Thursday, July 18, 2013

Keerthivasan

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 3

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 3

 

அறிவியல் என்பதன் வளர்ச்சி இன்னும் ஆரம்ப நிலைகளிலேயே உள்ளது என்பதை நாம் கடந்த பாகத்தில் பார்த்தோம். பிரபஞ்சத்தின் அடிப்படைகளை கூட நம்மால் இன்னும் அறிய முடியவில்லை. இத்தகைய நிலையில் நம் முந்தைய தலைமுறைகள் மஹாபாரதத்தின் ஆழமான கோட்பாடுகளை எவ்வாறு விளங்கிக் கொள்ள‌ முடியும் ?

உதாரணத்திற்கு நாம் வெளி உலகம் அறியாத ஒரு ஆப்ரிக்க பழங்குடியினரிடம் தொலைக்காட்சி பெட்டியை குறித்து எவ்வாறு அறிமுகம் செய்வோம் ? இதை செய், இதை செய்யாதே என்பதை மட்டுமே சொல்ல முடியும். அது இயங்கும் முறையையும், அதன் தொழில்நுட்பங்களையும் நாம் விளக்க முடியாது. அப்படி விளக்கினாலும், அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருக்காது. தொழிற்சாலை, தயாரிப்பு, ப்ளாஸ்டிக், அலைவரிசை, காமரா, படம் எடுத்தல் என ஒவ்வொன்றை குறித்தும் நாம் விளக்குதல் என்பதும் எளிதல்ல. அதைப்போலவே நம்மை விட பல்லாயிரம் கோடி ஆண்டுகள் விஞ்ஞானத்தில் முன்னேறிய ஒரு சமூகம் தம் உயர்ந்த தொழில்நுட்பத்தை நமக்கு விளக்க இயலாது. ஆகையால் மஹாபாரதத்தில் உபயோகப் படுத்தப்பட்ட மிக உயர்ந்த தொழில்நுட்பங்களை அறிந்துக் கொள்ளும் ஆற்றல் மனிதர்களுக்கு இல்லை. ஆகையால் வியாசர் நம் பூமியில் தோன்றிய வேற்றுகிரக வாசிகளின் மிக உயர்ந்த தொழில்நுப்பங்களை அக்கால மனிதர்கள் பயன்படுத்தும் சாதாரண கருவிகளோடு ஒப்பிட்டு எழுதியிருக்க வேண்டும்.

சமஸ்க்ருத இலக்கண மற்றும் மெட்டா இயற்பியல் ஆராய்சியாளர்கள், வேதங்களும், உபநிடந்தங்களும், நாம் பிற்காலத்தில் அறிவியல் ரீதியாக முன்னேறிய காலத்தில் உணர்ந்துக் கொள்ளக் கூடிய நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளன எனச் சொல்கிறார்கள். சமஸ்க்ருதம் என்பதே தத்துவ ஞானத்திலும், அறிவியலிலும் மிகவும் முன்னேறிய ஒரு வேற்று கிரகத்தவரின் மொழியாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது என் உறுதியான எண்ணம். ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு அறிவார்ந்த சமுதாயத்தால் உபயோகிக்கப்பட்டு, மேலும் மேலும் பண்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே அப்படி ஒரு மொழி உருவாக வாய்ப்பிருக்கிறது. சமஸ்க்ருதத்தில் உபயோகிக்கப்படும் பல வார்த்தைகள் சுருக்கப்பட்ட கோட்பாடுகளாகும். உதாரணத்திற்கு "மந்த்ரா", "தந்தரா", "அஸ்த்ரா" என்று எந்த வார்த்தையை நீங்கள் எடுத்தாலும், அதற்கு நீண்ட விளக்கத்தை கொடுக்கக் கூடிய அளவில் சுருக்கப்பட்டவை. மேலும் அதன் கட்டமைக்கப்பட்ட இலக்கணம், ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு ஆற்றலை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு ஆகியவை மிகவும் முன்னோடியானது. அது ஒரு மனித சமூகத்தால் பேசப்பட்டு பின் வளர்ந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்மை விட அறிவியலில் மிக உயர்ந்த வேற்று கிரகத்தவர்களின் மொழியாக அது இருக்க வாய்ப்புள்ளது. மஹாபாரத்தை தொகுத்து முடித்த வியாசர் மனித இனத்திற்கு மிகக் குறைந்த பிரதிகளையே தருகிறார். நாம் அறிந்த‌ மொழியிலேயே இதை படித்தால் கூட பல அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான வார்த்தைகளை கொண்ட சொற்களை நம்மால் புரிந்துக் கொள்ள இயலாது. ஆகையால்தான் வியாசர் மஹாபாரதத்தின் மிக குறைந்த அளவினையே மனித இனத்திற்கு தந்திருந்தார்.

[After that he executed another compilation, consisting of six hundred thousand verses. Of those, thirty hundred thousand are known in the world of the Devas; fifteen hundred thousand in the world of the Pitris: fourteen hundred thousand among the Gandharvas, and one hundred thousand in the regions of mankind. ]

ரிஷிகளும், முனிவர்களும் நாம் இன்று ஆராய்வது போல் ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை ஒரு வகையில் கோட்பாட்டு இயற்பியல்வாதிகளாக‌ (தியரிட்டிக்கல் பிஸிஷியன்) கருதலாம். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டியனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பரிசோதனை கூடங்களில் ஆராய்ந்து பணியாற்றவில்லை. மாறாக அவர் தன் ஆழ்மனதின் துனை கொண்டு ஆராய்ந்தார். எண்ண பரிசோதனை ( ) எனச் சொல்லப்படும் யுக்தியை உபயோகித்து, அவர் தன் கோட்பாடுகளை ஆழமாக ஆராய்ந்தார். தன் உள்ளார்ந்த ஆய்வுகளை பின் அவர் சூத்திரங்களாக‌ அல்லது சமன்பாடுகளாக‌ (ஈக்வேஷன்) பதித்துக் கொண்டார். ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் எனப்படும் பிரித்தானியரும் ஒரு கோட்பாட்டு இயற்பியல்வாதியே.

மஹாபாரதத்தை வார்த்தைக்கு வார்த்தை நாம் மொழி பெயர்க்கும் போது அது அபத்தமான பொருள் தர வாய்ப்பிருக்கிறது. மஹாபாரதத்தின் யுத்தங்களில் உபயோகிக்கப்பட்ட அதிநவீன கருவிகளை குறித்து எழுதினாலும் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அன்றைய தலைமுறைக்கு இல்லை. அதை குறித்து விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


நன்றி: https://www.facebook.com/enlightened.master.3
 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :