Tuesday, March 24, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 03 - திருக்கோகர்ணம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 03 - திருக்கோகர்ணம்

திருக்கோகர்ணம்.
கர்நாடக மாநிலம்.

திருஞானசம்பந்தர், அப்பர்  தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலம்.

மூலவர்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், கோகர்ணேஸ்வரர்.

அம்மை: கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி 

2000 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த கோயில்.

சரவணன் சிவதாணு's photo. 

பெயர்: திருக்கோகர்ணம்,

திருக்கோகர்ணம் மாவட்டம்,

உத்தர் கன்னடா மாநிலம்,

கர்நாடகா

கோயிலின் அமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பில் இருந்து வேறுபட்டது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.

விரலால் தொட்டுத் தடவியே திருமேனியை உணர முடியும். கோ+கர்ணம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கிறது. பிராகாரத்தில் விநாயகர், இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் "துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. கோயிலே சிவலிங்கவடிவில் காட்சி தருகிறது.

சரவணன் சிவதாணு's photo. மனித உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும், அதன் கடமையை உணர்த்தி பாடிய திருநாவுக்கரசு சுவாமிகள் கால்களை சொல்லும் போது, இந்த கோகர்ணேஸ்வரர் திருத்தலத்தை வலம் வந்து வணங்காத கால்களால் என்ன பயன்? என்று கேட்கிறார்.




"கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்? "
- திருஅங்க மாலை.

தகவல் தொகுப்பு: திரு. சரவணன் சிவதாணு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :