Tuesday, July 9, 2013

Keerthivasan

ஏன் குஜராத் முஸ்லீம்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் ?

ஏன் குஜராத் முஸ்லீம்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் ?

மோடி வித்யாசமானவர். ரம்ஜான் காலங்களில் இவர் ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளைப் போல் புகைப்படங்களுக்காக நோண்பு கஞ்சி குடிப்பதில்லை, குல்லா அணிந்து இஸ்லாமியர்களை திருப்தி படுத்த முயல்வதில்லை, இருந்தும் ஏன் குஜராத்தின் பெருவாரியான முஸ்லீம்கள் அவரை ஆதரிக்கிறார்கள் ?

நீங்கள் மோடி அவர்களை வெறுக்கலாம் அல்லது விரும்பலாம் ஆனால் ஒதுக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக அவர் வளர்ந்துவிட்டார். என்கிறார் ஜஃபர் சரேஷ்வாலா என்கிற பத்திரிகையாளர். அதன் காரணங்கள் என்ன ?

முதலில் குஜராத்தின் வளர்ச்சி அனைத்து சமுதாயங்களை அரவனைத்து செல்கிறது. 2002ன் மதக்கலவரங்களை பல விஷமிகள் மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்கள் மனதிலிருந்து அகலாதவாறு ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருந்தும் குஜராத்தில் 31 சதவீத முஸ்லீம்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த டிசம்பரில் நடந்த தேர்ந்தலில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் எட்டு இடங்களில் ஆறு இடங்களில் மோடி வெற்றிப் பெற்றார்.

இதற்கு காரணங்கள் பல. கடந்த 60 வருட குஜராத்தின் சரித்திரத்தில், கடந்த பத்து ஆண்டுகள்தான் மதக்கலவரங்கள் இல்லாத காலம். ஆக பணத்தால் வாங்க முடியாத அமைதியை, மோடி அவர்கள், அனைத்து குஜராத்திகளுக்கும் வழங்கியுள்ளார். அமைதி இருக்கும் இடத்தில்தானே வளர்ச்சி வரும் ?

2002 கலவரங்களில் இருந்து குஜராத் மீண்டதற்கு மிக முக்கியமான காரணம், கலவரத்திற்கு காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் பிடியில் இறுக்கியதும், நீதி நிலைப்பெற்றதும்தான். இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், நடிகர் சல்மான் கானின் தந்தையுமான, திரு சலீம்கான் ஒரு பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டார் "உங்களுக்கு குஜராத் கலவர‌த்தை விட மோசமான, மும்பை கலவரத்தின் போது, மஹாராஷ்ட்ரத்தின் முதல்வர் யார் என்று தெரியுமா ? "மலியானா" மற்றும் "மீரட்" கலவரங்களின் போது உ.பி யின் முதல்வர் யார் என்று தெரியுமா ? "பகல்பூர்" மற்றும் "ஜம்ஷெட்பூர்" கலவரங்களின் போது காங்கிரஸ் ஆட்சியின் பீகார் முதல்வராக யார் இருந்தார் என்று தெரியுமா ? நூற்றுக்கணக்கான கலவரங்கள் குஜராத்தில், மோடிக்கு முன்பு ஆண்டவர்கள் சமயங்களில் நடந்துள்ளன, அப்போது ஆண்ட முதல்வர்களின் பெயர்களை தெரியுமா ? ஏன் மோடியை மாத்திரம் தனியாக பிரித்து, அவர்தான் கலவரத்திற்கு காரணம் என்பதைப் போல் சித்த்ரிக்கிறீர்கள் ? வாயடைத்து போனார்கள் பத்திரிகையாளர்கள்.

மிகவும் மதிக்கப்பட்ட ஒரு உன்னதமான இஸ்லாமிய அறிஞரான மௌலானா வஸ்தன்வி, (இவரும் ஒரு குஜராத் முஸ்லீம் தான்) "மோடியின் முழுமை பெற்ற இந்த வளர்ச்சியில், குஜராத்தி முஸ்லீம்களும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர், என்று குறிப்பிட்டார். அப்படி சொன்ன காரணத்திற்காக அவரை "தியோபந்த்" பதவியில் இருந்து அகற்றினர் மதவெறியர்கள்.

மிகவும் மதிக்கப்பட்ட மற்றொரு "ஜமைத்துல் இ ஹிந்தின்" மௌலானாவான திரு "மெஹ்மூட் மத்னி, "மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்களை விட குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லா விதங்களிலும் நல்ல நிலைமையில் இருப்பதாய் குறிப்பிடுகிறார்.

மிகவும் பிரபலமான வெளிநாட்டு வாழ் குஜராத்தி இந்தியரும் இதையே வழி மொழிகிறார். இப்படி பல இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், மேதைகளின் கருத்துக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

குஜராத் முஸ்லீம்கள் மட்டும் இதை சொல்லவில்லை. "மில்லி கெஜெட்" எனும் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், "மிகவும் பத்திரமான இடம் இன்று இந்தியாவில் முஸ்லீம்களுக்கு, குஜராத் தான்" என்று மஹாராஷ்ட்ரத்தின், முன்னால் "ஐ. ஜி." திரு "எஸ் எம் முஷ்ரிஃப்" கூறியுள்ளார். இதனால்தான் முஸ்லீம்கள் அவரை குஜராத்தில் பெரும் எண்ணிக்கையில் ஓட்டளித்து வெற்றி பெற செய்கிறார்கள் என்கிறார்.

பாவம் அரபியனின் வால் பிடிக்கும் அடிமைகள். இவர்கள் என்னதான் கத்தினாலும், கதறினாலும் படித்த, பண்புள்ள, உலக அறிவு கொண்ட இஸ்லாமியர்கள் மோடியை மேலும் மேலும் ஆதரிக்கதான் போகிறார்கள்.

இன்ஷா அல்லா மோடி 2014ல், பிரதம மந்திரியாக பதவி ஏற்க அதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமையப் போகிறது.

பின் குறிப்பு : சில தகவல்கள். "ஜஃபர் சரேஷ்வாலாவின்" Why Gujarati Muslims are with Modi என்ற பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :