இந்த தொடருக்கு காரணம் நமக்குள்ள ஒரு கடமை. அதை நினைவு படுத்தவே. நமது முக்கிய கடமைகளுள் ஒன்று நமது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு மறைக்காமல் சொல்வதே. அதற்கு ஈடு செய்யபடுகிறதோ இல்லையோ அது வேறு. வரலாறு மறைக்கப்படவோ, அழிக்கப்படவோ கூடாது என்பது மரபு. ஆனால் 2014 வரை வந்த அனைத்து அரசாங்கங்களும் முகலாய மற்றும் பிரிட்டிஷாரின் மிச்ச எச்ச சொச்சங்களாகதான் இருந்திருக்கிறார்கள்.
அமெரிக்க அரசு தான் எப்படி அங்கிருந்த பூர்வ குடிகளிடமிருந்து நாட்டை பிடுங்கினோம் என்று வரலாற்றில் எழுதிவைத்து அதை பள்ளியில் பாடமாக வைத்துள்ளார்கள். அங்கிருந்த பூர்வகுடிகளுக்கு அம்மை நோய் வந்து இறந்த மக்களின் கம்பளிகளை கொடுத்து அந்த நோயை பரப்பி, கொத்து கொத்தாக மடிய விட்டார்கள். போரில் கொன்றதை தவிர கத்தியின்றி யுத்தமின்றி கொல்லப்பட்ட முறைகளில் இவையும் ஒன்று. வரலாறு மறைக்கப்பட கூடாது.
1757 பிளாசி யுத்தம் நடந்தது. வெறும் 3000 பேர் கொண்ட பிரிட்டிஷாரின் படைகள் 50000 பேர் கொண்ட வலிமையான சிராஜுதௌலாஹ் மன்னனின் மைத்துனனை விலைக்கு வாங்கி எளிதில் வென்றது. வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இதை வைத்தே பல முன்னேற்றங்களை அவர்கள் சாதித்தார்கள். பல மன்னர்களை மூளை சலவை செய்து இவருக்கெதிராக அவரை தூண்டி விட்டு பணியவைத்து ஒன்றன்பின் ஒன்றாக நிதானமாக வளைக்க ஆரம்பித்தனர்.
1772 ஆண்டில் சந்நியாசி போராட்டம் நடந்தது. நடந்து சென்ற சன்யாசியை நுழைவு வரி கேட்க போய் அது பெரும் கலவரத்தில் முடிந்தது. 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம்.
முஸ்லிம்கள் இன்று நினைப்பது போல இந்த நாட்டை முஸ்லிம்களிடமிருந்து பிரிடிஷார்கள் பிடுங்கவில்லை. சிவாஜி மகாரஜரும் அவரது வழிவந்த பாஜி ராவும் மொத்த முகலாய சாம்ராஜ்யத்தையும் அழித்து விட்டார்கள். கடைசியாக தில்லியில் வெறும் ஒரே ஒரு கோட்டையை மட்டும் அவர்கள் வைத்திருந்தார்கள். இந்த நாட்டை மராட்டியர்களிடமிருந்துதான் பிரிடிஷார்கள் வென்றார்கள்.
இத்தனை போர்கள் நடந்தாலும் தோற்றாலும் போராட்டம் நிற்கவில்லை. ஆயுதம் தாங்கிய போர்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல வந்ததுதான் 1857 முதல் சுதந்திர போர். இது ஒரு சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷ் அரசு சிறுமை படுத்தியது. ஆனால் அவர்களுக்கு தெரியும் அது ஒரு சாதாரண கலகம் அல்ல என்று. கலகம் என்றால் அது அந்த ஒரு பகுதிக்குள்ளே அடங்கி இருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் திடீரென்று ஒரு நாளில் நாடு முழுவதும் அரசை எதிர்த்து ராணுவத்தினர்கள் கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.
உதவியாக இருக்கும் சில சுட்டிகள்:
http://www.slideshare.net/byjoos/leaders-of-1857-revolt
http://www.slideshare.net/shashwatprakash52/revolt-of-1857?related=1
http://vurathasindanai.blogspot.in/2010/09/1857.html
https://www.nhm.in/shop/978-81-8493-116-7.html
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_1857