Saturday, December 20, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - ஊடகவியல்....





பல வருடங்களுக்கு முன் முதன் முதலாக நான் கணிபொறி சம்பந்தபட்ட வேலையில் சேர்ந்த பொழுது ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது. "தி வாஷிங்கட் போஸ்ட்" என்கிற பத்திரிக்கையின் பிரதியை டிஜிட்டலாக மாற்றும் வேலை எனக்கு.
 
செய்தி இதுதான்: 14 வயதுமிக்க ஒரு சிறுவன் 70 வயது மதிக்க தக்க பெண்மணியை பலாத்காரம் செய்துவிட்டான். அவனுக்கு என்ன தண்டனை என்பதுதான் அது.

இந்த செய்தி அந்த பத்திரிக்கையின் ஒரு ஓரத்தில் கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்தது மற்ற அனைத்தும் நாட்டை பற்றிய சிறந்த செய்திகளும், ஆரோக்கியமான விவாதங்களுமே இடம் பெற்றிருந்தது. ஆனால் நம் நாட்டில்?

பலாத்காரம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவலாக நடக்கும் குற்றச் செயல் அதற்காக அதை மறக்கடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை ஆனால் இதை முதன்மை செய்தியாக்கினால் நம் நாட்டை பற்றிய அபிப்ராயம் நிச்சயம் சீரழிந்து போகும் என்பது மட்டுமே நிலவரம். காரணம் தினம் ஒரு செய்தி இப்படி நிச்சயம் கிடைக்கும்.
மற்ற எந்த துறையையும் விட ஊடகத் துறை மக்கள் மன ஓட்டத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது ஆனால் பாரதத்தில் இது வேறு மாதிரியாகவே கொண்டு செல்கிறது.

இந்து மதம் சம்பந்தப்பட்ட ஒரு விவாதம் என்றால் விவாதிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

இந்து மதத்தை பற்றிய விவாதத்தில் மதம் இல்லை என்று சொல்பவரும், இந்து மத்தை அறிந்த ஒருவரும் இருக்க வேண்டும் ஆனால் இங்கு?
ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமியர்கள், மதம் இல்லை ஆனால் இஸ்லாம் இருக்கு என்று வெளிப்படையாகவே சொல்லும் காம்ரேடுகள் ஒரே ஒரு இந்து சார்பாளர்...

நடுநிலை இல்லாமல் அடுத்தவர் பேசும் ஆதாரமற்ற ஒன்றுக்கு கூட தடை விதிக்காமல் வேடிக்கை பார்க்கும் நிகழ்ச்சி நடத்துபவர். இதனால் இவர்கள் சாதிக்க போவது என்ன? மக்களுக்கு என்ன தெளிவு கிடைத்துவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்?

விடை: ஒன்றுமில்லை. ஒரு சார்பு எதிர்ப்பு மட்டுமே இன்று நடக்கும் விவாதங்கள்.

போகிற போக்கில் ஆர் எஸ் எஸ்தான் காந்தியை கொன்றது என்றும், குஜராத் கலவரத்துக்கு மோடியே காரணம் என்றும் உளரி கொட்டுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இரண்டும் நீதிமன்றங்களின் மூலம் முறையாக வாதாடபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டவை ஆனாலும் ஊடகங்கள் இது போன்ற வாதங்களை கைவிடவில்லை.

முகனூலில் கண்டபடி கத்துவது போல ஊடகத்திலும் கத்திக் கொண்டிருப்பதால் என்ன பயன் கிடைக்க போகுதோ தெரியவில்லை....

அன்புடன்...
கீர்த்திவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :