Sunday, December 14, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - கலாச்சாரம்


நினைத்தேன் பகிர்கிறேன்- கலாச்சாரம்

உடையில் சுதந்திரமில்லை, உணவில் சுதந்திரமில்லை, அதில் இல்லை இதில் இல்லை இப்படி ஏகபட்ட புகார்கள் இப்போது சர்வ சுதந்திரமாக வலம் வருகிறது.

எது கலாச்சாரம் என்பதிலேயே நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒருவர் இசையில் என்ன கலாச்சாரம்? என்கிறார், ஒருவர் அவரவர் விருப்பட்ட உடை அணிவதில் குறிப்பாக பெண்கள் அணிவதில் என்ன தவறு? என்கிறார், பெண்ணியம், தனிமனித சுதந்திரம் இத்தியாதி இத்தியாதி என்று மணிகணக்கில் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

Beautiful Village Art
உலகத்திலேயே தன் சொந்த கலாச்சாரத்தை சீரழிப்பதில் இந்தியர்கள் முக்கியமாக தென் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடே முன்னிலை வகிக்கும் என்று நினைக்கிறேன். 
இசை, உடை இவற்றில் கலாச்சாரம் இல்லையென்று வைத்துக் கொண்டால் பாரம்பரிய உடை, பாரம்பரிய உணவு என்று தனித்து சொல்வதன் காரணத்தை இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

தனி மனித சுதந்திரம் என்பது இந்த பாரத கலாச்சாரத்தில் பட்டம் விடுவது போன்றது. என்னத்தான் உயர பறந்தாலும் அதை நேர்த்தியாக நடத்தும் ஒருவனின் கையில் அதன் பிடி இருக்கத்தான் செய்யும். இங்கு நம் பிடி நம் வீட்டின் பெரியோர்கள் கையில் இருக்கும். இதுவே நமது கலாச்சாரம்.

பட்டம் உயர பறக்கும் ஆனால், காற்று கொஞ்சம் பலமானால் அதனால் தன்னிச்சையாக சமாளிக்க இயலாது இந்த முனையில் உள்ளவன் நேர்த்தியாக அதை செலுத்தியாக வேண்டும்.

நூலின் முனையை அறுத்துக் கொண்டு கட்டுக்கடங்காமல் பறக்கும் பட்டம் முள்ளிலோ பிறரின் கையில் சிக்கி சீரழந்து போகுமே அன்றி தன்னிச்சையாக உயர பறந்து ஊரார் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு போகாது.

கட்டுபாடற்ற சுதந்திரம் பட்டத்தின் கதியைதான் நமக்கு அளிக்கும்...

அன்புடன் கீர்த்திவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :