Tuesday, December 23, 2014

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 5

வங்க பிரிவினையின் திட்டமிடலிலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளிலும் கர்சனுக்கு மூன்று வெற்றி. வங்காளத்தையும் உடைத்து ஹிந்த் முஸ்லிம் ஒற்றுமையை பிரித்தோம், தாங்கள் உருவாக்கிய காங்கிரஸ் தேசபக்தி கனல் கொண்டு தங்களையே எதிர்கிறது என்ற பிரச்னையும் தீர்ந்தது, தீவிரவாதிகள் என்று தனி கோஷ்டியாக செயல்பட்ட காங்கிரஸ்காரர்கள் அனைவரையும் சிறையில் தள்ளியாகிவிட்டது.  அங்கே திலகர் பர்மாவில்.  இங்கே வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனையாக 35 ஆண்டுகள்.  இன்னொரு பக்கம் வங்காளத்தில் அரவிந்தர்.  அவருக்கெதிராக இருந்த அனைத்து சாட்சியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கொல்ல வழக்கே ஒரு கட்டத்தில் நீர்த்து போய் விடுவிக்க பட்டார்.

Subramaniya Siva
4 October 1884 - July 23, 1925 (aged 40)

பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து பிரெஞ்ச் அரசின் கீழிருந்த பாண்டிச்சேரியில் தங்கி முழுமையாக தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுதிகொண்டார்.  அப்போதுதான் சுப்ரமணிய சிவாவும் சிறையில் தள்ளப்பட்டு குஷ்ட ரோகம் கிருமி நிறைந்த  ஊசி போடப்பட்டு அவரை முடமாக்கி பின் 17 ஆண்டுகள் அந்த நோயுடனேயே பல ஊர்கள் சென்று போராடி பின் இறந்தார்.

உடல் நலம் மிகவும் குன்றியதால் 6 ஆண்டுகள் கழித்து வஉசியும் விடுதலை ஆனார்.  அவரை மாட்டை கட்டி இழுக்கும் செக்கு இழுக்க வைத்தனர்.  ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வைத்தனர்.  இப்படி கொடுமை படுத்தியது அனைவரும் வெள்ளையர்கள் மட்டும் அல்ல.  நமதருமை இந்திய போலிசும்தான்.

V.O. Chidambaram
5 September 1872 - 18 November 1936
நாத்தீகர்கள் அவரை ஆங்கில அரசின் ஜால்ராவான ஜஸ்டிஸ் பார்டியில் சேர்ந்து பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க சொன்னபோது, எப்படியப்பா நான் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன்.  சிறை செல்லும்போது நெல்லையே எரிந்தது.  வெளியே வரும்போது யாருக்குமே தெரியாது.  அப்போது என்னை வரவேற்க வந்த ஒரே ஆன்மா G . சுப்ரமணிய ஐயர்.  எனக்காக பல உணர்ச்சிமிக்க பாடல்களை பாடிய பாரதி ஒரு ஐயர், என்னை சிறையில் கொடுமைபடுத்துகிறார்கள் என்றவுடன் ஆஷ் துறையை சுட்டு கொன்றானே வாஞ்சிநாதன் அவன் ஒரு ஐயர்.  எனக்காக, தேசத்திற்காக குரல் கொடுத்து, உடல் கெடுத்து, பசி விடுத்து போராடிய சுப்ரமணிய சிவா அவர் ஒரு ஐயர்.  எப்படி இவர்களுக்கு எதிராக பேசுவேன்.    நான் வெஞ்சிறையில் வாடியபோது நீங்கள் எங்கு போனீர்கள் என்றாராம்.

 இந்த வங்க பிரிவினை போராட்டங்கள் 1905 முதல் 1911 வரை நீடித்தது.  1770களில் வந்த வங்காள பஞ்சத்தால் லட்சகணக்கான பேர் இறந்தார்கள்.  அப்போது வராத கோபம் இப்போது இறைவன் அருளால் பொத்து கொண்டு வந்தது.  1911 ஆண்டு இங்கிலாந்து மன்னன் ஜார்ஜ் வருவதை ஒட்டி இருக்கின்ற ஒரே அமைப்பான காங்கிரசும் எதிர்ப்பு காட்டுமே என நினைத்து மன்னன் இந்த பிரிவினையை ரத்து செய்வதாக அறிவித்தான்.  அதை ஒட்டி அவரை போற்றி இயற்றப்பட்ட பாடலே இன்று நமது தேசிய கீதமான ஜன கன மன.  எது தேச பக்தி பாடலே இல்லையோ, எதை பாடினால் தேசபக்தி உணர்வே வராதோ, எது வெள்ளையனை போற்றி பாடப்பட்டதோ அந்த பாட்டை நேரு தேசிய கீதமென கடும் எதிர்ப்பை மீறி அறிவித்தார்.

1903 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதை ராமகிருஷ்ணா அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அரசியலில் இறங்கினார்.  அப்போதுதான் வங்காளம் கற்றுவந்ததாலும் அவருக்கு இந்த தேசம் விடுதலை பெற ஒரு மகத்தான கோஷம் வேண்டும் என்று நினைத்தாள்.

Bankim Chandra Chatterjee | June 27, 1838 - April 8, 1894 |
Author of Vande Mataram, the national song of India
பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்த மேடம் நாவல் அவர் கண்களில் பட்டது.  அதிலுள்ள "சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம் வந்தே மாதரம்" பாடல் அவரை மிகவும் ஈர்த்தது.  இந்த வந்தே மாதரம்தான் இந்த நாட்டின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.  அதை பிரபலபடுத்த முனைந்தார்.  வருவோர் போவோருக்கெல்லாம் வணக்கம் சொல்லாமல் வந்தே மாதரம் சொல்லச்சொன்னார்.

பிபின் சந்திர பால் அவர்களை வந்தே மாதரம் என்றொரு பத்திரிக்கை ஆரம்பிக்க சொன்னார்.  மகான் அரவிந்தர் ஒரு கல்லூரியில்  பணியாற்றிகொண்டிருக்க அவரை ராஜினாமா செய்ய சொல்லி களத்தில் இறங்க தூண்டினார்.  இந்த வந்தே மாதரம் கோஷம் நாடெங்கும் சட்டென்று பரவ ஆரம்பித்தது.  மிக சக்தி வாய்ந்த மந்திரமாக இது இருந்தது. 

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :