Wednesday, March 29, 2017

Keerthivasan

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம் - 1

எட்டுத்தொகைசார்ந்த பரிபாடல்...

பரிபாடல் என்பது எட்டுத்தொகையைச் சார்ந்த சங்கத்தமிழ் நூலாகும்.

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி என்ற கருத்தை இப்பாடல் விளக்குகிறது.

பாடல்
மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!
(பரிபாடல். 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

மறுபிறப்பு என்பது இந்து மதத்திற்கு மட்டுமே உரிய நம்பிக்கை ஆகும். மறுபிறவியை அறுக்க திருமாலின் திருவடியே வழியாகும் என்று கூறப்பட்டுள்ளது.... சங்கத்தமிழரின் சமயம் சனாதனதர்மமே என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இப்பாடல்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை,மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி).


தமிழ் தெய்வங்களை ஏற்கும் சிலர் தமிழ் தெய்வங்களை தம் முன்னோர், தலைவன் என்பதை அழுத்தமாகச் சொல்லி கடவுள் தன்மையைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.ஆனால் இப்பாடல்
மூலம் கடவுள் தன்மைக்கு நம் முன்னோர் தந்த முக்கியத்துவம் புலப்படும்.

மேலும் வடவர் திருமாலை 'விஷ்ணு' என்பர் அதன் பொருள் எங்கும்_நிறைந்தவர் என்பதாகும். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலின் தன்மையைத் தமிழன் தெளிவாக உணர்த்தியுள்ளான்.

தொகுப்பு: Brihaspathyam

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :