இதை தான் நாங்கள் கர்மா என்கிறோம்
இந்து மெய்யியலில் அடிப்படையாக நாங்கள் "ரிதம் (rythm)" என்று ஒன்றை நம்புகிறோம். இந்த பிரபஞ்சம் தோற்றம் இயக்கம் ஒடுக்கம் அனைத்திலும் அந்த ரிதம் வியாபித்துள்ளது, அவற்றிற்கான காரணமே அது தான், அண்டத்தில் இருப்பதுவே பிண்டத்திலும் என்பது போல பிரபஞ்சம் மட்டும் அல்ல இயற்கை, உயிரிணங்கள், மானுட சமூகம், மனிதர்களுக்கிடையில், ஒரு தனி மனிதனுக்குள்ளேயும் வரை அனைத்திலும் இந்த ரிதம் வியாபித்துள்ளது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த ரிதத்தின் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தியே தீரும், எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் கூட நாம் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறோம், வெரும் நமது சுவாசமே கோடிக்கணக்கான நுன்னுயிர்களை கொன்றுக்கொன்டு/வாழ வைத்துக்கொண்டு தான் உள்ளது, அதனால் நாம் செயலாற்றாமல் ஒருக்கனமும் இருப்பதில்லை, நமது இருத்தல் என்பதே கர்மமாற்றுதல் தான், அதற்கான விலைவுகளை ஏற்படுத்துவது தான்.
இதை தான் நாங்கள் கர்மா என்று குறிப்பிடுகிறோம். இப்பொழுது நாம் ஆற்றும் கர்மா இந்த ரிதத்துடன் இருப்பது தான் தர்மம், ரிதம் எப்படி பிரபஞ்சம் முதல் தனிமனிதனுக்குள்ளே வரை அனைத்து தளங்களிலும் உள்ளதோ அதே போல இந்த தர்மமும் அனைத்து தளங்களிலும் உள்ளது. பூமியலவில் இயற்கையோடு, சமூக அளவில் பிற மனிதர்களோடு, தனிமனித அளவில் நமக்குள்ளேயே முடிந்த அளவு ஒத்திசைவோடு(ரிதம்) நேற்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாழ்வது தர்மத்தின் அடிப்படையில் வாழ்வது. அப்படி வாழ்ந்தால் ஒவ்வொரு தனிமனிதனும் தானும் மேன்மையடைவதோடு, தான் சார்ந்த சமூகம், சூழல் அனைத்திலும் நேர்மறையான தாக்கத்தை செலுத்தி அவையும் மேன்மையடையும் வகையில் வாழ முடியும்.
நாம் நிறங்களை ஏழாக வகைபடுத்தினாலும் கூட உண்மையில் அப்படி எந்த தனித்த எல்லைகளும் கிடையாது அது ஒரு continious spectrum தான் அதை நாம் நமது பயன்பாட்டிற்காக அதன் தன்மைகளின் அடிப்படையில் ஏழாக/பலவாக வகைப்படுத்திக்கொள்கிறோம். அதே போல தான் இந்த தன்னியல்பு என்பதும் ஒரு continious spectrum போல தான் அதை அதன் பன்புகளின் படி நாம் நான்காக வகைப்படுத்திக்கொள்கிறோம். இந்த நான்கிற்குள்ளேயும் கூட அவரவர்களுக்கான தன்னியல்புகள் சில மாற்றங்களை கொண்டிருக்கலாம். ஒருவன் தனது தன்னியல்பிற்கு ஏற்ற வகையில், தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவான் என்றால் அவனது வாழ்வும் முறன்பாடுகள் இல்லாமல் ஒத்திசைவுடன் இருந்து தனிமனிதன் அளவில் அவனும், சமூகமும் மேன்மையடையும் வகையில் இருக்கும். அது தான் ஸ்வதர்மத்தின் படி செயல்படுவது.
நீதி என்பது ஏதோ நாம் உறுவாக்குவது அல்ல அது ஏற்கனவே இருப்பது தர்மத்தின் படி வாழ்ந்தால் நீதி தானாகவே அதன் பலனாக இருக்கும். இப்பொழுது சமூகத்திற்கான சட்டம் என்பது தர்மம்/அறத்தின் அடிப்படையில் ஒரு சமூகமாக நாம் வாழ்வதற்காக நாம் வகுத்துக்கொள்ளவது தான். யதார்த்த நிலையில் இருப்பது என்பதால் சட்டம் எப்போதுமே கால தேச சூழலுக்கு பொருத்தே அமைய முடியும் அதே போல ஒட்டுமொத்த நிலவர (macro level) தான் அமைய முடியும். அந்தந்த கால சூழல், வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப தர்மம் என்றால் என்ன என்று உணர்ந்த ஞானிகள், கற்றறிந்தவர்கள், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனிமனித அளவிலும், ஒரு சமூகமாகவும் சுதந்திரமாகவும், ஒத்திசைவுடனும் வாழ வகுப்பது தான் சட்டம். நமது கால சூழல் மாறும் போது இன்று நீதியை நிலைநாட்டும் வகையில் வகுக்கப்பட்டுள்ள சட்டங்கள் நாளை அதே நீதியை மறுப்பதாகவும் அமைய முடியும் அது தான் இயற்கையும் கூட எனவே அந்த சட்டங்களும் தர்மம்/அறம் என்பதை ஒரு கலங்கரை விளக்காக, ஒரு லட்சியமாக வைத்து கால சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.