Friday, January 2, 2015

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - கோட்ஷே குற்றவாளியென்றால்... காந்தி?




 மீண்டும் கோட்ஷே புராணமா? இந்த கேள்வி உங்களுக்குள் எழலாம் ஆனால், மீண்டும் எனது இந்து சகோதரர்கள் இதை துவக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே நான் எழுதியது கோட்ஷேவின் வாக்குமூலம் அடிப்படையானது. ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து மகாசபா இதில் சம்பந்தப்படவில்லையென்றும் கோட்ஷே வாக்குமூலம் நியாயமானது என்றும் வாதிட்டது இனி காந்தியின் சில கிருக்குதனங்களையும் அவரின் எழுத்து பேச்சுக்களையும் பார்க்கலாம்.

வங்கதேச பிரிவினை சட்டம் எப்படி பிசுபிசுத்தது என்று முதலில் தெரிந்துக் கொள்வது மிக அவசியம். காரணம் இந்த போராட்ட காலங்களில் ஹிந்து மற்றும் முஸ்லைமான்கள் ஒன்றுபட்டே இருந்தார்கள். சிறு கூட்டம் மட்டுமே இந்த வங்க தேச பிரிவினையை ஆதரித்ததே அன்றி. சாதாரண இஸ்லாமியர்கள் இதில் ஹிந்துக்களுடன் கூடி இருந்தார்கள் என்பது ஆச்சரியப்பட கூடிய ஒன்று.

அதற்க்கு சாட்சியாக அஷ்பாக்குலா கானின் இறுதி வரிகளை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம், அந்த காலகட்டத்தில் அஷ்பாக்குலா கான் போல பல தேசிய சிந்தனைகள் கொண்ட இஸ்லாமியர்கள் புரட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்றார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
பிரபலமானதும் அங்கிலேயர்களை திடுக்கிட வைத்ததுமான புகழ்பெற்ற காகோரி இரயில் கொள்ளை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் அஷ்பாக்குலா கான். தீர்ப்பை எதிர்நோக்கியிருந்த அந்த கலங்கமில்லா புரட்சியாளரின் பிரார்த்தனை இதுதான்:

“என் அருமை தாயகமே, உனது சன்னதியில் எனது உடலையும் வாழ்க்கையையும் அர்பணித்துவிட்டேன். எனக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ எது கிடைத்தாலும் நான் கவலைபடேல். நான் உன்னையே துதிப்பேன், கைவிலங்குடன் உன்னையே தொழுவேன். போர்களத்தின் நடுவில் நின்று ஸ்ரீ கிருஷ்ணன், வாழ்வும், சாவும் நிஜமல்ல என்று அர்ஜீனனுக்கு எடுத்துச் சொன்னாரல்லவா? என் அருமைத் தாயகமே, நீ சுதந்திரமடைவாயாக! என்றும் கீர்த்தி பெற்று விளங்குவாயாக! நான் இருந்தென்ன போயென்ன?”

இப்படி தேச சிந்தனையில் இஸ்லாமியர்கள் இருந்த சமயத்தில் இவர்களை வழி நடத்த காந்தி தவறியது முதல் குற்றம். இவர்கள் பைத்தியம் என பட்டம் சூட்டப்பட்டு ஒதுக்கி வைத்தது காங்கரஸின் மிகப் பெரிய பிழை. இந்த தேசிய சிந்தனையில் இருந்த கொஞ்ச நஞ்ச இஸ்லாமியர்களில் முகமதி அலி ஜின்னாவும் அடக்கம். ஆனால், காந்தியின் கிருக்குதனத்தில் முதன்மையான கிலாபாத் இயக்கம் இதை அடியோடு மாற்றி பல பிரச்சனைகளில் வழிவகுத்தது.

கோட்ஷேவிற்கு கோவில் அமைப்பதோ அல்லது சிலை வைப்பதோ சரி என்பதல்ல என் வாதம். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை செய்ய நினைத்தால் அதை தடுக்கவோ எதிர்க்கவோ தேவையில்லை என்பதே என்வாதம்.

ஒருவேளை கோட்ஷே இதை செய்யாமல் இருந்திருந்தால் காந்திக்கே இங்கு சிலை நிறுவ முடியாமல் போயிருக்கும். காங்கரஸ் இன்று அல்ல எப்போழுதோ முஸ்லைமான்களால் காணாமல் போயிருக்கும்.

அப்படி கோட்ஷேவை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் ஸ்ரீரங்கநாதரின் கோவில் வாசல் முன் இருக்கும் ராமசாமி நாயக்கரின் சிலையை அகற்ற கோரியிருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.

ஒரு நண்பர் இப்படி பகிர்ந்தார்: சிதிலமடைந்த கோவில்களை சரி செய்யுங்கள், பூஜை புணஸ்காரம் செய்யுங்கள் அப்படி இப்படி என்று பல வாதம். சரி, தாங்கள் என்ன செய்தீர்களோ? இன்று இந்து மக்களை ஒருங்கிணைக்க போராடும் ஆர் எஸ் எஸிலாவது இருக்கீங்களா? ஒன்னும் செய்யவில்லைதானே?

இதனால் BJP ஆட்சிக்கு ஆபத்து என்று இன்னொரு வாதம். 1920 காலகட்டத்தில் காங்கரஸ் இப்படி ஒரு நிலையை சமாளீக்க போட்ட கூத்துகளில்தான் இன்று இந்துக்கு விரோதமாக காங்கரஸ் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இந்துக்களுக்கான ஒரே கட்சியாக பிஜேபி இருக்கிறது. இதை பிஜேபி கண்டுக் கொள்ளாமல் போகட்டும் தவறொன்றுமில்லை. அப்படி கண்டுக் கொண்டால் மேலே கேட்ட கோவில் சீரமைப்புகளில் எத்தனை பிஜேபியால் செய்ய முடிந்தது என்று அவர்களை நான் திருப்பி கேட்க வேண்டியும் வரும்.
அவ்வாறு அவர்கள் செய்ய நினைத்தால் இந்து அறநிலைய துறையில் சீர்த்திருத்தங்களாவது கொண்டு வந்தார்களா? வருவார்களா? வர வேண்டும் என்று போராடினார்களா? என்று வரிசையாக பிஜேபி கட்சியினரிடம் நான் கேட்க வேண்டியிருக்கும்.

இந்த நிகழ்வு பிஜேபிக்கு சம்பந்தமில்லாதது ஆனால் நம்மவர்களே சம்பந்தப்படுத்திவிடுகிறார்கள் என்பதே வேதனைதான். இதை ஊடகங்கள் பெரிதாக்க நினைக்கிறது முகனூல் அதற்க்கு துணை நிற்கிறது.

இன்று மதவாதம் என்கிற சுழலில் மாட்டி தவிக்கும் பிஜேபியை போல அன்று சிக்கிதவித்தது எந்த கட்சி தெரியுமா? சாட்சாட் தேசிய காங்கரஸ் தான்.

1920-களில் பிரிடிஷார் இப்படி ஒரு சிக்கலில் காங்கரஸை சிக்க வைத்தார்கள். அனைத்து மதம் இனம் சேர்ந்திருந்தால்தான் அது தேசிய அந்தஸ்தை பெற முடியும் என்று ஒரு கிடுக்குபிடி போட்டார்கள். ஏற்கனவே முஸ்லைமான்களை தூண்டி குளிர் காய்ந்த பிரிடிஷார் தேசியத்துக்கு இப்படி ஒரு வியாக்கியானம் பேசி காங்கரஸை குழப்பினார்கள்.

வங்கால பிரிவினையை ரக்ஷ்பந்தன் விழாவின் மூலம் காசியில் அனைவரையும் ஒன்றுதிரட்டி முறியடித்த பின் சில சீண்டல்களால் முஸ்லீம் லீக் என்று முழுக்க முழுக்க முஸ்லீம் கொண்ட கட்சி தொடங்கப்பட்டது. அதையும் காங்கரஸையும் மோதவிட்டு யார் முஸ்லீம்களின் தோழன் என்று போட்டி போட வைத்து கூடவே தாங்களும் முஸ்லீம் பக்கம் நிற்பது போல காட்டி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பெரிதாக்கினார்கள்..

மதவாத சூழலில் காங்கரஸை நிறுத்திய பிரிட்டீஷார் முஸ்லிம் லீக்கிற்கு அதிக செல்லம் கொடுத்தது எந்த வகையில் அவர்கள் தேசிய கட்சி என்று ஒத்துக் கொண்டார்கள் என்ற கேள்விக்கான விடையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்படி குழம்பிய காங்கரஸ் செய்த முதல் கூத்து இதுதான்..
காங்கரஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பயணப்படி அளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் மாநாடு உணவுக்கு 10 ரூபாய் என்று நிர்ணையித்த காங்கரஸ் இஸ்லாமியர் என்றால் இலவசம் என்றது.

இப்படி ஆரம்பித்த வேலையிலும் உத்தமர் என்று சொல்லப்படும் காந்தி காங்கரஸில்தான் இருந்தார்.

காங்கரஸிம் காந்தியும் கூழை கும்புடு போட வேண்டிய சூழல் எதனால் வந்தது என்பதை பார்த்தோம். அஷ்பாக்குலா கான் போன்று தேசியவாதிகள் எப்படி மாறினார்கள் என்பதையும் இனி பார்ப்போம்.

இதற்கு இமாலய காரணம் கிலாபாத் இயக்கம்...

இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் ஓரளவு கலந்திருந்த முஸ்லைமான்களை தாங்கள் அரேபிய வம்சம் இந்தியாவில் நாம் ஒன்றுபட்டு இருப்பது சாத்தியமில்லை என்று நினைக்க ஆரம்பித்தது இந்த கிலாபத்தால் தான். இதை ஹிந்துக்கள் எதிர்க்கவில்லை ஆனால் ஒருவர் எதிர்த்தார் அவர்தான் பாக்கிஸ்தானை தோற்றுவித்த முகமதி அலி ஜின்னா.

கிலாபத் இயக்கம் என்றால் என்ன?
எங்கு எதற்க்காக தோன்றியது இது?
இதனால் இங்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?
தொடர்ந்து நடந்த வன்முறைகளில் காந்தி உதிர்த்த முத்தக்கள் என்ன?
இவையெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.

மேலே சொன்ன அனைத்துக்கும் நான் ஒருமுறை கூட கோட்ஷேவின் வாக்குமூலத்தை எடுத்தாளப் போவதில்லை. காந்தியின் பத்திரிக்கை கட்டுரை முஸ்லைமாங்களின் வரலாற்று பதிவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள போகிறேன்.

கடைசியில் காந்தியை ஆதரிக்கும் இந்துக்களுக்கு காந்தியின் கையால் ஒரு கொட்டும் இருக்கிறது.

இந்த இயக்கம் கொடுமையான ரௌட் சட்டத்தை எதிர்த்தே வந்தது என்று காந்தி வாயால் வடை சுட்டார் இன்றுவரை பல பள்ளி பாடங்களிலும் இந்த வடை சுடும் வேலைதான் நடக்கிறது ஆனால், உண்மையில் நடந்து வேறு.

இந்த இயக்கத்தின் பேரே முஸலைமான்களின் போராட்டம் என்பதை யாரும் சிந்திக்க கூட இல்லை. அவ்வளவு ஆட்டு மந்தைகளாக இருந்தோம் இருக்கிறோம்.

கிலாபாத் இயக்கம் கொடுமையான ரௌலட் சட்டத்தை எதிர்த்தா?
இல்லவே இல்லை...

உலக போர் தொடங்கி முடிவடைந்தது 1918 நவம்பரில். இதனால் எழுந்த சில பிரச்சனைகளை சமாளிக்க வந்த ரௌலட் சட்டம் அமலானது 1919 மார்ச்.

கிலாபத் தொடங்கியது? 1920 ஆகஸ்ட்டு மாதம் காங்கரஸின் அவசர மாநாட்டில் தான் முதன் முதலில் விவாதித்து ஒத்துழையாமை இயக்கம் தொடங்க முடிவு செய்யபடுகிறது. அதுவே கிலாபத் இயக்கம் என்றும் சொல்லப்பட்டது அதாவது ரௌலட் சட்டம் அமலில் வந்த பிறகு கிட்டதட்ட 17 மாதங்கள் கழித்து.

அப்படி பார்த்தால் கிலாபத்தே தாமதமாகதானே தொடங்கியது என நீங்கள் கேட்க்க கூடும் அதற்க்கு காரணம் 1919 டிசம்பர் மாதம் முஸ்லீம் லீக் ஏற்பாடு செய்த மாநாடே. இந்த மாநாடு கிலாபதை ஆதரிக்க வேண்டும் என்று ஏற்படுத்திய தீர்மானமே காந்திக்கு ஒரு பிடிப்பாகி போனது.

எதை திண்றால் பித்தம் தெளியும், எதை செய்தால் முஸ்லீம்கள் காங்கரஸோடு கரம் கோர்பார்கள் என்று தேடிய காந்திக்கு வலிமையாக மாட்டிய ஒன்றுதான் இந்த கிலாபத் இயக்கம்.

இதுதான் காந்தியின் மிக பெரிய அறைகூவலான எழுமின், விழுமின் இல்லாவிட்டால் வீழ்ச்சிதான்... என்கிற பிரபலமான வாக்கியம். என் பள்ளி நாட்களில் இதை மோசமான ரௌலட் சட்டத்திற்கு எதிரானது என்று என் வராலாற்று ஆசிரியர் சொன்ன போது என் உடல் சிலிர்த்தது. உத்தமரை உயர்வாக எண்ணியது.

ஆனால், என் தீராத தேடலில் வந்த விசயங்கள் இவைக்கு நேர்மாறானவை...
இவர் இப்படி அறைகூவல் கொடுத்தது பாரதத்தின் கிளர்ச்சிக்கு அல்ல. துருக்கியில் இஸ்லாமிய அரசான கிலாபத் அகற்றத்தை எதிர்த்து போராடத்தான் என்று தெரிந்ததும் காந்தியவாதிகள் எனக்கு சதிகாரர்களாகவே தெரிய ஆரம்பித்தார்கள்.

என்னது கிலாபத் துருக்கியின் பிரச்சனையா?

வாய் பிளக்க வேண்டாம். நான் முன்னமே சொன்னது போல காந்தி வாயால் வடை சுட்டு அதை காங்கரஸ்காரர்கள் விற்று நம்மை முட்டாளாக்கியதுதான் உண்மை வரலாறு.

தொடரலாம்...

ஆதாரம்: தேசபிரிவினையின் சோக வரலாறு | சேஷாத்ரி
கிலாபாத்தி பற்றிய சுட்டி
http://historypak.com/khilafat-movement-1919-1922/

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :