Wednesday, March 29, 2017

Keerthivasan

சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம் - 02

இந்துமதம் தமிழருடையதல்ல என்ற போலி வாதம்...


இந்து புராணங்கள் என்பவை ஆரியர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை என ஆங்கிலேயர்கள் உளறிச் செல்ல, அதையே உண்மையென நம்மவர்களும் நம்பிவிட்டனர்.

ஆனால் நம் தமிழ் முன்னோர் இயற்றிய சங்க இலக்கியங்களில் புராணச் செய்திகள் ஏராளமாக உள்ளன, இதன்மூலம் புராணங்கள் நமக்கு அந்நியமானவை என்ற சிந்தனை உடைக்கப்படுகிறது. இதோ ஆதாரம்-

சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
 
வானிடத்தில் பறந்து திரியும்
இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட
நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்
சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
இச்செய்தி பரிபாடலில
  மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
  மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
  பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
             - (பரி.5, 25-27)
இதில் மிக முக்கியமானது அசுரருக்கு வரம் தரும் சிவபெருமானே அசுரரை அழித்த செய்தியாகும். இதன்மூலம்  அசுரர் என்பது  தமிழரைக் குறிப்பிடுவது என்ற விஷப் பிரச்சாரமும் முறியடிக்கப்படுகிறது.அப்படி இருந்தால் தமிழர்கள் வதைக்கப்பட்டதைப் பெருமையாக தமிழ்ப்புலவர்கள் பாடியிருப்பார்களா?

இந்துமதத்தை அந்நியப்படுத்த நினைத்த சிலர் அம்முயற்சி தோற்றதால் எடுத்திருக்கும் புது அஸ்திரம் தான் சைவம் மட்டுமே தமிழர்சமயம் என்ற கருத்தாகும்.

இது உண்மையல்ல வைணவம், சைவம் மற்றும் பல்வேறு வேத கடவுளரையும் சங்கத்தமிழர் வணங்கி வந்தனர். ஆக, சங்கத்தமிழன் இந்துவே.

இவர்களை போன்ற குழப்பவாதிகளுக்காகவே தான் நம் முப்பாட்டன் முன்னரே பதிலடி கொடுத்துள்ளானோ..?

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.
மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும்_இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.


 தொகுப்பு: Brihaspathyam

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :