Friday, January 2, 2015

Keerthivasan

வைகுண்ட ஏகாதிசி - ஒரு அறிவியல் அவசியம்


ஏகாதிசி அறிவியல் காரணம்:
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும்.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம்.

வளமெலாம் அளிக்கும் வைகுண்ட ஏகாதசி
பெருமாள் பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகச் சிறந்த வழிபாடு, வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது.

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை அந்த நாளில் நடைபெறுகிறது. மோட்சத்துக்கு எப்படிப் போவது? இப்பிறவியில் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காது வாழ்ந்தால் போகலாம்.

சரி, யார் அழைத்துப் போவார், நம்மை? அந்த பரந்தாமனேதான். அவ்வாறு பரந்தாமன் அழைத்துப் போகும் அந்த சம்பவம்தான் இப்போது ஒரு ஒத்திகையாக ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் நடத்தப்படுகிறது.
அதாவது சொர்க்க வாசல் திறக்க, அதனுள் முதலில் பெருமாள் புக, பின்னால், அவர் அழைத்துவரும் அத்தனை பக்தர்களும் புகும் புண்ணிய வைபவம்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில், ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர். (ஒரு வருடத்தின் எல்லா ஏகாதசி நாட்களிலும் இவ்வாறு விரதம் இருப்பதும் அவர்கள் வழக்கம்).
அன்று முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்....

தொகுப்பு: உறையூரில் வந்தியத்தேவன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :