Saturday, December 27, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - காந்தி Vs. கோட்ஸே

சில நண்பர்களின் காந்தியவாதம் சில நண்பர்களின் கோட்ஸே வாதங்களை படிக்கும் போது வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...
முதலில் காந்திய வாதத்தை பார்ப்போம்:

கோட்ஸேவை பாராட்டினால் வன்முறைக்கு ஆதரவாக இருக்கும், புலிகளின் ராஜிவ் கொலையும் நியாயமானதாக தோன்றும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் சரி என்று வாதம் வரும், காஞ்சி பெரியவரே காந்தியை புகழ்ந்திருக்கார்... இப்படி போகிறது இவர்களின் வாதம்...

கோட்ஸே தீவிரவாதி என்றே இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் போலும். மாப்ளா கலவரத்தையும், வங்க பிரிவினை சோகங்களையும் நேரில் கண்ட இந்து மத பற்று உள்ளவனின் முடிவு இந்த நிகழ்வு.

எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு அதைதான் கோட்ஸே செயல் காட்டுகிறது. புலிகள் ராஜிவை கொன்றது அவர்களீன் சாம்ராஜ்யம் சரிந்துவிட கூடாது என்பதற்க்காக அதே சமயம் தன்னை எதிர்த்த அனைவரையும் கொன்று குவித்தார்கள். அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம் இன துரோகி.
சரி அப்படி புலிகள் போல கோட்ஸே என்றால் முதலில் கோட்ஸே கொன்றிருக்க வேண்டியது கோவால்கரை. காரணம் கோட்ஸேவை அதிகம் எதிர்த்தது இவரே. இந்து மகா சபாவும் இவரின் வீரியத்தை குறைக்கவே முற்பட்டது அதனால்தான் கோட்ஸே எந்த அமைப்பிலும் சேராமல் இதை செய்தார்.

என்ன உளரல்? ஆர் எஸ் எஸிம், இந்து மகா சபாவும் கோட்ஸேவை அடக்க முற்பட்டதா? இந்த கேள்விக்கு உண்மையான பதில் கோர்ட்டில் கோட்ஸே கொடுத்த வாக்கு மூலத்தில் முழுமையாக பதில் இருக்கிறது.

காந்தி செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று எதிர் கோஷம் போட்டதர்கே கோவால்கர் கடிந்து கொண்டார் என்று தெள்ள தெளிவாக வாக்கு மூலம் இருக்கிறது.

அடுத்து அபத்தம் ஐஎஸ் ஐஎஸ் பற்றியது.
கோட்ஸே இந்த கொலையை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்றோ, கன்னிகள் கிடைக்கும் என்றோ செய்யவில்லையே? இதனால் ஒரு தனி மனிதனுக்கு என்ன லாபம் இருந்ததாக நினைக்கிரீர்கள்? உள்ளம் நொந்து கண்ணேதிரே இந்துக்கள் கொல்லப்படுவதை பார்த்து கோபத்தின் உச்சியில் இருந்த கோட்ஸே தன்னை பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. சுட்டதும் ஓடவும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை. தெளிவாக அவர் வாக்கு மூலத்தை கோர்ட்டில் சமர்பித்தார்.

அடுத்த மத மக்களை கூண்டோடு கொல்வதும், வன்புணர்ச்சி செய்வதும் எந்த ஒரு இந்துக்கும் எப்பவும் தோன்றாத ஒரு அபத்தமான சிந்தனை அவர்களோடு கோட்ஸேவை ஒப்பிட்டதே பெரும் தவறு...

பலருக்கும் இன்றும் காந்தி ஆதரித்த கிலாபாத் இயக்கம் பற்றிய உண்மை தெரியாது. இது நமக்கு சம்பந்தமில்லாதது, எங்கோ நடப்பது இதற்க்காக இங்கு போராடுவது தேவையற்றது என்று முதன் முதலில் எதிர்ப்பை தெரிவித்தது யார் தெரியுமா?



சாட்சாத் இந்த நாட்டை துண்டாக்கிய, முஸ்லீம் லீக்கின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா...

நமக்கு தேவையில்லாத ஒன்றுக்கு இங்கு போராட்டம் தொடர்ந்தது இது காந்தியின் எண்ண ஓட்டத்தின் குறையை பறைசாற்றுகிறது.

காஞ்சி பெரியவரே காந்தியை புகழ்ந்தார் என்று இன்னொரு வாதம். இதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? இவர் ஒரு சாது இவரால் பகைவனையும் அரைவணைத்து செல்ல முடியும். சரி அப்படி காந்தியை பாராட்டிய இவர் என்ன செய்துள்ளார்?

மாப்ளா கலவரத்தில் அவதிபட்ட இந்துக்களுக்கு என்ன செய்தார்?
பிரிவினையின் போது கொல்லப்பட்ட இந்துக்களை காப்பாற்ற இவர் பங்கு என்ன?

Calcutta_riots_of_1946




வங்கபிரிவினை தூண்டப்பட்ட போது (சுதந்திரத்திற்கு முன்) இவர் என்ன செய்துக் கொண்டிருந்தார்?

கிலாபத்தை எதிர்த்தாரா?

இவர் ஒரு சமய குரு இவர் இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை, யாரும் எதிர்பாக்கவே இல்லை ஆனால் இதன் உக்கிரத்தை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு யாருமே காந்தி மஹாத்மாவாக இருக்க முடியாது.
கப்பலோட்டிய தமிழன் பிச்சையெடுக்கும் நிலையான போது கூட அவருக்கு சேர வேண்டிய நிதியை வேறு ஒன்றுக்கு செலவழித்துவிட்டேன் என்று சொன்ன உத்தமர் இன்று மஹாத்மாவா?

தனது சபர்மதி ஆஸ்ரமத்தில் எத்தனை நொடிந்த சுதந்திர போராட்டகாரர்களுக்கு புகலிடம் அளீத்தார் என்று லிஸ்ட்டு இருக்கா?

ஆரம்பம் என்னவோ சரியாகத்தான் இருந்தது ஆனால் போக போக தன் சொல்லை அனைவரும் கேட்க வேண்டும் என்று இருமார்பு கொண்டுவிட்டார். தான் என்று நினைக்க ஆரம்பித்தபின் எப்படி மஹாத்மாவாக முடியும்?
ஒரு சாது சொன்னார் என்பதற்க்காக ஒருவரை மஹாத்மாவாக ஏற்க வேண்டிய கட்டாயம் இருக்கா என்ன?

எனக்கு காரணம் தேவையில்லை, கொலை செய்ததே தவறு...
இப்படி ஒரு வாதம். யாருக்காக எதற்காக, எந்த சூழ்நிலையில் என்பது நீதிதுறை வகுத்திருக்கும் வழி...

இதை சொல்பவர்கள் இந்துக்கள் தான். இதனால்தான் இவர்கள் சுரணை கெட்டவர்கள் என்று பரவலாக பேசப்படுகிறார்கள். கொலை செய்தது நியாயமில்லைதான் ஆனால், அன்று காந்தி ஊதும் மகுடியில் ஆர் எஸ் எஸ் உட்பட அனைவரும் மயங்கினர். கோட்ஷேவின் அனைத்து முயற்ச்சியும் தோல்விதான். வேறு வழியில்லை இனி இவரை விட்டால் இந்துக்கள் காணாமல் போவார்கள் என்று நினைத்துதான் இந்த படுகொலை நடந்தது.

அன்று ஒருவேளை கோட்ஸே கொல்லவில்லையென்றால் இன்று கோட்சேவை பலரும் திட்டிக் கொண்டிருந்திருப்பார்கள் அல்லது அதற்க்கு கூட சுதந்திரம் இருந்திருக்காது.

சொல்லப்போனால் இதனால் தான் பலர் காந்தியை மஹாத்மாவாக மாற்றினார்கள். ஆங்கிலேயருக்கு ஒரு வகையில் காந்தி துருப்பு சீட்டுதான். எண்ணிப்பாருங்கள் எத்தனை எத்தனை போராட்ட வீரர்கள் சிறையில் வாடினார்கள்? அவர்களெல்லாம் மஹாத்மா இல்லையா?

வெகுண்டெழுந்த ஒரு சிப்பாய் புரட்சியை இன்று சிப்பாய் கலகம் என்று மாற்றியமைத்தது யார்? அப்போது காந்தி இல்லையே? அப்போது வெகுண்டெழுந்தவர்கள் மஹாத்மாவா இருக்க கூடாதா?

Mangal Pandey


மங்கள் பாண்டே என்றால் நம்மவர்கள் ங்கே யார் அது என்பார்கள், ஆனால் மஹாத்மாவை அனைவருக்கும் தெரியும். ஒருவகையில் காங்கரஸின் வெற்றி இது.

இந்துக்களை ஒரு சின்ன இடத்தில் அடைத்து காக்கா குருவி போல சுட்டு வீழ்த்திய சோக சம்பவம் ஜாலின்வாலபாத். இதை வெறிக் கொண்டு நடத்திய டையரை இருபது வருடம் கழித்து சுட்டுக் கொன்ற உத்தம் சிங்க் மஹாத்மாவாக தெரியவில்லையா?

அவனை கொல்வதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு கொன்றான் உத்தம் சிங்க். யாருக்கு? இந்த சுயபரிசோதனை செய்ய தெரியாத, எப்பவும் வியாக்கானம் பேசி வரும் சொரணையற்ற இந்துக்களுக்காக. உத்தம் சிங்குக்கும் கோட்ஸேவுக்கும் ஒற்றுமை உண்டு.

"பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் (ஜாலியன் வாலாபாத் படுகொலை) தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான்.

இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது."

இந்த செயலுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் காந்தியின் உளரல் என்ன தெரியுமா?

“பைத்தியகாரத்தனமான செயல்”


இவரு மஹாத்மாவா? ஜாலின் வாலாபாதில் செத்தவர்கள் புழுக்களா புச்சிகளா? படுபாவிகளே உங்கள் மதத்தை சார்ந்த மனிதர்கள்... கர்பினிகள் கூட எஞ்சவில்லை... அவனை தண்டித்த ஒருவனுக்கு இவன் கொடுத்த பட்டம் பைத்தியகாரனா? அப்படி சொன்னவன் மஹாத்மாவா? து...

காந்தியை கொன்றவர்கள் என்று பிஜேபியையும், ஜனசங்கையும் குற்றம் சாட்டுவது இப்ப ஒரு ஃபேஷன் அந்த மாக்கான்களுக்கு

காந்தி கொலை நடந்தது 30 ஜனவரி 1948...

முதல் முதலில் ஜன சங்கம் தொடங்கியது 21 அக்டோபர் 1951...

ஜன சங்கம் பிரிந்து பிஜேபி தொடங்கப்பட்டது 6 ஏப்ரல் 1980...

இதிலிருக்கும் அடிப்படை உண்மையை ஆராய உங்களிடமே விட்டுவிடுகிறேன்...


உடனே இது பிஜேபியில்லை ஆர் எஸ் எஸ்தான் காரணம் என்று நீங்கள் உளர கூடும்..

அப்படி சொல்பவர்கள் கோட்ஷேவின் வாக்குமூலம் இன்று புத்தகவடிவில் கிடைக்கிறது படிக்கவும்.

சரி உங்கள் வாதப்படி ஆர் எஸ் எஸ்தான் என்று எடுத்துக் கொண்டாலும். உங்களுக்கான சில ஆதாரங்களை நான் முன் வைக்கிறேன்.

செப்டெம்பர் 24ம்தேதி, கோல்வால்கர் அவர்கள் இரண்டாவது முறை படேல் அவர்களுக்கும், நேரு அவர்களுக்கும் கடிதம் எழுதினார்; ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளும், தேடுதல் வேட்டையும் எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்காததால், குற்றச்சாட்டுகளும், தடை உத்திரவும் திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

செப்டம்பர் 26ம் தேதியன்று படேல் அவர்கள் அந்தக் கடிதத்துக்கு. மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் ப்ரீமியர் ஆர்.எஸ். சுக்லா மூலமாக பதில் எழுதி இருந்தார். அதனோடு கோல்வால்கர் அவர்களை அடையாத முந்தைய கடிதத்தையும் வைத்து அனுப்பி இருந்தார். அனைத்து மாகாணங்களுமே இந்த தடையுத்திரவு தொடர வேண்டும் என்று ஒருமித்த வகையில் கருதுவதால், "அதற்கு ஏதோ ஒரு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

"காங்கிரஸின் விதிகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் செயல்பட வேண்டும் என்று அவர் ஆர்.எஸ்.எஸ்க்கு அறிவுரை கூறியிருந்தார். அதற்கு ஏதோ ஒரு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்பதிலேயே ஆதாரம் ஏதும் இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

"அதற்கு ஏதோ ஒரு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்று தான் பதில் வந்ததே தவிர இதுதான் ஆதாரம் என்று வரவில்லை... இதை சொல்ல என்ன தயக்கம்? சொல்ல வேண்டியதுதானே? சொல்ல இயலாது அங்குதான் ஆதாரமே இல்லையே? போதாகுறைக்கு கோட்ஸே வாக்கு மூலம் கோல்வால்கரையும் சாடியிருந்தார்.

அரசுகளிடத்தில் "ஏராளமான ஆதாரங்கள்" இருப்பதாகவும், உத்திர பிரதேச அரசு ஏற்கெனவே "ஆதாரங்கள்" பற்றிய ஒரு "குறிப்பை" கோல்வால்கர் அவர்களுக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நவம்பர் மாதம் 3ம் தேதியன்று, கோபமுற்ற கோல்வால்கர் அவர்கள், அப்படி எந்த ஒரு "குறிப்பும்" தனக்கு வரவில்லை என்றும், இந்த "ஏராளமான ஆதாரங்களை" வெளிப்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துமாறும் அரசுக்கு சவால் விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ் காங்கிரசோடு இணைய வேண்டும் என்று படேல் அவர்கள் கூறிய அறிவுரைக்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் அரசியல் களத்திலும், ஆர்.எஸ்.எஸ் காலாச்சாரத் துறையிலும் பணியாற்றும் என்று கோல்வால்கர் அவர்கள் பதிலுரைத்தார். கோல்வால்கர் அவர்களின் வெளிப்படையான சவாலுக்குப் பிறகும் எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை.

* கவனிக்க காங்கரசோடு இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது என்பது இங்கு முக்கியம். காந்தியை கொலை செய்ததாக தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் காங்கரஸுடன் இணைய வேண்டும் என்று காங்கரஸ் நினைக்க என்ன காரணம்? இது ஒரு பாய்ண்ட்

* ஆதாரங்கள் பற்றிய குறிப்பு கோவால்கருக்கு அனுப்பிவிட்டதாக உ.பி. அரசு அறிவித்தது அதை உடனடியாக மறுத்த கோவால்கர் அந்த "அனைத்தையும்" சமர்பித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சவால் விடுகிறார் ஆனால், இதை செய்யவில்லை அரசு... ஆதாரம் இருந்தால்தானே அனுப்ப? சட்டம் முன் நிறுத்த? இது முக்கிய பாய்ண்ட்

* கையில் "ஏராளமான ஆதரங்களை" வைத்துக் கொண்டிருக்கும் அரசு காந்தியை கொன்றவருக்கு சப்போர்ட் செய்ததாக குற்றம் சாட்டபட்ட ஒரு அமைப்பின் தலைவருக்கு காதல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்ததை நம்ப முடிகிறதா? அதுதான் காங்கரஸ்

"ஒன்று நிரூபியுங்கள் அல்லது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுங்கள்" என்று அவர் படேல் அவர்களுக்கு சவால் விடுத்தார். தில்லியை விட்டு விலக மறுத்த அவர், ஆர்.எஸ்.எஸ் சேவகர்களை, தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த ஷாகாக்களை மீண்டும் தொடக்க உத்திரவிட்டார்.

உடனடியாக கோல்வால்கர் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

"குற்றச்சாட்டுக்களை நிரூபியுங்கள், தடையை விலக்குங்கள், குருஜி (கோவால்கர்) அவர்களை விடுதலை செய்யுங்கள்" என்று கோரி ஆர்.எஸ்.எஸ் டிசம்பர் மாதம் 9ம் தேதி முதல் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டது. ஒரே மாதத்தில் சுமார் 80000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் தவறு செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

ஜூலை மாதம் 9ம் தேதி, 1949ம் ஆண்டு, "அடிப்படை வேறுபாடுகளைக்" காரணம் காட்டி, அரசு தடையுத்தரவை விலக்கிக் கொள்ள மறுத்தது.
சாஸ்த்ரி அந்த நிலையில், விவாதிக்கப்பட்ட உண்மையான விஷயங்களின் விபரங்களை வெளியிட முடிவு செய்தார் - ”ஒன்று, ஆர்.எஸ்.எஸ் தனது அடுத்த தலைவரை நியமிப்பதில் இருக்கும் அதிகாரம் பற்றியது, மற்றொன்று, அதன் செயல்பாடுகளில் சிறு வயதுடையவர்கள் பங்கு பெறுவது குறித்தது.

"அவர்கள் அரசியல் சார்பில்லாத இயக்கமாக தங்களைக் கூறிக் கொண்டாலும், அரசியல் சார்புடையவர்களாக உடனடியாகக் கூட மாற முடியும்" என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு திரு சாஸ்திரி அவர்கள் பதில் கூறுகையில், "அவர்கள் அரசியலில் ஈடுபடட்டுமே. அப்படி ஈடுபட்டால், அது ஒன்றும் குற்றமில்லையே" என்றார். காந்தியடிகளின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக கருதப்படும் ஐயப்பாடுகள், "எந்த ஒரு உண்மையான அடித்தளமுமே இல்லாதவை" என்றும், சில வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட முடியாதவை என்பதால், தடையுத்தரவை தொடர்வது சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

ஜூலை மாதம் 11ம் தேதியன்று, சாஸ்த்ரியின் அறிக்கை தி ஹிந்துவுக்கு அனுப்பப்பட்டு, அதை ஜூலை மாதம் 14ம் தேதி அந்தப் பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக ஜூலை மாதம் 11ம் தேதியே அரசு தடையுத்திரவை விலக்கிக் கொண்டது. எந்த ஒரு உண்மையான ஆதாரமும் இல்லாத நிலையில் தடையுத்திரவை நீட்டிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்பது அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தடையுத்திரவு நிபந்தனைகளேதுமில்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதோ அதற்கான சான்று. செப்டம்பர் மாதம் 14ம் தேதி 1949ம் ஆண்டு, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்கள் பம்பாய் சட்டப்பேரவையில் சமர்ப்பித்த எழுத்துப் பூர்வமான அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் மீதான தடை இனி தேவையே இல்லை என்று ஒப்புக் கொண்டார்; ஆகையால் அது எந்த நிபந்தனையும் இல்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டது; ஆனால் ஆர்.எஸ்.எஸ் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

இனி எவனாச்சும் ஆர் எஸ் எஸ் காந்தியை கொன்றது என்றால் செருப்பால் அடிப்பேன்...

காந்தியின் பிரதாபங்கள் சிலவற்றையும் (ஆம் முழுவதும் சொல்ல இங்கு இடமில்லை). கோட்சேவின் எதிர்வினையையும் அதனால் சங்கத்திற்கு ஏற்பட்ட சங்கடங்களையும் சொல்லிவிட்டேன் இனி கோட்ஸேவுக்கு கோவில் என்பவர்களுக்கு!

காந்தியை பற்றியும், காந்தி கொலையால் சங்கத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடங்களையும், அரசு தோற்றதையும் பார்க்க நிறைய பத்தி தேவைபட்டது ஆனால், கோட்ஸேவை ஆதரிப்பவர்களுக்கு இது மட்டும் போதும்...

கோட்ஸேவுக்கு கோவில் கட்டும் முன் அவர் எடுத்து வைத்த வாதங்களையும் நியாயங்களையும் முதலில் நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் யாரையாச்சும் தலையில் தூக்கி ஆடுவதும் பிறகு அவர் தவரு செய்தால் திட்டி தீர்ப்பதும் யாருக்கு லாபம்?

கோட்ஸேவின் வாக்கு மூலத்தை நன்கு அறிந்து பலர் அறிய செய்யுங்கள் முதலில்...

அவர் செய்த கொலை நம்ம எல்லோரின் நன்மைக்கு என்று எடுத்துரையுங்கள். என் பிள்ளை காந்தியின் போட்டோவை பார்த்தால் கரம் சந்த் காந்தி என்று சொல்வானே அன்றி மஹாத்மா என்று சொல்ல மாட்டான்.

தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் ஆரம்பகட்ட பணிகள் கிராமபுறங்களில் சுதந்திர உத்வேகம் பரவ உதவியது என்பதையும் மறுக்காதீர்கள். அவர் செய்த மிகப் பெரிய தவறு தான் எடுக்கும் முடிவுக்கு இந்த நாடு பணிய வேண்டும் என்பதே. மஹாத்மாவாக ஏற்க முடியாது ஆனால் சக சுதந்திர போராட்ட மனிதனாக மதிக்கலாம் தவறில்லை என்பதை உணருங்கள். இதையே நீங்கள் போற்றும் கோட்ஸேவும் விரும்பினான் என்பதை உணருங்கள்.

இன்று நாம் பேசும் இந்த சுதந்திரம் பலர் உதிரத்தின் மீது கட்டமைக்கப்பட்டது.

கோட்ஸேவின் நினைவு மண்டபம் அதை பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே இதற்க்கு தீர்வே அன்றி. கோவில் கட்டுவேன் என்பது மடமை.

கோட்ஸே ஒரு நல்ல மனிதன் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை...

என்றும் அன்புடன்
கீர்த்திவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :