Wednesday, May 29, 2013

Keerthivasan

மாணவர்கள் வீண் போராட்டம்!

மாணவர்கள் வீண் போராட்டம்!



சமீபத்தில் என் தேசத்து மாணவர்களின் பாதை மாறுகிறதோ என்ற பயம் என்னுள் தோன்றுகிறது, இந்த பதிப்பை படித்து முடித்ததும் என்னை இன துரோகி என்று யாரவது அழைப்பார்கள் அனால் அதனால் உண்மைகள் மாறுமா?

போராட்டம் எதற்கு?
இதோ கூட்ட கூட்டமாய் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்பை போல் மிகபெரிய போராட்டம்! நான் ஒரு பத்திரிக்கையில் இப்படித்தான் படித்தேன். என்ன ஆச்சு இந்த மாணவர்களுக்கு? ஒரு கொள்கை இல்லை. நாம் எதற்கு போராடுகிறோம் என்ற தெளிவு இல்லை, ஒரு ஒற்றுமை இல்லை. முதலில் மாணவர்கள் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். இன்று இலங்கை இருக்கும் நிலையில் தனி நாடு சாத்தியமில்லை. இந்திய அரசு ஒரு உருபுடியான முடிவு செய்கிறதென்றால் கண்டிப்பாக அது இலங்கை விசியத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே. தொப்புள் கொடி உறவு என்றும் கதறும் நீங்கள் அதன் தொடக்கம் என்ன என்று யோசித்ததுண்டா? ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் வந்திருந்தால் இவளவு பெரிய யுத்தம் இலங்கையில் நடந்திருக்காது. அதை முழுமையாக எதிர்த்து ஒன்றும் இல்லாமல் செய்தது நாம் அல்ல புலிகள்தான். பல அப்பாவி மக்கள் இறந்ததற்கும் காரணம் புலிகளே. மக்களை கேடயமாக வைத்து அவர்கள் விளையாடிய போர் இன்று இலங்கை மீது விழுந்திருகிறது. அதோடு நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள் வேறு யாரும் தலை இடவேண்டாம் என்று புலிகளே ஒரு முறை குறிப்பிட்டு நம்மை ஆச்சர்யபடவைதிருகிறாகள் என்பதையும் இங்கு நினைவு கூறுங்கள்.

என்ன தேவை?
இந்த விஷயத்தில் ஜெயலலிதாகூட தவறான முடிவே எடுக்கிறார் என்று தோன்றுகிறது அதுவும் எனக்கு மர்மம். இன்று இலங்கைக்கு தேவை நம் உதவி. தமிழர்கள் சமமாக வாழ அரசியல் தீர்வு. அதை விட்டு தனி நாடுக்கு போராடினால் ஒன்றும் நடக்காது. இதை உங்களுக்கு யார் சொல்லுவது? பஸ்சில் ஆட்டம் போடாதே நாட்டின் தலையெழுத்தே உன்னை நம்பித்தான் இருக்கு என்றாலே கேட்க மறுக்கும் நீங்கள் இதை மட்டும் கேட்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஒழுக்கம் மட்டுமே நம்மை மேம்படுத்தும் என்று புரியாத வயதில் பல ஜாம்பவங்களுக்கே புரியாத ஒரு போராட்டம் நடத்தி என்ன கண்டீர்? நீங்கள் வீணாக்குவது உங்கள் வழக்கை அல்ல இந்த நாட்டின் எதிர்காலம்.

என்ன தேவை? என்ன செய்ய வேண்டும் என்று உங்களை வந்து வாழ்த்தியவர்களை கேட்டால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றுதான் கூறுவார்கள் ஏன் என்றால் இந்தியாவை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று வாழும் மனிதர்கள். அன்று ஹிந்தி எதிர்ப்பு செய்த மாணவர்களால் இன்று வரை தமிழ் மக்கள் கிணற்று தவளையாய் தவிக்கிறார்கள் அது மாணவனாகிய உங்களுக்கு தெரியாது அனால் வேலை தேடி அலையும் துர்பக்கியவதிகளை கேளுங்கள். ஒரு வார பத்திரிக்கையில் ஒரு இலங்கை தமிழர் கேட்டார். உங்களால் திராவிட நாடே பெறமுடியவில்ல இந்த சிறு தீவை பிரித்து என்ன செய்ய முடியும்? உண்மை. அப்படி பிரித்தால் இன்னொரு கொரிய தீபகற்பமகதான் இலங்கை இருக்கும். பொருளாதாரம் சீரழியும், பஞ்சம் பிறக்கும் இதுதான் நீங்கள் நம் மக்களுக்கு செய்யும் உதவியா? சிந்தியுங்கள். நம் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. உங்கள் அம்மா அரிசி கிடைக்காமல் தவிக்கிறார். உங்கள் அப்பா சேமிக்க வழி இல்லாமல் அவதி படுகிறார், நீங்கள் படித்ததும்  வேலைக்காக அலையவேண்டும், லஞ்சம் ஊழல் இன்று ஒரு தொடர்கதை இன்னும் பல பல அதற்க்கான அரசியல் தீர்வை தேடுங்கள். உங்கள் வாழ்கையை வீணாக்காதீர்கள். இந்த நாடே உங்களுடையது. அதை விட்டு நடக்ககூடாத ஒரு நிகழ்வுக்கு போராட்டம் என்று உங்களை நீங்களே அழிதுகொள்ளதீர்கள்.

தாழ்மையுடன்
kvasan


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :