Thursday, July 18, 2013

Keerthivasan

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 1

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 1

 

சனாதன தர்மத்தின் தத்துவ ஆழங்கள் சொல்லி மாளாது. அதை விளக்குவதற்கு நமக்கு அறிவு போதாது. இன்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ள பல விடயங்களை அன்றே நம் வேத, இதிகாச, புராணங்கள் விளக்கியுள்ளன. 


உலகின் மிகப்பெரும் கவிதையான "மகாபாரதம்" எனும் ஒப்பற்ற சரித்திரத்தை படித்து நான் வியந்திருக்கிறேன். அதன் ஆழங்களை கண்டு அதிர்ந்திருக்கிறேன். அதில் கவிதைகளுக்கே உரிய சில மிகைபடுத்தப்பட்ட செய்திகளை நாம் தவிர்த்து, அதன் அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தால், நமக்கு பல விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கும்.
 


மஹாபாரத்தை குறித்து பல மாதங்கள் (ஆண்டுகள்) விஞ்ஞான பார்வையில் ஆராய்ந்து நான் "www.mahabharathascience.blogspot.com" என்ற வலைப்பூவை எழுதியிருத்ததைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பல நாடுகளில் இருந்தும் இந்த வலைப்பூவை பலர் படிப்பதாக‌ புல்லி இயல் தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழில் இதை மொழிப்பெயர்க்கலாம் என்று நினைத்து இதை தொடங்கியுள்ளேன். 
 


மகாபாரதத்தை குறித்து பல அறிஞர்களும், மேதைகளும் நிறைய எழுதிவிட்டனர். இந்த கட்டுரையில் நான் அதை ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்தோடு அனுகியிருக்கிறேன். இதற்காக நான் பல புத்தகங்கள், வலைப்பூக்கள், செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையோடு என் சுய சிந்தனைகளை உட்புகுத்தி இருக்கிறேன். 
 


ஆங்கிலத்தில் இருந்து இதை நான் தமிழாக்கம் செய்வது மிக கடிணமான செயல். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை எழுதுவேன். சில சமயங்களில் இரு பாகங்களுக்கு இடையே நீண்ட இடைவெளியும் ஏற்படலாம். இது ஒரு சாதாரணமானவனின் அசாதாரண முயற்சி. அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன். 
 


ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம். (அனைத்தும் கிருஷ்ணனுக்கே சமர்ப்பனம்)


ஒம் ஸ்ரீ க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.......... 
 


மகாபாரத்தத்தில் ஆயிரக்கணக்கான முறை தர்மம் என்கிற சொல் இடைப்பெறுகிறது. தர்மம் என்பது வெறும் நன்மை செய்தல் மட்டுமல்ல. தர்மம் என்பது இந்த பிரபஞ்ச ஒருமையை குறிக்கிறது. எது அனைத்து பிரபஞ்ச உயிர்களையும் ஒன்றினைக்க வழி செய்கிறதோ அதை தர்மம் என்று சொல்லலாம். சுருக்கமாக தர்மம் என்பது ஒரு பிரபஞ்ச விதி.
 


மகாபாரதத்தை நாம் எப்படி விஞ்ஞான அடிப்படையில் புரிந்துக் கொள்வது ? மகாபாரதத்தை எப்படி நாம் ஒரு வேற்று கிரக சக்திகளின் போர் என்று அறுதியிட்டு சொல்லாம் ? 
 


அதற்கு முன், பிரபஞ்சத்தை குறித்து முதலில் நாம் பார்ப்போம்.


(இரண்டாம் பாகத்தில் அதை தொடர்வோம்)
 


 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :