Tuesday, December 23, 2014

Keerthivasan

ஆதிசங்கரரின் - பஜகோவிந்தம் - நான்காவது ஸ்லோகம்

ஆதிசங்கரரின் -  பஜகோவிந்தம் !

நான்காவது ஸ்லோகம் - வாழ்க்கையே நிலையில்லாதது !


 நளிநீ தளகத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் |
வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்தம்
லோகம் ஸோகஹதம் ச ஸமஸ்தம் ||


நளிநீ தளகத ஜலம் - தாமரை இலைமீதுள்ள தண்ணீர்
அதிதரளம் - மிகவும் சஞ்சலமானது
ஜீவிதம் - வாழ்க்கையானது
அதிசய சபலம் - மிகவும் சஞ்சலமானது
வ்யாத்யபிமாந க்ரஸ்தம் - நோய் , கர்வம் என்பவைகளால் விழுங்கப்பட்டதாகவும்
ஸோகஹதம் ச - வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும்

தாமரை இலைமீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர் போல மனித வாழ்க்கை நிலையற்றது . உலகில் எங்குப் பார்த்தாலும் நோயும் செருக்கும்தான் காணப்படுகிறது . எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை . எனவே நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக அலையாதே .

இங்கு சங்கரர் பொதுவாக வாழ்க்கையின் தன்மையைக் கூறுகிறார் . தாமரை இலையின் மேலுள்ளத் நீர்த்துளியானது துள்ளி , அதிர்ந்து , நிலையற்று அலைவது போல் மனிதனின் உள்ளம் அலைபாய்கிறது . சபலமே அதன் நிரந்தரப் பான்மை . நோயால் பீடிக்கப்பட்ட உடலும் , பற்றுகளால் பீடிக்கப்பட்ட மனமும் எல்லா வகையிலும் துயரத்தில் மூழ்கி நிற்கிறது .

பற்றுகளாலும் அபிமானத்தாலும் நாம் அடைவது சுகம் போல் காட்டினாலும் உண்மையில் சுகமன்று. கவலையும் துயரமுமே ! இவற்றிலிருந்து நீங்கி பகவானை சரணடைவோமாக என்பது சங்கரர் வாதம் .

தொகுப்பு Prema Seetaraman

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :