Wednesday, May 29, 2013

Keerthivasan

என் முதல் பதிவு இது ....

என் முதல் பதிவு இது ....

ஒவ்வொரு முறையும் நான் பதிவு செய்ய நினைக்கும் போதெல்லாம் முடியாமல் போனதால் இந்த முறை பதிவு செய்வது என்று முடிவுசெய்தேன்.

விஸ்வரூபம் ....

ஆம் ஏன் முதல் பதிவு விஸ்வரூம் பற்றியது.

பல எதிர்பார்புகளுக்கிடையே வெளிவந்த திரைப்படம் என்பதால் மிகவும் ஆர்வமுடன் நான் பார்த்த ஒன்று இந்த படம்.

முதலில் கமலுக்கு ஒரு சபாஷ்..


காதல், வில்லன், பறந்து பறந்து சண்டை என்பதை பல இயக்குனர்கள் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த வரிசையில் என்றும் எதாவது புதிய முயற்சி எடுக்கும் கமல் இந்த முறை ஒரு சர்வதேச பிரிச்சனையை எடுத்து நம்மக்கு கொடுத்திருக்கிறார், தொழில்நுட்பத்தில் ஒரு சிறந்த இடத்தை இந்த படம் பிடிக்கும் என்பதை மறுபதிர்கில்லை.

கதை: ஒரு இந்திய ராணுவ அதிகாரி ஜிஹாதிகளிடையே ஊடுருவி அவர்கள் திட்டத்தை முறியடிப்பது.

குழப்பம்: இந்த கதைக்கும் அதன் திரைகதைக்கும் சம்பந்தம் இல்லாத இஸ்லாம் அமைப்புகள் செய்த போராட்டம் எதற்கோ? ஒரு சாதாரண படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்க வைக்கதனோ?

கதை களம் நன்றாக அமைக்க பட்டு நடிகர்கள் அவரர் வேடங்களை அறிந்து செய்திருகிறார்கள். ஒரு பக்கம் ஆண்ட்ரியாவின் அழகு மறுபக்கம் பூஜா குமார் நடிப்பு ஒருபக்கம் என்று ரெட்டை பாராட்டு.

கமலிடம் ஒன்று புரியவில்லை மேடைக்கு மேடை நான் நாத்திகன் என்று கூறுவதும் தன் படங்களில் ஒரு பாடலாவது கடவுளை பற்றி அமைப்பதும் முரண்பாடு. கேட்டால் நான் கடவுள் இல்லை என்று சொல்வதில்லை இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறுகிறேன் என்பார். திரு கமல் அவர்களே நீங்கள் இந்து மதத்தை மட்டும் ஆஸ்திகம் என்று நினைத்தால் உங்களை மேதாவி என்று நெனைக்கும் என்னை போன்றவர்கள் முட்டாள்.

நடிப்பு என்று எடுக்கும் போது  "உன்னை கானது ...." பாடலில் உங்கள் பாவனைகளும் நடனமும் வாழ்த்துக்கள் கமல் வார்த்தைகளில்லை. ஜிஹாதியாக வரும்போதும், படத்தில் முதல் சண்டைகட்சியும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது அதன் ஹிந்தி பதிப்பை நீங்கள் சரியாக மீண்டும் கொண்டுவரவில்லை என்றே எனக்கு தோன்றியது காரணம் உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை உங்களை சிலசமயம் மாற்றிவிடுகிறது. இந்த படத்தில் உங்கள் நடிப்பும் கதை ஓட்டமும் கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் செல்கிறது என்பதே உங்கள் வெற்றி.

இசை: வாழ்த்துக்கள் சங்கர் மகாதேவன் உங்கள் கூட்டணி கமலுடன் ஒத்துபோகிறது. BMG நன்றாக வந்திருகிறது.

காலம் கடந்த பதிப்பு என்பதால் இத்துடன் நான் நிறுத்தி கொள்வது நல்லது.

விஸ்வரூம் என்னை ஏமாற்றவில்லை...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :