Saturday, December 20, 2014

Keerthivasan

சித்திரையின் சிறப்பு - 2



சித்திரை ஒன்று - தமிழ் புத்தாண்டு என ஏன் கொண்டாடுகிறோம்?

உலக மக்களின் கலாச்சாரம் எப்பொழுதும் அவர்களின் நாகரீகத்துடன் இணைந்த ஒருவிஷயம். ஒரு சமூகம் எது போல செயல்படுகிறதோ அதை சார்ந்து அவர்களின் காலாச்சாரமும் கொண்டாட்டங்களும் அமைந்துவிடுகிறது. இந்த கருத்துக்கு முரண்பாடான சமூகம் ஒன்று உண்டு என்றால் அது பாரத கலாச்சாரம் மட்டும் தான்.

தங்களின் சந்தோஷத்திற்காகவோ அல்லது சமூகத்திற்காகவோ விழாக்களை கொண்டாடாமல் ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், பிரபஞ்ச நலனுக்காகவும் கொண்டாடினார்கள்.

நமது வாழ்வியல் அடிப்படை மிகவும் மெய்ஞானப்பூர்வமானது. கவனிக்க விஞ்ஞானப்பூர்வமானது அல்ல. காரணம் விஞ்ஞானம் என்பது ஒரு விடையை ஆய்வு செய்ய அறிவு மூலம் முயற்சி செய்வது. விஞ்ஞானியின் அறிவு திறனை மட்டுமே அது சார்ந்தது.

நாளை வேறு ஒரு விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பால் முன்னர் கண்டுபிடித்ததை நிராகரிக்கலாம். வானவியலில் விஞ்ஞானம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுதும் ஒரு கற்பனை சாந்த சமாச்சாரமாகவே இருக்கும். காரணம் சமன்பாடுகள் மூலமும் கொள்கைகள் மூலமே வானவியல் நிரூபணம் செய்கிறது. யார் சென்று பார்த்தார்கள் புதன் சூரியனை சுற்றி வர 88 நாட்கள் ஆகிறது என்று?

வடமொழி சொல் கிரஹா என்றால் ”ஒர் வசிப்பிடம்” அல்லது “ நிலை” (Base) என பொருள்படும். நீங்கள் வசிக்கும் இடம் என்பதால் வீடு என்பது கிரஹம் என அழைக்கப்பட்டது. அதனால் தான் கிரஹ ப்ரவேசம் எனும் சொல் வழக்கத்தில் இருந்தது. வானமண்டலத்தில் நட்சத்திர ஆற்றல் எங்கே கிரகிக்கப்படுகிறதோ அந்த பகுதிக்கு பெயர் கிரஹம்.

பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்பவர்கள், சூரியன் ஒரு நட்சத்திரம் அதை கிரகம் என கூறுகிறார்கள் ஜோதிடத்தில் என சொல்லுவதுண்டு. விஞ்ஞான ரீதியாக ஜோதிடத்தை அனுகும் இந்த பகுத்தறிவாளர்களிடம் ப்ளூட்டோ எனும் கிரகத்தை பற்றி கேட்டால் விஷயம் தெரியும்.

ஐந்து வருடத்திற்கு முன்பு வரை ப்ளூட்டோ ஒரு கிரகம். ஆனால் தற்சமயம் இதை கிரகம் இல்லை என விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் இதற்கு என்ன சொல்லுவார்கள்? மெய்ஞான ரீதியான ஜோதிடம் ப்ளூட்டோவை என்றும் பயன்படுத்தியதே இல்லையே?
இதனால் விஞ்ஞானம் கூட பகுத்தறிவின் கீழ் வருமா என சந்தேகம் கொள்ளவேண்டி இருக்கிறது.

மெய்ஞானம், விஞ்ஞானம் போல அல்ல, அது அறிவு நிலையை கடந்தது. நமது கலாச்சாரமும் அதன் கட்டமைப்பும் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல மெய்ஞானம் சார்ந்தது. நமது நாள்காட்டியை இதற்கு சரியான உதாரணமாக கொள்ளலாம்.

சூரியனை பூமி சுற்றிவருவதால் சூரியனை மையமாக கொண்டு செயல்படும் நாள்காட்டி நம்முடையது. பூமி வட்டபாதையில் சுற்றுவதால் வட்டத்தை பன்னிரண்டாக பிரித்து பயன்படுத்திய முதல் நாள்காட்டி என இதை சொல்லலாம்.

மனிதன் வளர்ச்சி அடையாத காலத்தில் எண்ணிக்கை பத்துடன் நிறுத்திக்கொண்டான். காரணம் அவனது விரல்களில் பத்து விரல்தான் இருந்தது. அப்படிபட்ட மனிதன் கணித்த நாள்காட்டிகளில் பத்து மாதமே இருந்தது. ஜூலியர் சீசர் காலத்தில் இந்திய வானவியல் நிபுணர்களை கொண்டு மேலைநாட்டு நாள்காட்டி மறுசீரமைக்கப்படது. இதற்கு ஜீலியன் காலண்டர் என பெயர். அதைதான் நாம் ஆங்கில நாள்காட்டியாக பயன்படுத்துகிறோம்.

லத்தீன் - கிரேகக மொழியில் எண் வரிசையில் 7,8,9,10 என்பது செப்டா,அக்டா, நவா, டெக்கா என சொல்லுவார்கள். இதையே அவர்கள் மாதத்தின் பெயராக இருந்தது. ஜீலியர் சீசர் காலத்திற்கு பிறகு 7ஆம் மாததிற்கு முன் அவரின் பேரன் அகஸ்டியஸ் "August"ias பெயரையும் தனது பெயரையும் கொண்ட மாதத்தை இணைந்த்தார்.

அதனால் தான் உலகின் நாள்காட்டிகளில் மிகவும் துல்லியமானதும் சூரிய மண்டலத்தை கொண்டும் கணக்கிடப்படுவதால் நாள்காட்டிகளின் முன்னோடி என நம்மை அழைக்கலாம்.

நம் மக்கள் சூரியன் மேஷ ராசியின் முதல் பாகைக்கு வரும் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களால் புத்தாண்டை தை மாதத்தில் மாற்றி அமைத்தது வேதனைக்குரியது.
தமிழ் இனப்பற்றால் திருவள்ளுவர் ஆண்டு என வழக்கத்திற்கு கொண்டு வந்தனர். ஏன் திருவள்ளுவர் என கேட்டால் விடையில்லை. அவரை விட மூத்த தமிழ் இலக்கியவாதிகள் உண்டு. மேலும் திருவள்ளுவர் ஆண்டை திருவள்ளுவர் தினத்தில் துவங்கவேண்டுமா இல்லை சித்திரை ஒன்றாம் தேதியா என குழப்பம் வந்தது. அதனால் புத்தாண்டு தினம் அரசால் மாற்றப்பட்டது. திருவள்ளுவர் தினத்திற்கு பிறகு ஆண்டு துவங்குவதால் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட குழப்பம் ஏற்படுவதால் மாற்றம் கொண்டுவந்தார்கள். காரணம் அரசு ஆவணங்கள் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதால் இந்த மாற்றம் அவசியமானது. கிருஸ்து பிறந்த தினம் கூட ஜீலியன் நாள்காட்டியால் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.

அதனால் தான் இந்த ”ஆண்டு மாற்றம்” புரட்சியை எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை.மதம் சார்ந்த கட்சிகள் கூட இதை எதிர்க்கவில்லை. எதிர்த்தார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே திருகுவலி வரும்.
திருவள்ளுவர்க்காக வருடத்தின் முதல் நாளை மாற்றம் செய்யலாம் ஆனால் சூரியனின் பயணத்தை ராசிமண்டலத்தில் மாற்றம் செய்ய முடியுமா?

தை மாதம் என்றும் , சித்திரை மாதம் எனவும் கூறும் மாதத்தின் பெயர்கள் எப்படி வந்தது? இவை அனைத்தும் தமிழ் பெயரா? என சிந்திக்க வேண்டும்.
நமது மாதங்கள் அனைத்தும் சந்திரனை சார்ந்து நிர்ணயிக்கபட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி அந்த மாதத்தின் தொடக்க நாளாக சந்திராம்ச மாதத்தில் பின்பற்றப்படுகிறது. பெளர்ணமி முதல் அமாவாசை வரை மீண்டும் பெளர்ணமி வரை ஒரு மாதம் என வழங்கப்பட்டது.

பெளர்ணமி என்பது என்ன என தெரிந்து கொள்வது நல்லது. சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் பாகை திதி என்னும் தன்மையில் அழைக்கப்படுகிறது. இதில் குறைந்த பாகை வித்தியாசத்தில் இருக்கும் நிலை அமாவாசை. எதிர் திசையில் இருந்தால் பெளர்ணமி.

முதல் மாதம் பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் அமைவதால் அம்மாததிற்கு சித்திரை என பெயர். அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் அமைவதால் வைகாசி மாதம் என வழங்குகிறோம்.நட்சத்திர பெயர்கள் அனைத்தும் வடமொழி பெயர்கள் தான்.

தமிழ் வருடத்தில் வடமொழி மாதங்கள் இருக்கலாமா? யாராவது சொற்பொழிவாளரோ இலக்கியவாதியோ சொல்லுங்கள். புரட்சியாளர் மாதங்களின் பெயரை மாற்றட்டும். இவர் ஜீலியர் சீசர் போல ஒரு பேர குழந்தையை வைத்து சிரமப்பட வேண்டியது இல்லை. அவர் குடும்ப சூழலில் 12 பெயர் தாராளமாக தேரும்.

சித்திரை ஒன்றாம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடில்லை. சூரியன் சந்திரன் மூலம் அமையும் நாள்காட்டி தனியொரு மதத்திற்கோ, இனத்திற்கோ அல்லது மொழிக்கோ சொந்தமானது அல்ல.

மெய்ஞான ரீதியான விஷயம் அனைவருக்கும் பொதுவானது. உலகில் எங்கே யார் சொன்னாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆகவே இந்த நாளை மெய்ஞானத்தின் புத்தாண்டாக கொண்டாடுவோம்.

இன மொழி மதம் கடந்த மெய்ஞானவெளியின் துகள்களாய் சஞ்சரிப்போம்.

தொகுப்பு: ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்தி

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :