Wednesday, December 17, 2014

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 1 அறிமுகம்

எங்கே பிராமணன் ? – 1 அறிமுகம்

‘எங்கே பிராமணன்?’ தொடர் ஜெயா டி.வி.யில் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகியது. அத்தொடரில், ஒவ்வொரு ‘எபிஸோட்’டிலும், நடுநடுவே சில விளக்கங்களை நான் அளித்து வந்தேன். அந்த விளக்கங்கள், கதையின் போக்கை ஒட்டியவை. பாசம்; கடமை; தர்மம்; சட்டம்; மன்னனின் பணி; அந்தணர் தன்மை; நட்பு; பகை; நெருக்கடியில் செய்யக் கூடியது; ஆசாரம்; சடங்குகள்; குடும்பத்தில் கணவன், மனைவி கடமைகள்; ஜோதிடம்; நாஸ்திகம்; பக்தி மற்றும் ஞானம் பற்றி பேசுகிற தமிழ் நூல்கள்; பாவச் செயல்களும் பிராயச்சித்தமும்; சில ஸ்தலங்களின் மகிமை; குரு, ஆச்சார்யர் போன்றவர்களின் பெருமை… என்று பல விஷயங்கள் பற்றி, அந்த விளக்கங்கள் சுருக்கமாக சில விவரங்களைக் கூறின.




ஹிந்து மஹா சமுத்திரம்’ தொடர், ஹிந்து மதம் பற்றிய சில அம்சங்களின் தொகுப்பு. இப்போது தொடங்க இருக்கிற இந்தத் தொகுப்பு, சில குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி, சிறிய குறிப்புகள். இதில் ஒரு வரிசை இருக்காது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, பல விவரங்கள், இதில் இடம் பெறும்.

இந்த விளக்கங்கள் – விவரங்கள் எல்லாம், பல நூல்களிலிருந்தும் திரட்டப்பட்டவை. ராமகிருஷ்ண மடத்தின் பிரசுரங்கள்; தெய்வத்தின் குரல் என்ற மஹா ஸ்வாமிகளின் கருத்துக்களின் தொகுப்பு; கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் நூல்கள்; ராமாயணம், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்கள்; ஸ்வாமி தயானந்த சரஸ்வதி போன்ற சான்றோர் பகவத் கீதைக்கு எழுதியுள்ள உரைகள்; ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் வேத விஞ்ஜ்யானம் என்கிற நூல்; மனுஸ்ம்ருதி; சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் நீதி நூல்; சுக்ர நீதி; ‘ஸுபாஷிதம்’ என்ற பொன்மொழிகள்; கி.வா.ஜ. பெரிய புராணத்திற்கு எழுதியுள்ள விளக்க நூல்; புலவர் கீரனின் திருவிளையாடற் புராணப் பேருரைகள்; அனந்தராம தீக்ஷிதரின் உபன்யாசங்கள்; திரு. சங்கர நாராயணன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு… என்று பற்பல நூல்கள், மற்றும் உபன்யாசங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை இந்த விளக்கங்கள்.

இவற்றை எல்லாம் நான் தொகுத்தது – ‘ரெஃபரென்ஸ்’ மூலமாக; நான் இவற்றை எல்லாம் அப்படியே கரைத்துக் குடித்தவன் அல்ல. சுப்புணி என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒருமுறை சொன்னார் : “ஸார்! யாரைப் பார்த்தாலும், உங்களைப் பத்தி, பிரமாதமாப் பேசறா! ‘உங்க சோ ஸாருக்குத் தெரியாத வேதமா? அவர் படிக்காத தர்ம சாஸ்திரமா?’

அப்படி இப்படின்றா! இந்த லட்சணத்துலே, நீங்க மஹாபாரதம் வேற எழுத ஆரம்பிச்சுட்டேள்! அவன் அவன் எங்கிட்டே, ‘சோ மாதிரி பண்டிதர் உண்டா?’ன்றான்! நமக்கு உண்மை தெரியும்! ஆனா அந்த இடத்திலே உங்களை விட்டுக் கொடுக்க முடியுமா? அதனாலே பேசாம ‘ஆமாம், ஆமாம்’னு சொல்லிட்டு வந்துடறேன்”.

இந்த மாதிரி ஒரு ராசி எனக்குண்டு. எனக்குச் சுத்தமாகத் தெரியாத விஷயங்களை, நான் நன்றாக அறிந்திருப்பதாக ஒரு நினைப்பு பலருக்கு ஏற்படும். ஆனால், என் நண்பர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்; என்னுடைய ‘அறிவு’ – ரெஃபரென்ஸ் அறிவு. படிப்பறிவல்ல. இதையும் மனதில் வைத்துக் கொண்டு, இந்தத் தொடரைப் படிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :