Monday, December 29, 2014

Keerthivasan

ஓம் என்றால் என்ன? - பாகம் 1

ஓம் என்றால் என்ன? - பாகம் 1

அதாவது "ஓம்" என்பதை ஒரே எழுத்தாக எழுதுவது பண்டைத் தமிழ் வழக்கம்! ஓ-காரத்திலேயே ம-காரமும் சுழி மேல் உட்கார்ந்து, பார்க்கவே மிக அழகா இருக்கும்.

தமிழ்க் கடவுள்களான பெருமாள்/முருகன் ஆலயங்களில், இந்த ஒற்றை எழுத்து "ஓம்"-ஐ, ஒளி விளக்காக, கோபுரத்தில் காணலாம்.
திருவரங்கத்து ஆலயக் கருவறை விமானமே ஓம் வடிவில் தான் இருக்கு! பிரணவாகார (ஓங்கார) விமானம் என்றே பெயர்.

ஆனால் இப்பல்லாம், வடமொழி/இந்தியில் எழுதப்படும் ॐ
என்பதே, பல இடங்களில் பரவலாகத் தென்படுகிறது.

T-Shirts, விளம்பரங்கள், யோகா வகுப்புகள், தியான மையங்கள் என்று பலவும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்து விட்டன. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் "ஓம்" என்பதையே தேடிப் பிடிக்க வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்!
இதைக் கருத்தில் கொண்டு தான், நண்பர் ஒருவர் மிக நல்லதொரு பணியைச் செய்து இருக்கிறார்,

தமிழ் "ஓம்" எழுத்துருவை (Font), இனி வரும் விண்டோஸ் 7.0-இல் இருந்து, ஒற்றையெழுத்து தமிழ் யூனிகோடாக வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் முன்வைத்துள்ளார்,
அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. இது போன்ற ஆக்கப்பூர்வமான தமிழ்/ஆன்மீகப் பணிகள் தான் மனசுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.
இப்போ மேட்டருக்கு வருவோம்!

"அட, ஓம் என்பதே வடமொழி தானே! அதை எதில் எழுதினா என்ன? என்னே தமிழறிவு?"-ன்னு நண்பர் ஒருவர் எள்ளலாக என்னிடம் கேட்டார்.

அட.. பின்னே என்னாங்க? இதெல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் கையில் எடுத்துச் செய்ய வேண்டிய வேலை!.தனி மனிதரா முயற்சி எடுக்கும் என்னை எல்லாம் பாராட்டக் கூட வேணாம்! இப்படியெல்லாம் எள்ளாம இருக்கலாம்-ல?

கரிகாலன்-II என்று எழுதும் போது, II என்ன தமிழா?-ன்னு கேட்க முடியுமா? விட்டா கரிகாலன் என்ன தமிழா?-ன்னு கூட கேட்டாலும் கேட்டுருவோம்.
"II என்ன தமிழா?"-ன்னு கேட்பது போல் இருக்கு, "ஓம் என்ன தமிழா"?
ஓம் என்பது தத்துவம்! குறியீடு.

அது வெறும் வடமொழி மந்திரம் மட்டுமே அல்ல.
அதை எம்மொழியிலும் எழுதலாம்.நம் செம்மொழியிலும் எழுதலாம்.
சொல்லப் போனால் "ஓம்" என்ற ஒலியும் சொல்லும், தமிழில் இருந்தே தோன்றியமைக்கு பல ஆய்வுகள் உள்ளன! ஈழத் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை, "ஓம்" என்று தான் இன்றும் பலுக்குகின்றனர்! கிரேக்க மொழியிலும் "Omega" - Ω உண்டு.

ஓம் என்றால் என்னன்னு தானே அன்று முருகனும் நான்முகனைக் கேட்டான்?

ஓம் என்றால் என்னன்னு தானே அன்று சிவபெருமானுக்கு இரு காதில் ஓதினான்?

ஓம் என்றால் என்னன்னு அன்று முருகப் பெருமான் சொன்னது தான் என்ன?

ஓம் என்றால் என்ன? தொடர் பதிவுகள் இந்த பதிவில் இருந்து துவக்கம்
ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"

அது என்னாங்க உறவு? = பிரிக்கவே முடியாத உறவு.

* ஆண்டவன், "ச்சே, இனி இந்த உயிர்களே வேணாம்"-ன்னு நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவு.

* உயிர்கள், "கடவுளே இல்லை"-ன்னு முழங்கினாலும் பிரிக்க முடியாத உறவு.

* அந்த உறவை உறுதிப்படுத்துவதே இந்த "ஓம்".

"உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது" என்று தெய்வத் தமிழ் ஆண்டாள், இந்த ஓம்-ஐக் கொண்டு இறைவனையே மிரட்டிப் பார்க்கிறாள்

உந்தன்னோடு + உறவேல் + நமக்கு = அ + உ + ம் = ஓம்!
அ, உ, ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் (ஏகாட்சரம்)!.பிரணவம் என்று வடமொழியில் சொல்வார்கள். தமிழில் ஓங்காரம்.

* அ = இறைவன் ("அ"கர முதல எழுத்தெல்லாம். அவனைக் குறிப்பதெல்லாம் "அ"-காரமாய்த் தான் இருக்கும்)

* ம = நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் "ம"-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)

இப்போ, அந்த "அ"-வையும், இந்த "ம"-வையும் எப்படிச் சேர்ப்பது? - "உ" கொண்டு சேர்க்கணும்! "உ"றவைக் கொண்டு சேர்க்கணும்!

* உ = உறவு! "அ"கார-"ம"காரத்தை இணைக்கும் உறவு. இப்போ ஒவ்வொன்னாக் கூட்டிப் பாருங்க.
உந்தன்னோடு = அ
உறவேல் = உ
நமக்கு = ம்
அ + உ + ம் = ஓம்!

’ஓம்’ - நாதம்,பிந்து,கலை மூன்றும்
சேர்ந்த ஆதி ஒலி.மொழி,காலம்,மத மரபு இவற்றைக் கடந்து நிற்பது.
ப்ரணவம் - ப்ர + நவம்
(புத்தம் புதியது)
காலத்தால் ஸ்பரிசிக்கப் படாததது.

அதான் ஆண்டாள், இதை மட்டும் அப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறாள்.

உந்தன்னோடு+உறவேல்+நமக்கு என்பது ஓங்காரம்/பிரணவம் ஆச்சே.. அந்தப் பிரணவத்தை இறைவனால் கூட ஒழிக்க ஒழியாதே..

குறையொன்றுமில்லாத கோவிந்தா, உந்தன்னோடு+உறவேல்+நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது
இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்.
அட, மண்ணுல வந்து பொறந்தாச்சு!

* இனிமேல் "நான் உனக்கு அம்மா" இல்லைன்னு சொன்னாலும் அம்மா, அம்மா தான்..

* இனிமேல் "நான் உனக்குப் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்.

DNA மகத்துவம் அப்படி! ஒன்னும் பண்ண முடியாது! ஓம் என்பதும் ஒரு DNA தான்.

* அ = பரமாத்மா
* உ = உறவு
* ம் = ஜீவாத்மா

இது தான் நம்ம எல்லாருடைய DNA Code ஓங்காரம்! பிரணவம்!

"உ" என்றால் உறவு-ன்னு சொல்றீங்களே! அது என்ன உறவு?

எப்படிப்பட்ட உறவு? அதை DNA-ல கண்டுபுடிச்சிறலாமா?

ஓம்காரம் தமிழ்ச்சொல்லா வடசொல்லா ? இரண்டிலுமே இருப்பது போல் தான் தோன்றுகிறது. அகரம், உகரம், மகரம் என்றும் ஆகாரம், ஏகாரம், ஓகாரம் என்றும் குறிலுக்கு அடுத்து கரமும் நெடிலுக்கு அடுத்து காரமும் பின்னொட்டாக வருவதைத் தமிழில் பார்க்கிறேன். அதே போல் ஓம்காரம் என்று சொல்வது சரி தான். ஆனால் வடமொழியிலும் அகார், உகார், மகார், ஓம்கார் என்றெல்லாம் படித்திருக்கிறேனே.

ஓம் தோன்றியது எப்படி? அதை ஏன் எல்லாத்தோடும் சேர்த்துச் சேர்த்துச் சொல்றாங்க?...இன்னும் பலப்பல கேள்விகள்.....
(தொடரும்...)

ஆக்கம்:  Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :