Thursday, July 18, 2013

Keerthivasan

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் (பாகம் 2)

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் (பாகம் 2)
 
 


நம்முடைய பிரபஞ்சம் என்பது கணக்கிலடங்காத பால்வெளிகளை (Galaxies) கொண்டது. நமது பூமியானது இந்த எல்லையில்லாத அண்ட வெளியில் ஒரு சிறு பொறியின் அளவு கூட இல்லை. இந்த கற்பனைக்கு அடங்காத மிகப் பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்தில், நம் கண்களுக்கு புலப்படாத வகையில் மிகவும் சிறியதான இந்த பூமியில், மனிதன் எனும் இனம், பிரபஞ்சத்தை குறித்து அறிந்துக்கொள்ள முடிவில்லாமல் முயன்று கொண்டிருக்கிறது.

நம்முடைய தலைமுறையை சேர்ந்த நம் நவீன விஞ்ஞானம் பிரபஞ்சத்தை குறித்த புதிய புதிய கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் கொண்டு வருகிறது. "லம்ப்டா-சி.டி.எம்" என்கிற ஒரு கோட்பாடு பிரபஞ்சம், 13.75 பில்லியன் வருடங்களில் பரிணாமித்ததாக சொல்கிறது. இங்கே பிரபஞ்சம் என்று சொல்லப்படுவது நம்முடைய அண்டவெளியில் இருந்த காணக்கூடிய பிரபஞ்சம் (observable universe). இந்த 13.75 பில்லியன் வருடங்கள் என்பது எல்லையில்லாத, காலங்களை கடந்த பிரபஞ்சத்தை குறிப்பது இல்லை.

பிரபஞ்சத்தின் இந்த எல்லையில்லா அளவை வைத்து காணும் போது, நம் பூமி என்னும் சிறு பொறியை தவிர உள்ள கணக்கிலடங்கா நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்களில், வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் மிக அதிகம். மனிதர்களாகிய நாம் நினைப்பது, நாம் விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியவர்கள் என்று. ஆனால் மற்ற கிரகங்களில் உள்ள வேற்று கிரக வாசிகள் நம்மை விட விஞ்ஞானத்தில் பல ஒளி ஆண்டுகள் மூன்னேறியவர்களாக இருக்கக் கூடும். மனித இனத்தின் இருப்பு வேற்று கிரக வாசிகளுக்கு தெரியாது என்பதே நம்முடைய ஒரு ஆதாரம் இல்லாத கணிப்பாக இருக்கக் கூடும். மஹாபாரதத்தை நாம் ஆராய தொடங்கினால் நம்மை விட பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் விஞ்ஞானத்தில் முன்னேறிய வேற்று கிரக மனிதர்கள் உள்ளார்கள் என்பது வெளிப்படுகிறது. அவர்களுக்கு நாம் எப்படி இருப்பது தெரியுமோ, நாம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு அறிவியலில் முன்னேறுவோம் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாம் எப்படி அறிவில் மிகவும் தாழ்ந்த விலங்கினங்களை குறித்து அறிவோமோ, அதைப்போல் அவர்கள் நம்மை முழுதும் அறியும் வாய்ப்பிறுக்கிறது. அவர்களை குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. ஆனால் நம்மை குறித்து அவர்களுக்கு எல்லாமே தெரிய வாய்ப்பிருக்கிறது.

நமக்கு வேற்று கிரக மனிதர்களை பற்றி மட்டும் தெரியாது என்பது இல்லை. இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை குறித்தே நமக்கு இன்னும் தெரியவில்லை. பிரபஞ்சத்தை குறித்த புதிய கணக்குகளும், அலாக்ருதம்களும் வரையறுக்கப் படுகின்றன. "பிக் பாங் தியரி" எனப்படும் விஞ்ஞானிகள் பலரால் ஒத்துக் கொள்ளப் பட்ட‌ ஒரு கோட்பாட்டையே பலர் தவறாக புரிந்துக் கொள்கின்றனர். பலர் அது பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை குறிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் பிக் பாங் தியரி என்பது, பிரபஞ்சம் எப்படி ஒரு சிறு, அடர்த்தியான நிலையில் இருந்து, தற்போதைய நிலைக்கு வந்துள்ளது என்பதை குறித்துதான் விளக்க முயல்கிறது. நாம் பிக் பாங் தியரியை ஏற்றுக்கொண்டே பார்த்தாலும், அதற்கு முன்னால் என்ன இருந்தது என்கிற கேள்வி எழுகிறது. ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கலாம். வேறொரு பிரபஞ்சம் அல்லது கணக்கிலடங்காத வேறு பிரபஞ்சங்கள் இருந்திருக்கலாம். ஒவ்வொன்றும் தங்களுக்குரிய இயற்பியல் விதிகளோடு இருக்கலாம்.

மனிதர்களாகிய நாம் இன்று ஒருமித்து அறிந்துக்கொண்டுள்ள அறிவானது மிகவும் குறைவானது. அறிவியலின் அடிப்படைகள், நாம் பின்னோக்கி செல்ல செல்ல உடைய தொடங்குகிறது. அறிவியலே உடைய தொடங்கும்போது எதை வைத்து நீங்கள் ஆராய்வீர்கள் ? ஆகையால் மனிதர்களாகிய நாம் நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். சில கோட்பாடுகளை நாம் காரண அறிவால் அறிந்துக் கொள்ள இயலாது. சில கோட்படுகளை நாம் உணர்ந்துக் கொள்ள அறிவியலின் எல்லைகளை தாண்ட வேண்டி உள்ளது. அறிவியலின் விதிகள் பல வரம்புகளையும், எல்லைகளையும் கொண்டது. ஆகையால் நாம் பல அனுமானங்களை உண்டாக்கி நம் உள்ளுணர்வின் துணையோடுதான் ஆராய வேண்டி உள்ளது.

இந்திய துனைக் கண்டத்தின் மிகப் பழமையான சரித்திரமாகிய மஹாபாரதம் பல கோட்பாடுகளையும், சம்பவங்களையும் முன்நிறுத்துகிறது. அவை சாமான்ய பார்வையில் புரிந்துக் கொள்ள இயலாததாக உள்ளது. பரம்பொருள் என்று சொல்லப்படுகிற "கிருஷ்ணன்" என்கிற பாத்திரம் அனைத்து அறிவியல் ஞானம் கொண்ட ஒரு பிரபஞ்ச அமைப்பு என்று வைத்துக் கொள்ளலாம். அந்த அமைப்பானது தர்மம் எனும் ஒரு பிரபஞ்ச விதியின் அடிப்படையில் இயங்குகிறது. "தர்மம்" என்கிற பிரபஞ்ச விதி, உயிர்கள் அனைத்தும் ஒருமித்து இயங்கும் ஒரு கோட்பாடாக உள்ளது. இந்த பிரபஞ்சத்தின் அனைத்து காரணிகளும் ஒன்றொடு ஒன்று, பிரபஞ்ச விதியால் இனைந்தே உள்ளன. தனிப்பட்ட உயிர்களின் செயல்பாடுகள் இந்த பிரபஞ்ச விதியை ஒத்தே இருத்தல் வேண்டும். இந்த பேரமைப்பின் ஒரு அங்கத்தில் ஏதேனும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால், இந்த பிரபஞ்ச அமைப்பு அதனை உடனுக்குடன் சரிசெய்துக் கொள்கிறது.

மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிருஷ்ணர் என்கிற பாத்திரம் தான் அந்த பிரபஞ்ச அமைப்பு மற்றும் அதன் வடிவமைப்பாளர். அந்த வடிவமைப்பாளரால், மனிதர்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தந்த வழிகாட்டி கையேடுதான் "பகவத் கீதை". இதெல்லாம் உண்மையாக இருக்குமா என்ற குழப்பம் நமக்கு மேலோங்கலாம். மஹாபாரதத்தின் அறிவியல் பாதையில் நாம் மேலும் பயனிக்க தொடங்குகையில் அவை விளங்கத் தொடங்கும்.

மூன்றாம் பாகத்தில் தொடரும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :