Friday, July 19, 2013

Keerthivasan

Heaven and Earth (1993)

Heaven and Earth (1993) 

Actors: Tommy Lee Jones, Joan Chen, Hiep Thi Le 

Directors: Oliver Stone




டைரக்டர் OLIVER STONE வழங்கும் மூன்றாவது வியட்நாம் போரின் தொடர்ச்சி தன் முந்தைய படைப்புகளில் (Platoon [1986], Born on the Fourth of July [1989]) போரில் படைகளின் சாகசங்கள் அவர்களின் கஷ்டங்கள் என்று பட்டியலிட்ட அவர் இந்த படத்தில் ஒரு வியட்நாமில் வசிக்கும் பெண்ணின் கதையை மிகவும் அழகாக படமாக்கியுள்ளார்.

முந்தைய படங்களில் அவர் வென்ற ஆஸ்கார் இந்த திரைப்படத்துக்கு கிடைக்கவில்லை அதோடு வியாபார ரீதியாக தோல்வியை தழுவிய படமாகவும் இருந்தது. அனால் ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்றே இதை கூறலாம். 

அமெரிக்கர்கள் உயிரை கொடுத்தது போராடும் படங்களையும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை போல் அல்லாது அடிப்படை குடிமக்களாக இருக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு சாதாரண விவசாயம் செய்யும் குடும்பத்தில் இந்த போர் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லும் இந்த படத்தில் கதாநாயகி Hiep Thi Le அற்புதமான நடிப்பால் நம்மை கவருகிறார்.

ஒரு கிராமத்து பெண் போராளியாகவும் பின் ஒரு அமெரிக்க படை தளபதிக்கே மனைவியாக மாறுவதும் ஆசிய கலாச்சாரத்தில் இருக்கும் வியட்நாமில் இருந்து அமெரிக்க கலாச்சாரத்தை பார்த்து தயங்குவதும் நடிப்பில் அடே சொல்லவைக்கிறார். போரின் போது தன் அன்றாட தேவையை போக்கிக்கொள்ள கர்பமாக  அமெரிக்க படைகளிடம் சிகரட், மது விற்கும் போதும், தன்னை ஒரு அமெரிக்க படை வீரன் உடலுறவுக்கு கட்டாய படுத்தும் பொது கத்தி அவனை மாட்டி வைக்கும்போதும், அமெரிக்காவில் ஒரு பெரிய வணிக வளாகத்தில் நுழையும்போது கண்களில் காட்டும் ஆச்சரியம் இப்படி எங்கும் பளிச் நடிப்பு.

திரைப்படம் ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழகோ அழகு இப்படி பட்ட ஒரு இடத்தில் குண்டு முழங்க படைகள் நுழையும் போது நம்மையே அறியாமல் கவலை கொள்ள வைக்கிறது.

Inglourious Basterds,  The Aviator,  Born on the Fourth of July,  Platoon போன்ற படங்களை எடுத்த அதே Robert Richardson இந்த படத்திற்கும் ஒளிபதிவு. அருமையான ஒரு வியட்நாமின் விவசாய கிராமத்தில் வாழ்ந்த ஒரு அனுபவம் இவரின் ஒளிபதிவில். Kitarô அவர்களின் பின்னணிக்கு கோல்டன் க்ளோப் கிடைத்தது ஒரு ஆறுதல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவரது உழைப்பு பளிச்.

மொத்தத்தில் Heaven and Earth ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயம் இல்லை. சதா சர்வகாலமும் அமெரிக்க படைகளின் நாட்டுபற்றை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு அமெரிக்காவின் படைகளுக்கு பலமான குட்டும் வைக்கும் படம்.


போரின் கொடுமையும், போரின் போதுபொது மக்களின் அவல நிலையும் விரிவாக விவரிக்கும் ஒரு அற்புத திரை காவியம் இந்த Heaven and Earth





Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :