Saturday, June 6, 2015

Keerthivasan

இருக்கு (ரிக்) – வேதம் – முதலாவது மண்டலம் - 02

இருக்கு (ரிக்) – வேதம் – முதலாவது மண்டலம் - 02



1. அக்கினி
1. மதுச்சந்தஸ விஸ்வாமித்திரன்

1. நான், புரோகிதனும்,யக்ஞத்தின் தேவனும், இரத்தினமளிப்பவனும், ஹோதாவுமான அக்னியைப் போற்றுகின்றேன்.

2. பழைய ரிஷிகளாலும், புதிய ரிஷிகளாலும் போற்றத் தகுந்தவனுமான அவன் இங்கு தேவர்களை ஏற்றி வருவானாக.

3. அக்னியை தினந்தோறும் வழிபடுபவன் செழிப்பதும், சிறப்புள்ளதும், மக்களைப் பெருக்குவதுமான செல்வத்தைப் பெறுகிறான்.

4. அக்னியே உன்னால் எங்கும் பரப்பப்படும் இன்னலாகாத யக்ஞமானது தேவர்களிடம் செல்லுகிறது.

5. ஹோதாவும்,அறிஞனும், செயலாளனும், சத்தியனும், மிகப்புகழுள்ளவனும், தேவனுமாகிய அக்னி தேவர்களோடு இங்கு வருவானாக.

6. அக்னியே, அங்கிரசனே, அளிப்பவனுக்கு உன்னால் செய்யப்படும் நலமெல்லாம் உனக்கே நிச்சயமாகத் திரும்பும்.

7. அக்னியே, நாங்கள் தினம்தோறும் இரவிலும் பகலிலும் மனத்தில் வணக்கஞ் செய்வார்களாய் உன்னிடம் வருகிறோம்.

8. நாங்கள், துலங்குபவனும், யக்ஞங்களைப் பாலிப்பவனும், சத்தியத்தைச் சதா துலக்குபவனும், உன்னுடைய சொந்த இடத்திலே வளர்பவனுமான உன்னிடம் வருகிறோம்.

9. அக்னியே, நாங்கள் உன்னிடம் சுலபமாக வர மகனிடம் தந்தைபோல் இருக்கவும். எங்களுடைய நன்மைக்காக எப்போதும் எங்களிடம் நிலைக்கவும்.

------------------------------------------------------------------------------------------------------------------

2. வாயு
2. மதுச்சந்தஸ விஸ்வாமித்திரன்

1. அழகுள்ள வாயுவே, நீ வா, உனக்காக இந்த சோமபானம் பிழியப்பட்டுள்ளது. அவற்றைப் பருகவும், எங்களின் அழைப்பை கேட்கவும்.

2. வாயுவே, உன்னைத் தொழுபவர்கள், சோமபானத்தைப் பொழிந்து, உரிய காலத்தை அறிந்து உன்னை மொழிகளால் ஏந்துகின்றனர்.

3. வாயுவே, உன்னுடைய அனுகூலமான மொழி – அவியளிப்பவனுக்கும், சோம ரசத்தை பருக உன்னை அழைக்கும் – மற்றவர்களான பலருக்கும் தோன்றுகிறது.

4. இந்திரனே, வாயுவே, உங்களுக்கு இச்சோமபானம் பொழியப்படுகின்றன. உணவோடு இங்கு எங்களிடம் வாருங்கள். சோமபானங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

5. யக்ஞத்தில் வசிக்கும் இந்திர வாயுக்களே, பொழிந்துள்ள இவற்றை நீங்கள் அறிகிறீர்கள். இங்கு துரிதமாய் வாருங்கள்.

6. வாயுவே, இந்திரனே, நீங்கள் பொழியப்படுபவனுடைய யக்ஞத்துக்கு வாருங்கள், நரர்களே, இங்ஙனம் உங்கள் வருகையால், செயலால், யக்ஞம் பூர்த்தியாகிறது.

7. நான் சுத்த பலமுள்ள மித்திரனையும், பகையழிக்கும் வருணனையும் அழைக்கிறேன். நான் புவியின் மீது சலத்தை அளிக்க வல்ல செயலை நடத்தும் இவ்விருவரையும் அழைக்கிறேன்.

8. மித்திரா, வருணர்களே, ரூதத்தை வளர்ப்பவர்களும், ரூதத்தை அளிப்பவர்களுமான நீங்கள், இந்த யக்ஞத்தை சத்தியமான பலனோடு சேர்க்கிறீர்கள்.

9. அறிஞர்களான மித்ரா வருணர்களே, எங்களுடைய யக்ஞத்தை செம்மைப்படுத்துவீர்களாக. பலத்தையும் பாலிப்பீர்களாக. நீங்கள் பலருடைய நன்மைக்காகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் பல மக்களுக்குச் சரணமளிகிரீர்கள்...

தொடரும்...

ஆக்கம்: கண்ணன்
Note: This particular part of work done completely by the author any suggestions, feedback please click on the provided FB link and convey your thoughts to the author who originally owns this writings. Blogger admin has not knowledgeable to answer on your queries particularly on these topics named VEDHANGAL IN TAMIL...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :