Wednesday, December 24, 2014

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 1 – முன்னுரை



பல நாட்களாக நான் படித்து ரசித்து வந்த பதிவுகளின் தொகுப்பே இந்த வலைதளம். ஒருமுறை DHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement] என்கிற முகனூல் குழுவில் துரோனாச்சாரியார் என்கிற நாமத்தில் ஒரு நண்பர் தொடராக எழுதியிருந்ததை பார்க்க நேரிட்டது. ஸ்லோகங்களின், பதிகங்களின், இந்து மத இலக்கியங்களின் தெளிவுரை என்று பலர் எழுதியிருக்கிறார்கள் ஆனால், இந்த தொடர் ஒரு ஆய்வு கட்டுரை போன்றது. 

இவை போன்று ஒரு ஆய்வியல் தொடர் நான் படித்தது மிக குறைவு. அப்படி நான் படித்து ரசித்து ஒன்று கவியரசரின் "அர்த்தமுள்ள இந்து மதம்". அவர் பலரால் அறியபட்டவர் அதனால் பலரை சென்றடைந்தது. அதே வகையில் இந்த தொடர் பதிவும் பலரால் அறியப்பட வேண்டியது.

இன்றுவரை பலரை குற்றம் சொல்லி நாம் கடந்து செல்கிறோம் குற்றம் சொல்லும் நாம் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதில்லை. இந்த தொடர் நம் மதம் சந்திக்கும் பிரச்சனைகளையும் அதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதையும் அலசுகிறது. அருமையான ஒரு பதிவை முகனூலில் எப்போதும் சீண்டுவோர் இல்லை. யாரையாவது இழுத்து போட்டு வீரம் காட்டினால் மட்டுமே அவை பலருக்கு விருப்பமானதாக இருக்கும் இந்த நிலையில் அந்த நீர்குமிழியில் இருந்து வெளி உலகத்துக்கு இதை கொண்டு செல்வதே இதன் நோக்கம்...

உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்ய எத்தனிக்கும் ஒரு தொடர் இது...

உங்கள் நண்பர் உற்றார் உறவினர்கள் என்று அடுத்த கட்டத்திற்கு இந்த தளத்தை கொண்டு செல்வீர்கள் என்கிற எதிர்பார்ப்புடன்.

என்றும் அன்புடன்
கீர்த்திவாசன்

துரோனாச்சாரியார் முன்னுரை:
இந்தியாவின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதம் அலாதியானது! காலநிர்ணயங்களுக்கு அப்பாற்பட்டது! என் சிந்தனையில் இன்று ஏன் இந்த மதம் இந்த நிலைக்குப் போனது என்று எண்ணிப் பார்க்க விரும்புகிறேன்! இதற்கு அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது முட்டாள் தனமானது! ஒரு மதத்தின் உறுப்பினர்கள் கட்டுக்கோப்பான முறையில் இருந்தால் எந்த அரசாலும் ஒன்றும் செய்துவிட முடியாது! அவ்வாறான விஷயம் இங்கு இல்லை என்பதே என் கவலை!

உண்மையில் ஹிந்து மதம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய சூழலில் உள்ளது! மதம் சுயபரிசோதனை செய்வது என்றால் அந்த மதத்தில் உள்ள மனிதர்கள் என்று பொருள்! மத விஷயங்கள் பற்றிய சரியான பார்வை சுயபரிசோதனை செய்து கொள்வதன் மூலமே வரும் என்பதில் ஐயம் இல்லை!!

ஸ்ரீ கிருபானந்த வாரியார் அவர்களிடம் ஒரு பக்தர் கேட்டார்
"சுவாமி ! நீங்கள் நமது சனாதன தர்மம் க்ஷீண தசைக்குப் போய்க் கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்களே ! ஆனால் கோவிலலுக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேதானே இருக்கிறது அப்புறம் எவ்வாறு அப்படிக் கூறுகிறீர்கள்?" என்றார்.
அதற்கு வாரியார் சொன்னது அவர் பதில் மட்டுமல்ல அதுதான் என் பதிலும் கூட! வாரியார் சொன்னார் ''ஆமாம் உண்மைதான் கோவிலுக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது! இன்று பக்தி அதிகரித்து விட்டது! ஆனால் தர்மம் குறைந்து விட்டது! '' என்று!

இதை விளக்க எளிய உதாரணம் திருப்பதி உண்டியலில் கறுப்புப் பணத்தில் கடவுளின் பங்காக ஒருவன் பெயர் தெரியாமல் பணம் போடுவது 'பக்தி' என்றால் அவ்வாறு கறுப்புப் பணம் சம்பாதிப்பதே தவறு என்னும் எண்ணம் கொண்டவனாக அவன் மாறிப் போய் பத்து ரூபாய் பணம் போட்டால் அதுவே 'தர்மம்'!

இன்னொன்று இன்று பணக்கற்றைகளைக் காட்டி மக்களை மதம் மாற்றும் கொடுஞ்செயல்கள் இந்து மதத்தை நசுக்கிக் கொண்டுள்ளது! அரசுகள் அதை வேடிக்கை பார்க்கும் / ஊக்குவிக்கும் நிலையில் உள்ளதால் இது குறித்து நாம்தான் கவலைப் பட்டாக வேண்டியுள்ளது! இது குறித்து நான் உணர்வது அவ்வாறு மதம் மாறிச் செல்லும் மக்களுக்கு நமது மத சிறப்புகள் மற்றும் மதம் பற்றிய சரியான பார்வை இருந்தால் எந்தக் கொம்பன் வந்து எதைச் சொன்னாலும் விரட்டி அடித்து விடுவார்கள் என்பதே உண்மை! உம் - நரிக் குறவர்கள்! அவ்வாறு மதம் மாறிச் செல்லும் மக்களுக்கு நமது மதச் சிறப்புக்கள் மற்றும் மதம் பற்றிய சரியான பார்வையைக் கொடுக்க வேண்டியது நம்போன்ற மத ஆர்வலர்களின் தார்மீகக் கடமை ஆகும்! இதற்கு PREVENTION IS BETTER THAN CURE என்னும் பழமொழியை உதாரணமாக சொல்ல விரும்புகிறேன்!

இந்தத் தளத்தில் சிந்தனை/ஆய்வியல் ரீதியிலான பதிவுகள் மிகச் சிலவே இருப்பதைக் காண்கிறேன்! என் பதிவுகள் கண்டிப்பாக அப்படித்தான் இருக்கும்! அதைப் படிப்பவர்களுக்கு நமது மதம் பற்றிய சரியான பார்வை கிடைக்க உதவலாம் என்பது என்னுடைய எண்ணம்! ALL OF MY POSTS WILL BE IN THE THOUGHTS/ANALYTICAL ORIENTED RATHER THAN JUST WRITING SOMETHING FROM THE RELIGIOUS BOOKS!

அவ்வாறு சிந்தனை/ஆய்வியல் அடிப்படையில் ஹிந்து மதம் பற்றிப் புரிந்து கொண்டால் இங்கு சாதி/ பிரிவுகள் வேற்றுமைகளுக்கு இடமேயிருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் இவையெல்லாம் இறைவன் செய்து வைத்தது அல்ல! மனிதர்களால் உண்டாக்கப்பட்டது! எனக்குத் தெரிந்து ஹிந்து மத ஆய்வியல் பற்றித் தடிதடியான புத்தகங்கள் பல இருந்தாலும் சரியான வகையில் எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அதைச் சொன்னது கவியரசர் கண்ணதாசன் மட்டுமே என்பதே என் கருத்து! அனால் அவரும் கூட முழு அளவில் அதை மேற்கொள்ளும் முன் மறைந்து போனார்!

இந்த உரையை நான் மிக நீண்டதாக எழுதுவதன் நோக்கமே ஒரு சுலோகம் பற்றி எழுதி பொருளை உரைத்தால் எந்தக் கருத்து வேறுபாடும் வராது! ஆனால் சிந்தனை/ ஆய்வியல் ரீதியில் சொல்லும் போது சந்தேகங்கள், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கைதான்! ஆனால் என்னுடைய எழுத்துக்களில் எந்தப் பாரபட்சமும் தனி மனிதத் தாக்குதலும் இருக்காது! நானொன்றும் பெரும் ஞானி இல்லை! சாதாரண ஹிந்து மத ஆர்வலன்தான்! இருப்பினும் மக்களிடம் இந்த மதம் பற்றிய சரியான பார்வைகள் இல்லாது போய்விட்டதே என்னும் எண்ணத்தில் எனக்குத் தெரிந்ததை எழுத முயல்கிறேன்! அவ்வாறு எழுதும் போது என் எழுத்தில் தவறுகள் இருந்தால் நீங்கள் என்னைத் திருத்துவதை நான் வரவேற்பேன்! சந்தேகம் இருந்தால் தெளிவு பெரும் நோக்கில் கேட்டால் எனக்குத் தெரிந்த அளவில் விளக்குவேன்! ஆனால் சுயவிளம்பரம் பெறும் நோக்கில் யாரேனும் குறுக்கிட்டால் அட்மின்கள் மற்றும் குழுத்தலைவரின் முடிவுக்கே அது செல்லும்!

இந்த முன்னோட்டப் பதிவு வெளியிடப் பட்டு அதற்குக் குழுத் தலைவர் மற்றும் அட்மின்களின் ஒப்புதலும் கிடைத்து உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் என்னுடைய பதிவுகள் தொடர்ந்து வெளிவரும் என்பதை அன்புடன் தெரிவித்து வணங்குகிறேன்!!!

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :