் பிரதமராக உங்களை நீங்களே நினைத்து கொண்டு எப்படி தீர்வு காணலாம் என்று சிந்திக்கவும். உண்மையில் மோடி நல்ல நிர்வாகி. தமிழகத்தில் தான் வேறுவிதமாக திராவிட, கம்யூனிஸ்ட் , திக , விசி இன்னும் மதம் மாற்றும் அமைப்புகளால் தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது.

------------------------------------------------------
இந்த நிலையில் தான் மோடி தலைமையில் ஆனா அரசு - Bhadrawati, Durgapur உருக்கு ஆலைகளுடன் சேலம் உருக்கு ஆலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு எடுக்கிறார். எதனால் ????

Crude Steel உற்பத்தியை கூட்டுவதற்காக 2006-2007களில் அன்று இருந்த மன்மோகன் அரசு ஏறக்குறைய 25,000கோடி முதலீட்டில் விரிவாக்கம் பணிக்கு செலவு செய்து - அனைத்து நிலையிலும் உற்பத்தி திறனை கூட்டுவதற்கு முடிவு செய்தது. அதன் மூலம் SAIL உற்பத்தி திறன் 21.4 mtt ஆக உயரும் என்று அன்று பெருமையாக SAIL நிர்வாகிகள் கூறினார். ஆனால் என்ன நடந்தது??? முதலீடுகள் கிடைத்தும் உற்பத்தி கூடியதா?

2016ல் SAIL உற்பத்தி 14.9mmt - இது 2006ல் எவ்வளவு தெரியுமா? 13.5mmt. கூறுங்கள் என்ன இப்போ மேற்கொண்டு முதலீடு செய்ததால் உற்பத்தி கூடிவிட்டது???? என்ன ஆனது முதலீடுகள்???? இந்த லட்சணத்தில் 2020ல் SAIL உற்பத்தி 60 million tons இருக்கும் என்றும் கூறினார். இதுலாம் காதில் சுற்றும் வேலை. அன்று நிர்வாகம் சரியாக நடந்திருக்கும் என்றால் உண்மையில் நாட்டின் மொத்த உற்பத்தி 180mmt தொட்டிருக்கும்.

ஆனால் இன்றைய உற்பத்தி 95.6MMT மட்டுமே. இப்படி இருந்தால் எப்படி இறக்குமதி குறையும்?? எப்படி உள்நாட்டு உற்பத்தி அதிகம் ஆகும்??? எப்படி வாங்கிய கடனை நிறுவனங்கள் திருப்பி செலுத்தும் நிலை உருவாகும்???? மொத்தமும் நாசம் தான் ஆகும். காங்கிரஸ் தன நிர்வாக திறமை இன்மையை ஒத்துகொள்ளவே மாட்டார்கள்.. செய்வது எல்லாம் செய்ய வேண்டியது. இன்று அனைத்தையும் மோடி தான் காரணம் என்று கூச்சல் போட வேண்டியது. இருக்கவே இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் , தி இந்து , ndtv போன்றவர்கள் கூச்சல் போட.

இதில் இந்த கூத்தை கேளுங்கள்... 2015ல் CBI 13 SAIL உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்கிறது. காரணாம் பணிக்கு ஆட்கள் எடுப்பதில் ஊழல் முறைகேடு. இன்னொரு பக்கம் இந்த விரிவாக்கம் செய்வதற்கு அரசு கொடுத்த முதலீட்டில் ஊழல். சொல்லவே வேண்டாம் நம்ம அரசு ஊழியர்கள் லட்சணத்தை. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாத கூட்டம் அரசு ஊழியர்கள் தான். (சில நேர்மையானவர்கள் தவிர)

இந்த சூழலில் SAIL நஷ்டத்தில் எந்த எந்த units முக்கியமாக பெரும் நஷ்டம் வர காரணம் என்று பார்த்தால் Alloy Steels Plant (ASP), Salem Steel Plant (SSP) and Visvesvaraya Iron and Steel Plant (VISP) இந்த மூன்று இடங்களிலும் நஷ்டம் தொடர்கிறது. அதில் இந்த சேலம் உருக்காலை கடந்த 5வருடத்தில் தொடர் நஷ்டம் மட்டும் அல்ல போட்ட முதலீடும் வீண்.

எனவே அரசு இதனை disinvestment என்ற பொருளாதார காரணங்களால் வேறு வழியில்லாமல் விற்கிறது. இதில் என்ன தவறு இருக்கமுடியும்?

1.உற்பத்தியும் கூட்ட மாட்டோம்
2.லாபமும் கிடையாது
3.வருடம் வருடம் நஷ்டம் கூடிகொண்டே போகும்
4.ஊழலும் செய்வோம்..

தொழில் சங்கங்கள் வைத்து கொண்டு நாடு , விவாகம் எதுவும் அக்கறை இன்று அரசை மிரட்டி சம்பளம் வாழ்க்கையை நகர்த்தும் இந்த அரசு ஊழியர்கள் வைத்து எந்த துறை உருப்படும். அதுவும்

இது வெறும் disinvestment strategy தான். எனவே நீங்கள் நினைப்பது போல வளத்தை அப்படியே தனியாருக்கு தாரை வார்ப்பது அல்ல.

ஆனா அரசே நடத்தனும் நிறுவனத்தை???? என்ன நியாயம் இது. அப்படி என்ன வேண்டி இருக்கு அரசு நடத்த???? இப்படி Telecom industry தனி ஆளாக இருந்த BSNL ஆட்டம் தனியார் வந்த பின் எப்படி மாறி நாட்டுக்கு எவ்வளவு லாபகரமாக மாறியது என்று கொஞ்சம் மேற்கொண்டு படியுங்கள் புரியும்.

அரசுக்கு முறையான வளர்சியும் லாபமும் வேண்டும். தவிர உற்பத்தி அதிகமாகவும் வேண்டும் என்னும் பொது அதை தனியார் நிறுவனங்கள் செய்யும் என்றால் கொடுப்பதில் என்ன தவறு ???? அரசு எடுத்தாலும் ஊழியர்கள் கொண்டு தான் வேலை வாங்கும் - தனியாரும் இதே மக்களை கொண்டு தானே வேலை வாங்க போகிறார்கள். தனியார் என்றாலே எதோ தவறு என்பது போல ஒரு முட்டாள்தனம் எபப்டியோ நாடு முழுவதும் பரவிவிட்டது. உடனே அரசு ஊழியர்களை அதிகம் சட்ட திட்டங்களை கடுமையாக ஆக்கி நடத்த வேண்டும் என்று சிலர் கூறுவார். ஆனால் அதிக கெடுபிடி என்றால் அரசு வேலையே நடக்காது என்பது தான் அரசு துறையை பொறுத்தவரை உண்மை.
-------------------------------------------------------
இறுதியாக :

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் 17,900 கோடி லாபம் தரும் ONGC,10399.03 கோடி லாபம் தரும் Indian Oil Corporation Limited (IOCL),10470.53 கோடி லாபம் தரும் NTPC Limited என்று இந்தியாவில் உள்ள இந்த அரசு நிறுவனங்களை விற்கும் எண்ணம் இல்லை.

எடுத்துக்காட்டுக்கு BSNL, தூர்தர்சன், விமானபோக்குவரத்து போன்றவைகளில் தனியார் வந்த பின் நல்ல முன்னேற்றம் தானே!! அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.... முதலில் BSNL இயங்கிய லட்சனம் அனைவரும் அறிவர். 2001களில் இந்த நிறுவனம் கொடுத்த லாபம் 6,312கோடி. அரசுக்கு இது வருமானமே. ஆனால் BSNL அரசு ஊழியர்கள் இதன் முக்கியத்துவம் தெரிந்து காலம் அது - அடுத்து நடந்தது எல்லாமே கற்பழிப்பு தான். 2002-03 ஆண்டுகளில் இந்த நிருவனம் 76% வருமான இழப்பை சந்தித்து வெறும் 1,444 கோடி லாபம் மட்டுமே கொடுத்தது.

தனியார் பங்களிப்பை அரசு அனுமதி அளித்த பின் மக்களுக்கு நல்ல சேவையும் கிடைத்தது - போட்டி காரணமாக குறைந்த விலையில் சேவை கிடைக்க - இன்னொரு பக்கம் நாட்டுக்கு சுமார் US$ 24.033 பில்லியன் - இந்திய மதிப்பில் சுமார் 1,56,200 கோடி அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. அது தவிர 44,342 கோடி இந்த ஆண்டு வருமானம் மட்டும். இது தவிர ஸ்பெக்ரம் ஏலத்தின் மூலம் மட்டும் Rs 64,000கோடி வருமானம் கிடைத்தது அரசுக்கு. 22 லட்சம் மக்கள் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இது தவிர மறைமுக வேலைவாய்பும் இந்த ஒரே முடிவால் உருவாகிறது. இதை சாதித்தது தனியார் பங்களிப்பால் தான் ஒழிய அரசு BSNL மட்டும் என்று இருந்தீர் என்றால் இந்நேரம் மக்கள் பைத்தியம் பிடித்திருக்கும் அவர்கள் கொடுத்த சேவையில்.

ஆக தனியார் ஒரு துறையில் வருவது என்பது தவறே கிடையாது. அடிப்படையில் இங்கே தனியார் என்றாலே தவறு என்று ஒரு முட்டாள் தனமான போக்கு சினிமாத்தனமாக உருவாக்கி வருவது மாணவர்களை நிச்சயம் கெடுத்து நாசம் தான் ஆக்க போகிறது.

பலநேரம் நாம் வசதியாக அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறுகிறோம் ஆனால் உண்மையான நாட்டை பிடித்த வியாதி அரசு ஊழியர்கள் தான். வெறும் ஜாதி வருமான சான்றிதழ் வாங்கும் பொது வாங்கும் லஞ்சம் தான் நமக்கு அதிகம் தெரியும் - ஆனால் இந்த உற்பத்தி துறைகளில் அரசு அதிகாரிகள் காட்டிய கடமையில் மொத்த வளமும் அரசு நடத்துகிறது, அரசு நடத்துகிறது என்ற பெயரில் அரசு ஊழியர்கள் குடும்பம் தான் தின்று கொழுத்தது. இன்றும் அனைத்துமே அரசு நடத்த வேண்டும் என்று கூறும் முட்டாள்கள் உண்டு.. அது ஒரு தவறான கொள்கை முடிவு என்று சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளே திருத்தி கொண்ட பின் இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் ஊடகங்கள் மொத்த சமூகத்தையும் தவறாக வழிநடத்துவது தான் உண்மை.

அதற்காக அனைத்து அரசு ஊழியரையும் நான் குறை கூறவில்லை - பொதுவாக இந்தியாவில் அரசு ஊழியர்கள் தான் நாட்டின் சாபம்.
சினிமா , கம்யூனிஸ்ட் இந்த இரண்டையும் விட்டு கொஞ்சம் மக்கள் விலகி இருப்பது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

- மாரிதாஸ்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :