Saturday, December 13, 2014

Keerthivasan

அனுபவம் இரண்டே வகைதான்!

அனுபவம் இரண்டே வகைதான்!

அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம். யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள். கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமொரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.

கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்!

இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், ‘கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..‘ என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம், வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு! இதை வைத்தே அவர் பெரிய  பணக்காரராகி விட்டார்!

ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்தவரோ, தனக்கிருந்த பிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறார். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.

ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது - சிறப்பான அனுபவம்!
எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்!

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :