Monday, December 22, 2014

Keerthivasan

நம்மில் யார் ஆங்கிலேயர்?


ஐசக் நியுட்டனுக்கு பல நூற்றாண்டுகள் முன்பே, அதாவது 5ஆம் நூற்றாண்டில் ஆரியபட்டா இயற்பியலின்(PHYSICS) பல பரிமாணங்களை கண்டறிந்தார்.

ஆரியபட்டாவுக்கு பை (22/7) விடை தெரிந்திருந்தது. பூமி சூரியனை சுற்றுகிறது, உலகம் உருண்டை வடிவம், ஒரு குறிப்பிட்ட axisஇல் பூமி சுற்றுகிறது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அந்தரத்தில் தொங்குகின்றன, புவியீர்ப்பு விசையின் தன்மைகள், க்ரஹணங்களின் நேரம், காலம், பூமியின் அகலம், சூரியனுக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள தூரம், அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். இவை அனைத்தையும் ஆரியபட்டீயம் எனும் தன புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

நியுட்டன் கலிலியோ பிறப்பதற்கு 1100 ஆண்டுகள் முன்பே இதையெல்லாம் கண்டறிந்தார். ஹிந்து மதமும், வேதிய சிந்தனைகளும் சரியாக புரிந்து கொள்ளாதவர்களால், குறுகிய சிந்தனை கொண்டவர்களால் பரிகசிக்கப்படுகிறது.

ஆங்கில புத்தாண்டு சரியா?
நாம் முஹுர்த்த காலங்கள் பற்றி மிக கண்டிப்பாக உள்ளோம் இன்று வரை. எல்லா வகையான காரியங்களும் அதை ஒட்டியே நடந்துள்ளன. பஞ்சாங்கம் அல்லது வேத நாட்காட்டி (calendar) இது சம்பந்தமாக நிறைய தகவல்களை தருகின்றன.

இப்போதுள்ள மற்ற நாட்டு காலேண்டருக்கும் நமது பாரத நாட்டு காலேண்டருக்கும் பல ஒற்றுமைகளை காண முடிகிறது. இப்போதுள்ள கிரகோரியன் நாட்காட்டி 1582கிபி 13ஆம் போப் கிரகோரி அறிமுகம் செய்தார். அதற்கு முன் ஐரோப்பியர்கள் ரோமானிய நாட்காட்டியை பின்பற்றினர். அந்த ரோமானிய நாட்காட்டியும், டயோனிசியஸ் எக்சிஜியசால் ஒரு திருத்தம் செய்து அறிமுகப்படுத்தப்பட்டது 525 கிபியில். அதுவரை மார்ச் 25 தேதியே புத்தாண்டாக இருந்தது உலகெங்கும். இந்த தேதி சூரியனை கொண்டு கண்டு கணிக்கப்படும் யுகாதியோடு ஒத்து வருவதை காணலாம். அனைத்து நாட்காடியிலும் நாம் பின்பற்றும் 7 நாட்கள் உள்ளது. சூரியனுக்கு சப்த அஸ்வான் என்று பெயர். 7 குதிரை பூட்டிய ரதத்தை ஓட்டுகிறவர் என்று பொருள். ஏழு வர்ணங்களோடு ஒத்து போகிறது. ஏழு நாட்களோடு ஒத்து போகிறது.

ரவிவாரம் = சூரிய நாள் = ஞாயிறு = Sun day.
சோமவாரம் = திங்கள் = moon day (monday)
சனிவாரம் = சனிகிழமை = saturn day (saturday)

Tuesday, Wednesday, Thursday மற்றும் Friday ஆங்கில பெயர்கள். இவைகள் Norse இன கடவுள்களான Tiu, Woden, Thor and Freya பெயர்களில் வைக்கப்பட்டுள்ளது. ரோமானியர்களுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. பாரத நாட்டு நாட்காட்டியில் 12 மாதங்கள் இருப்பதையும் அதன் தன்மையையும் உணர்ந்து 525 கிபியில் ஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை, Augustus பெயரால் ஆகஸ்ட் மாதத்தையும் சேர்த்தார்கள். இந்த பெயர்கள் ரோமானிய பெயர்களோடு ஒத்து போவதை பாருங்கள். அவர்களுடைய முதல் மாதமான மார்ச்சிலிருந்து கணக்கு எடுத்தால் ஏழாம் மாதத்தில் (சப்த) September, எட்டில் (அஷ்ட) October, ஒன்பதில் (நவ) November மற்றும் பதத்தில் (தச) December வருகிறது.


இப்போது ஏன் இரவு பனிரெண்டு மணிக்கு நாள் பிறக்கிறது என்று பார்ப்போம். ஐரோப்பாவில் 12 மணி ஆகும்போது பாரதத்தில் மணி காலை 5. நமக்கு பொழுது புலரும்போது, நமது பிரம்ம முஹுர்த்ததை அவர்கள் தங்கள் கணக்குக்காக வைத்துகொண்டார்கள். இப்படித்தான் உலகில் பல இடங்களில் பின் பற்றப்படுகிறது.

ஆக, நாம் பனிரெண்டு மணிக்கு புது வருடம் பிறந்தது என்று நினைத்து கொண்டாடுவது அவர்களுக்கு முந்தைய நாள் சாயுங்காலம் 6.30 என்று பொருள். இப்படி யாருக்கும் சம்பந்தமில்லாத நேரத்தை நாளை புது வருடம் என்று கொண்டாடுவது எப்படி சரியாகும்? இரவு மனிரெண்டு மணி என்பது நடுநிசி. துஷ்ட சக்திகள் உலாவும் நேரம். இந்த நேரத்திலா வருடம் பிறக்கும்? ஆகம விதிப்படி கோவில்களை அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூடிவிடுவார்கள். ஆனால் பணம் வருகிறது, கூட்டம் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக கோவில்களையும் திறக்கிறார்கள்.

சிந்தியுங்கள் நண்பர்களே சிந்தியுங்கள். நமக்கு புத்தாண்டு சந்திரமான கணக்கு படி யுகாதி அல்லதுசூரிய கணக்கின்படி ஏப்ரல் 14.

January 1 இப்படி கொண்டாடப்படும் நாளுக்கு ஆங்கில புத்தாண்டு என்று பெயர்.
நம்மில் யார் ஆங்கிலேயர்?

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :