Monday, June 17, 2013

Keerthivasan

தினமும் 130கோடி டன் உணவு வீண்

*தினமும் 130கோடி டன் உணவு வீண்

*100 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு,

*20000 பேர் பசியால் உயிரிழப்பு

*7 பேர்-ல் ஒருவருக்கு தினமும் உணவ்வில்லை,

*அறுவடையின் போது 15 கோடி டன் வீண்,

*ஒரு car-ல் வரும் மாசை விட வீணாகும் உணவால் ஏற்படும்
மீத்தேன் 25 மடங்கு அதிகம்,

*ஒரு நாளைக்கு ஒருவருக்கான உணவில் பாதிதான் உண்ணப்படுகிறது,

*வீணாகும் உணவில் நான்கில் ஒரு பங்கு இருந்தாலே
அனைவருக்கும் உணவு சாத்தியம்,

*தயாரிக்கப்படும் உணவில் 30% to 50% வீணாகிறது,

*பழ வகைகளில் 26% வீண்,

*அருந்தும் பானத்தில் 16% வீண்,

*அடுமனை பொருட்களில் 13% வீண்,

*சாப்பாடு வகைகளில் 12% வீண்,

*பால் பொருட்களில் 10% வீண்,

*இறைச்சி வகைகளில் 6% வீண்,

*24% டு 35% உணவு பள்ளிகளில் மதிய உணவில் வீணாகிறது,

*அதிகம் வருமானம் ஈட்டும் 18லிருந்து 24 வயது வரை
உள்ளவர்களால்தான் உணவு அதிக அளவில் வீணடிக்கப்படுகிறது,

*84% மக்களுக்கு உணவு வீணாகிறது,வீணடிக்கிறோம் என்ற
கவலையும் இல்லை,புரிதலும் இல்லை,

*5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தினமும் ஒரு குழந்தை பசியால்
இறக்கிறது.

முறையான திட்டமிடல் இல்லை,தேவைகேற்ப உணவு பொருட்கள் வாங்கப்படுவதில்lai, பசித்தால் மட்டுமே உண்ணும் பழக்கம் வேண்டும்,உணவு தான்யம் உற்பத்தி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலை வகிக்கிறது.australia- வில் ஒரு வருடத்தில் உற்பத்தி ஆகும், கோதுமைஅளவைப்போல்,இந்தியாவில் வீணடிக்கப்படுகிறது.அரசு சேமிப்பு கிடங்குகளில் 60 லட்சம் டன் வீணாகிறது,இதன் மதிப்பு மட்டும் 7500 கோடி.

ஒரு புறம் வீண்,ஒரு புறம் பசி,ஆடம்பரம்,அலட்சியத்தால் பருக்கை,பருக்கையாக சேர்த்த காந்தி வாழ்ந்த நாட்டில் பசியால் அவலம்.இங்கே உணவில்லாமல்,பட்டினி இல்லை,அலட்சியத்தால்தான்.திருமணம்,அரசியல் கூட்டங்களில் buffet முறையிலேயும் அதிகம் வீணடிக்கப்படுகிறது.இந்த மாதிரி function-ல் அதிகமாக இருக்கின்ற உணவை பக்கத்தில் உள்ள அன்பாலயம்,கருணாலயம்,ஏழைப்பள்ளிகளுக்கு கொடுக்கலாம்.அன்று மாலையே சொந்தகாரர் வீடுகளுக்கு சப்பாத்தி ,தோசை,பனியார மாவுகளை கொஞ்சம்,கொஞ்சமாக பிரித்து கொடுக்கலாம்,யாருமே கௌரவம் பார்க்கத் தேவை இல்லை,ஆர்வலர்கள் ஒரு omni car வைத்திருந்தால்,மண்டபங்களில் உணவை சேகரித்து இல்லாத இடங்களில் சேர்க்கலாம்.திருமணத்தில் அதிக item தயார் செய்வதை குறைத்து கொள்ளலாம்.அரசு கிடங்குகளை அதிகப்படுத்தவேண்டும்.மனமிருந்தால் மார்க்கம்முண்டு.ஒரு இலையில் உள்ள முழு உணவையும் தயார் செய்ய 125 லட்சம் litre நீர் பாய வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு.தண்ணீர் பிரச்சனை!!! கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்..எல்லாமே இருக்கு இங்கே,பின்ன என்னத்தை சார்,வெளியிலை தேடனும்..இயற்க்கை உயிரினங்களுக்கு வாழும் உரிமையை கொடுத்துள்ளது,அதை நாம் மதிக்கும் வரைதான்.மேலே சொன்னது எல்லாம் ஐ.நா.அறிக்கைதான்....

-நன்றி புதியதலைமுறை tv.5.6.2013.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :