இயற்கை விவசாயம் - 2
ஒரு கிராம் மண்ணில் கோடிக்கணக்கான நுன்னுயிரிகள் உள்ளன
மண் புழுக்களும் நுன்னுயிரிகளும் ராசாயன உரம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் அழிக்கப் பட்டப் பின் உயிரூட்டமான மண் கன்டம் மலட்டு தன்மை அடைந்தது
பசுமை புரட்சியின் அலங்கோலத்தில் நமது பாரம்பரிய விதைகளுக்கு பதிலாக வீரிய ஒட்டு ரக விதைகள் புகுத்தப் பட்டன..
நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ள நமது பாரம்ரிய விதைகளின் சிறப்புக்கு இந்த வீரிய ஒட்டு ரக விதைகள் ஈடாகாது என்பது தான் உண்மை
நமது பாரம்பரிய நெல் ரகங்களில் 60 நாள் வயதுள்ள அறுபதாம் குறுவை
70 நாள் வயதுள்ள பூங்கார்(இது நேரடி விதைப்பில் 70 நாட்களிலும் நடவு முறையில் 80 நாட்களிலும் அறுவடையாகும்)
90 நாள் வயதுள்ள குள்ளங்கார்
மற்றும் 120 நாள் முதல் ஐந்தரை மாதம் வரையிலான ஏராளமான ரகங்கள் உள்ளன
இவை இப்பொழும் துளி கூட ரசாயன உரம் இல்லாமல் நன்றாக விளைகிறது
அதோடு நமது பாரம்பரிய ரக நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணங்கள் கொண்டவை...
பாரம்பரிய ரகமான வெள்ளை பொன்னியை துளிகூட ரசாயன உரம் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் நேரடி சேற்று விதைப்பில் ஏக்கருக்கு 30 மூட்டைகள்(75 கிலோ) நாங்கள் எடுத்திருக்கிறோம்..
இயற்கையில் விளைந்த அரிசியை அதன் சுவையை கொண்டே அறியலாம்..
அதே போல் ஹைபிரிட் ரக காய்கறிகளை விட பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள் தான் சுவையும் மனமும் கொண்டவை.
வீரிய ஒட்டு ரகங்களுக்கு மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் பயன் படுத்தப் பட்டால் தான் வேளான்மை செய்யமுடியும்..
இதன் மூலம் தற்போது வரவை விட செலவுகள் அதிகமாகி வேளாண்மை செய்ய முடியாத சூழல் என்பது தான் உண்மை.
ஆக இயற்கை வேளாண்மை க்கு நமது பாரம்பரிய நாட்டு விதைகள் தான் ஏற்றது என்பதை அறிவோம்
தற்போது விவசாயிகளுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு பாரம்பரிய விதைகளை மீட்க தொடங்கியுள்ளார்கள்..
ஆக்கம்: கோபால தேசிகன்