Thursday, July 18, 2013

Keerthivasan

மஹாபாரதத்தின் விஞ்ஞான‌ மகத்துவங்கள் பாகம் - 8

மஹாபாரதத்தின் விஞ்ஞான‌ மகத்துவங்கள் பாகம் - 8


 
ஓப்பன்ஹீமர் யார் என்று நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமேரிக்க கொட்பாட்டு இயற்பியல் வித்தகரும் (theoritical physicist) மற்றும் கலிபோர்னிய பல்கலை கழகத்தில் பேராசிரியருமான இவர், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், "மன்ஹாட்டன் பராஜக்ட்" எனப்படும் ஆய்வில் மிகப்பெரும் பங்காற்றினார். இந்த ஆய்வின் மூலமாகதான் அகேரிக்கா முதன் முதலில் அணு ஆயுதங்களை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக, ஜூலை 16, 1945ல் முதன் முதலில் நியூ மெக்சிகோ எனும் இடத்தில், இப்படி உருவாக்கப்பட்ட ஒரு அணு குண்டு "ட்ரினிட்டி" என பெயரிடப்பட்ட சோதனையின் மூலமாக, வெடிக்கப்பட்டது. பின்னர் இதன் தொடர்ச்சியாய் ஜப்பானோடு நடந்த யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மேல் வீசப்பட்ட இந்த குண்டுகளால், ஜப்பான் நிலைக்குலைந்து சரணடைந்தது. உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் அனைத்து மனிதர்களையும் இது அதிரவைத்தது, கோட்பாட்டு இயற்பியலின் சக்தி உலகம் முழுதும் பேசப்பட்டது. அமேரிக்கர்கள் ஓப்பன்ஹீமரை சரித்திர நாயகனாக கொண்டாடினர். வானொலி மற்று தொலைக்காட்சிகளில் அவர் பேட்டிதான். அனைத்து செய்தித்தாள்களும் அவர் புகைப்படத்தை தாங்கி வெளிவந்தன.

ஓப்பன்ஹீமர் மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட அந்த ட்ரினிட்டி என பெயரிட்டப்பட்ட குண்டுவெடிப்பின் போது நிகழ்ந்த அணு ஆற்றல் வெளிப்பாட்டை குறித்து ஒரு பேட்டியில் கூறும் போது. "அது வெடிக்கும் போது, அது எனக்கு பகவத் கீதை அத்யாயம் 11, ஸ்லோகம் 12 ஐ ஞாபகப் படுத்தியது என்றார்.

"ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே காலத்தில் உதயமானால் எத்தகைய ப்ரகாசம் ஏற்படுமோ அந்த பிரகாசம் விஸ்வரூப பரமாத்மாவின் ப்ரகாசத்திற்கு ஒருகால் நிகராக இருக்கக்கூடுமோ ?" - பகவத் கீதை [11 : 12]

பின்னர் "அணு ஆயுதங்கள் உருவாக்கம்" எனும் தலைப்பில் பல்கலை கழகங்களுக்கான ஒரு கருத்தரங்கில் ஒரு மாணவர், ஓப்பன்ஹீமரிடம் கேட்டான். "இது இந்த பூமியில் வெடிக்கப்பட்ட முதல் குண்டா" என்று.

ஓப்பன்ஹீமர் "ஆம் நவீன உலகின் முதல் குண்டு" என்றார். பல அறிஞர்கள் இந்த பதிலை கேட்டு திகைத்த‌னர். நவீன உலகின் முதல் குண்டென்றால், பூமியின் வரலாற்றில் வேறு குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளனவா ?

ஓப்பன்ஹீமர் மஹாபாரதத்தில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று உறுதியாக நம்பினார். மஹாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் ஒரு அணுகுண்டு வெடிக்கையில் எத்தைகைய செயல்பாடுகள் நிகழ்கிறதோ, அதை அப்படியே படம் பிடித்து காட்டுவதை போல் இருப்பதுதான் அவர் நம்பிக்கைக்கு காரணமாக இருந்தது.

1965ல் மற்றொரு தொலைக்காட்சி நேர்கானலில் அவர் சொல்கிறார் "நமக்கு தெரியும் இனி இந்த உலகம் (குண்டு வெடிப்புக்கு பின்) பழைய படி இல்லை என்று, சிலர் சிரித்தார்கள், சிலர் அழுதார்கள், சிலர் அதிர்ந்து போய் அமைதியாய் இருந்தார்கள். நான் ஹிந்துக்களின் பகவத் கீதை ஸ்லோகம் [11:32] ஐ நினைவுப் படுத்திக் கொண்டேன். அதில் பகவான் விஷ்னு ஒரு இளவரசனை சமாதானப்படுத்தி தன் கடமையை செய்ய பல கரங்களை கொண்ட ஒரு பிரமாண்ட தரிசனத்தை எடுத்து 'நான் உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற, பெருகி வளர்ந்துள்ள மஹாகாலனாக இருக்கிறேன்' என்கிறார். நாம் எல்லோரும் அவ்வாறுதான் ஒரு வகையில் நினைத்திருக்கக் கூடும்".

மஹாபாரதத்தில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்ட நிகழ்வுகளை சித்தரிக்கும் சம்பவங்கள் நிறைய உள்ளன. பிரம்மாஸ்திரம் என்றும் பிரம்ம ஷீரா என்றும் பிரம்ம தண்டா என்றும் பலவிதங்களில், பல ஆற்றல் நிலைகளில் அணுபிரயோகம் செய்யப்பட்டுள்ளன. பிரபஞ்ச சக்திகள் நம்மை விட மிக மேம்பட்ட தொழில்நுட்பத்தை உடையவர்கள் ஆகையால், அணுபிரயோகத்தை கூட செம்மையாக பயன்படுத்தும் நுட்பத்தை கொண்டிருந்தார்கள்.

மேலும் இதைக் குறித்து அடுத்த பாகத்தில் தொடர்வோம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :