Sunday, December 14, 2014

Keerthivasan

இயற்கை விவசாயம் - 1

இயற்கை விவசாயம் -1


வீட்டு தோட்டத்தில் இருக்கும் காய்கறி செடிகளுக்கோ வாழை தென்னை மா முதலான மரங்களுக்கோ எந்த பராமரிப்பும் இல்லாமல் ரசாயன உரம் பூச்சிக்கொல்லி பயன் படுத்தாமல் நன்றாக விளைகிறது

 காடுகளில் ஏராளமான மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவதில்லை உரம் போடுவதில்லை மருந்து தெளிப்பதில்லை உழவு செய்வதில்லை

 ஆனால் அவை நன்றாக செழித்து வருகின்றன.

காய் கனிகளை தருகின்றன




 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு செடி கொடி மரங்களுக்கு தேவையான நுன்னூட்ட பேரூட்ட சத்துக்கள்
 இயற்கையிலேயே மண்ணில் உள்ளன.

ஆனால் அவை பயிர்களுக்கு கிடைக்காத நிலையில் உள்ளன

 மண்ணில் உள்ள கோடிக் கணக்கான நுன்னுயிர்கள் இந்த பேரூட்ட நுன்னூட்ட சத்துக்களை பயிருக்கு கிடைக்கும் நிலைக்கு மாற்றி தருகின்றன

 இலை தழை சருகுகள் மண்ணில் விழுந்து அவை மட்கி ஆர்கானிக் கார்பன் எனும் அங்கக கரிமம் மண்ணில் சேருகிறது

 இவை மண் புழுக்களுக்கும் நுன்னுயிர்களுக்கும் உணவாகிறது

 அங்கக கரிமனில் உள்ள பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்கள் மண் புழுக்ளின் கழவுகளில் பல மடங்கில் பெறுகியுள்ளது

 மண்ணில் உள்ள பாஸ்பரஸ் என்னும் பேரூட்ட சத்தை பாஸ்போ பாக்டீரியா என்னும் நுன்னுயிர்கள் பயிருக்கு கிடைக்கும் நிலையில் மாற்றி கொடுக்கிறது

 பாஸ்பரஸ் வேர்கள் வளர்ச்சிக்கும் பயிர் வளர்ச்சிக்கும் உதவுகிறது
இதை போல பொட்டாஸ் ஜிங் மற்றும் நுன்னூட்ட சத்துக்களை சில வகையான பாக்டீரியாக்கள் கரைத்துக் கொடுக்கின்றன. .

காற்றின் வளி மண்டலத்தில் எழுபது சதவீதம் நைட்ரஜன் எனும் தழைச் சத்து உள்ளது

 அசோஸ்பைரில்லம் அசிட்டோ பாக்டர் ரைசோபியம் போன்ற பாக்டீரியாக்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை பயிருக்கு கிரஹித்து தருகிறது

 மண் புழுக்கள் மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக நுழைந்து நுன்துளைகளை ஏற்படுத்தி உழவு செய்வது போல மண்ணை பொல பொலப் பாக்குகின்றன
ஒரு உழவனை போல மண் புழுக்கள் நிலத்தை இலவசமாக உழவு செய்கின்றன...

மழை பெய்யும் போது மண் புழுக்களால் ஏற்படுத்தப் பட்ட நுன் துளைகள் வழியே மழை நீர் உறுஞ்சப்பட்டு நிலத்தின் அடி மட்டத்திற்கு செல்கிறது

 பின்னர் வறட்சி காலத்தில் தந்துகி கவர்ச்சி மூலம் இந்த நீர் மேலே ஊறி வேர் மண்டலத்திற்கு கிடைக்கிறது..

அதனால் தான் காடுகளிலும் மலைகளிலும் வெயில் காலங்களில் கூட தண்ணீர் பாய்ச்சாமல் பசுமையாக உள்ளன

 இவ்வாறு உழவு செய்யாமல் தண்ணீர் பாய்ச்சாமல் உரம் போடாமல் எந்த பராமரிப்பும் செய்யாமல்
 மணிதனால் பயன் படுத்தப் படாத நிலங்களில் மட்டுமே சாத்தியமாகிறது

 நம் முன்னோர்கள் பசுஞ் சான உரங்களை மட்டுமே பயன் படுத்தி இயற்கை விவசாசயம் செய்து கடனில்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர்

 பசுமை புரட்சி வந்த பிறகு வீரிய ஒட்டு ரக விதைகளை கொடுத்தார்கள்
 இதற்கு ரசாயன உரங்களை பயன் படுத்தினோம்

 இதனால் ஏராளமான பூச்சி புழுக்கள் உற்பத்தி ஆகி பயிர்களை தின்றன

 இவற்றை அழிக்க பூச்சி கொல்லி மருந்துகளை பயன் படுத்தினோம்

 ரசாயன உரம் பூச்சி கொல்லி பயன் படுத்த பட்டதால் மண்ணில் உள்ள மண் புழுக்களும் நுன்னுயிர்களும் அழிந்தன

 இவை அழிந்ததால் ரசாயானம் பயன் படுத்தினால் மட்டுமே பயிர் செய்ய முடியும் என்ற சூழல் உறுவானது...

ஆக்கம்: கோபால தேசிகன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :