Wednesday, December 24, 2014

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 6

Sister Nivedita
Born: 28 October 1867 @ County Tyrone, Ireland
Died: 13 October 1911 (aged 43) @ Darjeeling, India

இன்றைய வங்காளதேசத்தில் உள்ள பாரிசால் என்ற இடத்தில் சுரேந்திரநாத் பானர்ஜியின் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.  ஏற்பாட்டாளர்கள் வந்தே மாதரம் கோஷத்தை போடமாட்டோம் என்று எழுதி கொடுத்துதான் உத்தரவே வாங்கியிருந்தனர்.  இது பானர்ஜிக்கு மிக வருத்தம் என்றாலும் எழுதி கொடுத்ததினால் போகட்டும் என்று பொறுத்துகொண்டார்.

அனைவரும் ஊர்வலமாக் போனார்கள் அணிவகுப்பில்.  கோஷம் போடாமல் அமைதியாக போவதை கண்ட போலிஸார் எரிச்சலாகி  ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டமிட்டு சும்மாவேனும் ஒருவனை அடித்தார்கள்.  ஒருவனுக்கு அடிபட்டவுடன் அவன் வந்தே மாதரம் என்று கத்த உடனே அனைவரும் வந்தே மாதரம் என்று கோஷமிட்டார்கள்.  அவ்வளவுதான்.

போலீஸ்காரர்களுக்கு கிடைத்தது வாய்ப்பு கண்டமேனிக்கு அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.  இப்போது போல அடி இடம் பார்த்து அடி விழாது அன்று.   வெறி கொண்டு தாக்கும் அதிகாரம் இருந்தது.  உயிர்கள் போனால் கேள்வி கிடையாது  போட்டு சாத்தி எடுத்தார்கள்.  அந்த இடமே போர்க்களம் போல இருந்தது.  நூற்றுகணக்கானவர்களின் உடம்பில் ரத்தம் வழிய ஆரம்பித்தது.   பானர்ஜியின் தலையிலும் பலமான அடி.  அப்படியே ரத்தம் சொட்ட சொட்ட கூட்டம் நடந்தது.  அதற்கு பிறகுதான் மருத்துவமனைக்கே சென்றார்கள்.  அவர்களை சந்தித்த நிவேதிதை சொன்னார்.

இவர்களை சந்தித்த சகோதரி நிவேதிதை "நீங்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ரத்தமல்ல.  சுதந்திர போராட்டத்திற்காக விதைக்கப்பட்ட விதை, உரம், நீர், காற்று அனைத்தும் அதுவே.  அந்த ஒவ்வொரு துளி ரத்தத்திலும் ஆயிரமாயிரம் வீரர்கள் தோன்றி இந்த பாரத தாயின் விலங்கை உடைதெறிவார்கள்.  அதற்கான முதல் கட்ட நிகழ்வே" இது குறிபிட்டார்.  இந்த நாட்டிற்கு வந்தே மாதரம் என்ற கோஷத்தை வெற்றி கோஷமாக வீர கோஷமாக ஆக்கி தந்த பெருமை சகோதரி நிவேதிதையையே சேரும். 

இவர்தான் நமது நாட்டின் கொடியாக பகவத் த்வஜமான காவி கொடியும் அதிலே ததீசி முனிவர் தன்னலம் பாராமல் ஈந்த முதுகெலும்பான வஜ்ராயுதமும் இருக்க வேண்டும்.  தியாகத்தின் உருவாக காவிக்கொடியும், தேசத்திற்காக தன்னையே ஈய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வஜ்ரத்தையும் வடிவமைத்தார்.

தேசிய கீதமாக வந்தே மாதரம் இருக்க வேண்டும் என்று அதையே தனது பள்ளியில் பாட வைத்தார்.  பின்னாளில் மேடம் காமாவும் வவேசு ஐயரும் வெவ்வேறு வடிவங்களை சிந்தித்தார்கள்.

இந்தியர்கள் இப்படி காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒன்று சேர்வதையும் இப்படியே போனால் பெரும் கூட்டமாக இது உருவாகலாம் எனவும் இதை வேறு விதமாக உடைத்துவிடவும் திட்டமிட்டான் கார்சன் பிரபு.

இது போதாதென்று ஜஸ்டீஸ் பார்டி என்று ஒன்றை ஆரம்பிக்க சொல்லி மற்ற ஜாதிக்காரர்களை தூண்டி விட்டார்.  ஏனென்றால் அந்த காலத்தில் சுதந்திர போராட்டத்தில் பிராமணர்கள் பெருமளவில் காங்கிரசில் சேர்ந்து போராடினார்கள்.  அதனால் பிராமண எதிப்பு இயக்கம், ஆரிய திராவிட போர் கருத்து என்று பலவற்றை திணித்தார்கள்.

ஆரம்பத்தில் இரண்டு முக்கிய அமைப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமேன்று சொன்னேன். முதலில் காங்கரஸின் ஆரம்பத்தை பார்த்தாயிற்று இரண்டாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அமைப்பு முஸ்லிம் லீக்.

 ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :