Tuesday, December 30, 2014

Keerthivasan

நேதாஜியும் நேருவின் துரோகமும் - 4

Nethaji With Adolf Hitler
நேதாஜியின் மறைவுச்செய்தி இந்தியாவுக்கு வந்தடைந்தவுடன் அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வாவெல் சொன்னது : இதை நான் நம்ப மறுக்கிறேன். அவர் ( நேதாஜி ) தலைமறைவாய்ப் போகவேண்டுமென நினைத்தால் கொடுக்கப்படும் மிக அருமையான செய்தி இதுதான் ‘’

அதே சமயம் காந்தியும் 1946 ஆம் ஆண்டில் சொன்னார் : ’’எனது உள்ளுணர்வு எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது சுபாஷ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பதுதான். அவர் எங்கோ மறைவாக இருக்கிறார். ’’
நேதாஜியை அறிந்தவர் யாருக்குமே தெளிவாகத் தெரிந்த உண்மை என்ன என்றால் நேதாஜி தப்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது எத்தகைய சூழ்நிலையானதாக இருந்தாலும் அவர் தப்பித்தே தீருவார் என்பதுதான். இதற்கு பல முன்னுதாரணங்கள் இருந்துள்ளன.

1941 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பிரிட்டிஷ் அரசு அவரை இல்லக் கைதியாக வைத்திருக்கையில் பிரிட்டிஷ் காவலர்களின் கண்களில் மண்ணைத்தூவி ஆஃப்கானிஷ்தான் சென்று அங்கே இருந்த இத்தாலியத் தூதுவரின் உதவியால் ஓர் இத்தாலிய வியாபாரியாக ‘’ ஆலண்டோ மஸோட்டா ‘’ என்னும் பெயரில் மத்திய ஆசியா வழியாக மாஸ்கோ சென்று பிறகு அங்கிருந்து பெர்லினுக்கு ஹிட்லரைச் சந்திக்கச் சென்றார்.

இதை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனை தூரம் மறைவாகச் சென்றடைவது என்பது இக்காலத்தில் கூட இயலாத விடயம். ஆயினும் அவரது தீரமும் தீர்க்கமான முடிவும் நாட்டுப்பற்றும் அவரை இந்த சாகசத்தைச் செய்து முடிக்கத்துணையாய் இருந்தன.

பெர்லினில் இருந்துகொண்டே பிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக வானொலியில் பிரச்சாரம் செய்து பிரிட்டிஷை இந்தியாவிலிருந்து துரத்த ஜெர்மனியின் துணையை நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இன்றைக்கு சொகுசாக வாழ்ந்துகொண்டு முகநூலில் பிரசங்கம் செய்பவர் யாரும் நேதாஜியின் அன்றைய முடிவை எகத்தாளமாகப் பேசலாம். ஆனால் எத்தைத்தின்றால் பிரிட்டிஷ் என்னும் பித்தம் ஒழியும் என்று இருந்த தேசபக்தரான நேதாஜி செய்தவை எதுவுமே தவறானவை அல்ல என்று அன்றைய காலக்கட்டத்தில் இருந்து யோசித்தால் புலப்படும்.

பிறகு ஹிட்லரின் சில கண்டிஷன்களால் வெறுப்படைந்து அங்கிருந்து நழுவி கடல்வழியாக நீர்மூழ்கிக்கப்பலின் மூலமாகவே ஜப்பானுக்குச் சென்று அங்கே 50 ஆயிரம் படைவீரர்களைத் திரட்டி ஆசாத் ஹிண்ட் ஃபௌஜ் அல்லது இந்திய தேசிய ராணுவத்தை (Indian National Army (INA) ) அமைத்தார். அந்தப்படையில் பெரும்பாலும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிசெய்து ஜப்பானால் கைப்பற்றப்பட்ட இந்திய வீரர்களை ஒருங்கிணைத்தார். இதைச் சொல்லவருவதன் காரணம் அவர் நினைத்தால் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ரகசியமாகச் செல்லமுடியும் என்பதுதான். அத்தகு நுண்ணறிவும் சமயோசிதப்புத்தியும் கொண்ட ஒரு தேசியத்தலைவரைத் தான் நேருவும் காந்தியும் மிக எளிதாக ஓரம்கட்டினார்கள். காரணம்..?

ஆரம்பம் முதலாகவே அவரது தீட்சண்ணியத்தையும் தேசப்பற்றையும் அவரது மக்களை வசீகரிக்கும் தேஜஸும் காந்தியையும் நேருவையும் பொறாமைப்பட வைத்ததோடு நேதாஜி இருந்தால் அவர்களது நாடகம் செல்லாது என்பதையும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்கள்.

நேதாஜி பிரிட்டிஷுக்கு எதிராகப் படைதிரட்டிப் போரிட முடிவு செய்த உடனேயே அவரை தேசத் துரோகி எனவும் நாட்டுக்கு எதிரானவர் என்றும் பயங்கரவாதி என்றும் பிரிட்டிஷார் முடிவு எடுத்து அறிவித்ததோடு காந்தியையும் நேருவையும் கூட இந்தச் செயலுக்கு ஒத்து ஊதவைத்தனர். காந்தி சொன்னவை எல்லாவற்றையும் பிரிட்டிஷார் செய்து முடித்தார் என்னும் மிகப்பெரிய வியப்பான உண்மையை நம்மில் எத்தனைபேர் அறிவோம்..? அதை விடுங்கள். அதை பிறிதொரு சமயம் கண்டிப்பாக எழுதுவேன்.

ஜப்பானில் விமான விபத்து என்னும் நாடகத்தை நடத்தி அவருடன் உற்ற நண்பராக இருந்த ஹபிப் புர் ரஹ்மானின் உதவியால் ரஷ்யா சென்று அங்கே தலைமறைவாய் வாழ்க்கை நடத்திப் பின்னர் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் இந்தியாவுக்கு வந்து யோகியாகவும் சாதுவாகவும் ஃபைஸாபாத்தில் வசித்து பிறகு இயற்கை எய்தினார் என்பது தான் இதுவரை வந்த நேதாஜி பற்றிய செய்திகளில் இருந்து பெரும்பாலோர் முடிவுக்கு வந்திருக்கும் விடயம்.

ஆனால் காங்கிரஸ் ஆரம்பம் முதலாகவே நேதாஜிக்கு வன்சகமும் துரோகமும் செய்து அவர் பற்றிய செய்திகள் எல்லாம் அறிந்தும் இந்த நாள் வரை மறைத்து வந்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.ஒரு மகத்தான தேசபக்தி மிகுந்த தேசத்தலைவரை இருட்டடிப்பு செய்தபின் காந்தியையும் நேருவையும் மட்டுமே சுதந்திரப்போராட்ட வீரர்களாகச் சித்தரித்து வரலாற்றைப் பூசி மெழுகி இன்னும் நாடகம் நடத்துகிறது காங்கிரஸ்.

தற்போது அறுதிப்பெரும்பான்மையுடன் அசைக்கமுடியாத அரசை நிறுவியிருக்கும் மோடிஜியின் அரசாவது புதைந்து போன
நேதாஜியின் ரகசியங்களை வெளிக்கொணர்ந்து உலகுக்கு உண்மையான தேசத்தலைவர் யார் என்பதை நிரூபித்துப் பின்னர் பாரத ரத்னா வழங்கினால் நான் மிகவும் மகிழ்வேன்.

இப்பதிவை இத்துடன் முடித்துக் கொண்டாலும் உங்களுக்கு எழும் ஐயங்களைத் தொடுத்தால் அவற்றுக்கு பதிலைத் தொகுத்து இன்னுமொரு பதிவையும் பதிவேன்.

பொறுமையாக நான்கு பகுதிகளையும் வாசித்து விருப்பமிட்டு பகிர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து தேசபக்தர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

ஜெய் ஹிந்த். ஜெய் பாரத்..ஜெய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..!

தொகுப்பு: கலைவேந்தன்

ஆதார சுட்டிகள்
கோஸ்லா கமிஷன் வாக்குமூலம்

http://www.nsfoundation.org.uk/Guide%20to%20Netaji%20Mystery.pdf
http://www.missionnetaji.org/article/mukherjee-commission-inquiry-report

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :