Monday, December 22, 2014

Keerthivasan

மஹாபாரதத்தில் மறு ஜென்மம்!


மஹாபாரதம் நிகழ்வுக்குக் காரணம்:
அதர்மம் அதிகரிக்க பூமி தேவி பாரம் தாங்காமல் பிரம்மாவை வேண்ட, அவர் தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸுகள் உள்ளிட்ட அனைவரையும் அவரவர் அம்சத்தில் பூமியில் பிறக்குமாறு கட்டளையிட்டு, விஷ்ணுவையும் அவதரிக்குமாறு வேண்டுகிறார். எனவே விஷ்ணு கிருஷ்ணராக அவதரிக்கிறார். மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது. ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடுவதை ஆதிபர்வம் (65ம் அத்தியாயம்) விளக்குகிறது.

நளாயினியே திரௌபதி: நளாயினியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ, அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார். (ஆதி பர்வம் - 213ம் அத்தியாயம்)

அருவருப்பான உருவம் கொண்ட கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்ட வருமான மௌத்கல்யர் என்ற மஹா முனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயினியுடன் காம போகங்களில் திளைத்து வாழும்போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நளாயினியை அவர் விடவே, நளாயினி பூமியில் விழுந்தாள். தான் இதுவரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயினிக்கு தெரிவிக்கவே மௌத்கல்யர். துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார். பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி, நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என ஆசீர்வதித்து வரம் கொடுகிறார்.

ஏன் ஐந்து கணவர்கள்? என்று திகைப்புடன் நளாயினி வினவ, நீ ஐந்து முறை பதியைக் கொடும் என்று கேட்டாய்! ஆகவே, உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள் என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயினியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.


ஹிரண்யகசிபுவே சிசுபாலன்: ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.
ஹிரண்யகசிபுவே சிசு பாலனாகப் பிறக்கிறான்.
விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான்.
ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன் சல்லியனாகவும்,
இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்ட கேதுவாகவும் பிறக்கின்றனர்.
அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன், த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான்.


பீஷ்மரே அஷ்டவஸுக்களில் கடைசி வஸு: அஷ்டவஸுக்கள் வஸிஷ்டருடைய சாபத்தாலும், இந்திரனுடைய கட்டளையினாலும், சந்தனு ராஜாவுக்கு கங்காதேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர். அவர்களில் கடைசி வஸுவே பீஷ்மர்.

ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியார். 
துவாபுர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!
ஸப்த மருந்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.
விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே.
பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே.
ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான். அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.
பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.
கலியின் அம்சம், கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது.

மிக நீண்ட பட்டியலான இந்த புனர் ஜென்ம விவரங்களை ஆதி பர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கி அதன் மர்மங்களை அவிழ்க்க முற்படலாம். இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

இவற்றை நுணுகி ஆராய்ந்தால் மறம் வலிமையுறுவது போலத் தோன்றுவதும், ஆனால் இறுதியில் அறமே ஜெயிப்பதையும் பார்த்து மகிழ முடிகிறது.

நன்றி தினமலர்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :