Monday, January 5, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 5 – ஒளியே கடவுளாக!


இறைவனின் (அல்லது) பிரபஞ்சத்தின் வடிவம்!:



பிரபஞ்சம் என்பது என்ன? இதை விஞ்ஞான அடிப்படையிலும் மெய்ஞான அடிப்படையிலும் பார்க்கலாம்! பிரபஞ்சத்தின் வடிவம்தான் என்ன? உருண்டையா? கோழிமுட்டை வடிவா? சதுரமா? இப்படியெல்லாம் பல சிந்தனைகள் நமக்கு இருக்கும் ! ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு வடிவென்று எதுவும் இல்லை! அளவுகளும் எதுவுமில்லை! பிரபஞ்ச அளவாக (அதாவது தற்சமயம்) ஒன்றைக் கணித்துள்ளனர் விஞ்ஞான ரீதியில்! அதுவும் நிரந்தரமானது இல்லை! அது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவில் சொல்கிறேன் ! இப்போது பிரபஞ்சத்தின் வடிவமாக எது இருக்கும் என்பது குறித்த விஞ்ஞான விளக்கத்தையும் பிரபஞ்சத்தில் பொதுவாக எதை இறை என்று சொல்கிறோமோ அது பற்றிய விளக்கத்தையும் காண்போம்!

உண்மையில் ஒரு காலத்தில் வானசாஸ்திரம் வளர்ச்சி அடையாத நிலையில் சூரியன், புதன் முதல் சனி உள்ளிட்ட ஆறு கிரகங்களுமே மட்டும்தான் பிரபஞ்சம் என்று கருதப்பட்டது ! ஆனால் அது ஒரு அண்டம்! அவ்வளவே! (மனிதன் அந்த அண்டத்தில் உள்ள ஒரு பிண்டம்! அவ்வளவுதான்!) அது ஆங்கிலத்தில்'காலக்சி' அதாவது கிரகக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது! ஆக நம்முடைய கிரகக் குடும்பம் சோலார் காலக்சி என்று அழைக்கப்படுகிறது! அதாவது சூரியக் குடும்பம்! இதில் சூரியனும் அதைச் சுற்றி வரும் ஒன்பது கோள்களும் உள்ளன! ஆரம்பத்தில் புதன் முதல் சனி வரையில் உள்ள கோள்கள்தான் என்று சொல்லப்பட பின்னர் தொலைநோக்கிகள் மூலம் பல ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் யுரேனஸ், நெப்டியூன், ப்ளூட்டோ உள்ளிட்ட மூன்று கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன!

அப்புறம் வானவியல் ஆராய்ச்சிகள் விரிவடைந்துகொண்டே போக இந்த காலக்சி போல இன்னமும் பல இருப்பது கண்டறியப்பட்ட்டது! நம்முடைய சூரியக் குடும்பத்தின் அருகில் உள்ளது 'NEBULA OF ANDROMEDA' என்று சொல்லப்படும் கிரகக் கூட்டம் ஆகும். இன்னமும் இதுபோன்ற பல காலக்சிகள் கண்டறியப்பட்டு அதற்கு பல பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆக பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த கிரகக் கூட்டங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம்! ஆக பிரபஞ்சத்தில் எத்தனைக் கிரகக் கூட்டங்கள் நம்முடையதைப் போல உள்ளது என்பதையும் கணித்துள்ளனர் ! அதாவது சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி கிரகக் கூட்டங்கள்! நம்முடைய சூரியக் குடும்பத்தின் அளவையும் எண்ணி அதுபோன்ற ஆயிரத்தைநூறு கோடிக் குடும்பங்களின் அளவையும் எண்ணிப் பாருங்கள்! பிரபஞ்சம் என்பது எத்தனை பெரிய ஒரு பிரம்மாண்டம் என்பது புரியும்!

ஆக இந்தப் பிரபஞ்சம் என்பதற்கும் ஒரு வடிவம் இருக்கவேண்டுமே! அந்த வடிவம் இருக்கக் கூடுமா என்பது பற்றியும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்! நம் பூமி உருண்டை! நம் சூரியக் குடும்பம் என்ன வடிவம்? உண்மையில் வடிவம் இல்லை!ஆனால் ஆராய்ச்சிக்காக இப்படி நினையுங்கள்! பூமி ஒரு சிறிய பந்து உருவம்! சூரியக் குடும்பம் பூமி உள்ளிட்ட ஒன்பது 'சிறிய பந்துகளை' உள்ளடக்கிக் கொண்ட ஒரு 'பெரிய பந்து' என்று வைத்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பிரபஞ்சம் என்பதை சூரியக் குடும்பம் போன்ற ஆயிரத்தைந்நூறு கோடி 'பெரிய பந்துகளை' உள்ளடக்கிக் கொண்ட ஒரு 'மிகப் பெரிய பந்து' என்று வைத்துக் கொள்ளுங்கள்! இதை நான் சொல்லவில்லை! பிரபஞ்சத்துக்கு வடிவம் உண்டா? அது எப்படி இருக்கும் என்று ஆராய நினைத்த விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் தங்கள் ஆராய்ச்சிகளை இப்படிதான் ஆரம்பித்தனர்! ஆக பிரபஞ்சம் என்பது ஆயிரத்தைநூறு கிரகக் குடும்பம் எனும் 'பெரிய பந்தை' தன்னுள் அடக்கியுள்ள 'மிகப் பெரிய பந்து' என்று வைத்துக் கொண்டால் பிரபஞ்சத்துக்கு என்று ஒரு வடிவம் கிடைத்து விடுகிறது அல்லவா? ஆக இது அறிவியலுக்கு ஏற்புடையதாக இருந்தால் இதுதான் பிரபஞ்சத்தின் வடிவம் என்று கொள்ளலாம் என்று நினைத்தனர் விஞ்ஞானிகள்!

ஆனால் இப்போதுதான் ஒரு சிக்கலும் வந்தது! அது என்னவென்றால் நீங்கள் பிரபஞ்சத்தின் வடிவை ஒரு 'மிகப்பெரிய பந்தாக ' வைத்துக் கொள்ளுங்கள்! அது பந்தாக இல்லாமல் கோழிமுட்டை உருவிலோ, சதுர வடிவிலோ கூட இருக்கலாம் என்று கூடக் கருதிக் கொள்ளுங்கள்! ஆனால் அப்படி பிரபஞ்சத்தை ஒரு பந்தின் மாதிரி வடிவாக வைத்தால் இன்னொரு சிக்கல் வருகிறது அது பிரபஞ்சம் என்பது பந்தின் வடிவம். அதனுள்ளே ஆயிரத்தைநூறு கோடி கிரகக் கூட்டங்கள் உள்ளன! சரி இது சரி என்றே வைத்துக் கொள்வோம்! இதுதான் உண்மை என்று கொண்டால் அப்போது இன்னொரு கேள்வி? பந்தின் உள்ளே இன்னது உள்ளது என்றால் பந்துக்கு வெளியே என்ன உள்ளது? உண்மைதானே இந்தக் கேள்வி? பந்து என்று ஒன்றைக் கொண்டால் அதற்கு வெளியே வேறொன்றும் இருந்துதானே ஆக வேண்டும்?

இதனால்தான் பிரபஞ்சம் இன்ன வடிவுடையது என்று எந்த உருவையும் கொடுக்க இயலவில்லை விஞ்ஞானத்தால்! அப்புறம் இன்னொன்றும் கண்டறிந்தனர்! அதாவது பிரபஞ்சத்தில் உள்ள பல அந்தக் கூட்டங்களில் எங்காவது பல இடங்களிலும் பூமி உண்டானபோது நடந்த 'அண்ட வெடிப்பு' அதாவது "BIGBANG" நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது! அண்டவெடிப்பு நிகழ்ந்தாலே நிகழுமிடம் விரிவடையும்! ஆக அண்டவெடிப்பு நிகழும் இடங்களில் எல்லாம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது! ஆக பிரபஞ்ச வடிவு என்று எதையும் சொல்லல இயலாது என்று கண்டறிந்த விஞ்ஞானிகள் அதற்கு 'விரிவடையும் பிரபஞ்சக் கொள்கை ' அதாவது "THE THEORY OF EXPANDING UNIVERSE!" என்கிற கொள்கையை முன்வைத்து அதுவே இன்றளவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக உள்ளது!

சரி இதற்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பிரபஞ்சம் என்பது வெளி! அதாவது வளிமண்டலம் என்று சொல்லப்படும் "SPACE ". பிரபஞ்சம் முழுதுமே வெளி தான் உள்ளது. அதை வளி என்றும் சொல்லலாம்! வெளிக்கு எல்லைகள் ஏதுமில்லை! பிரபஞ்சம் முழுதும் வெளிதான் நீக்கமற நிறைந்துள்ளது! வேறொன்றும் இல்லை! ஆக ஆக்சிஜன் முதலான வாயுக்கள் போன்றவை ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளன! ஆனால் வெளி எங்குமுள்ளது! பிரபஞ்சத்தில் 'வெளியின்றி' வேறு எதாவது நீக்கமற உள்ளதா என்று சிந்தித்தால் அது 'ஒளியாக' மற்றும் 'ஒலியாக' உள்ளது ! ஆம் வெளியுடன் ஒளியும் ஒலியும்தான் பிரபஞ்சமுழுதும் நீக்கமற உள்ளது! ( சில நண்பர்கள் நினைப்பீர்கள்! ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சூரிய ஒளியின்றி இருளடைந்த கிரகம் என்று சொல்கிறார்களே என்று! ஆம் உண்மைதான்! இந்த இடத்தில் இருமை என்பது ஒருமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! அதாவது எளிமையாக இப்படிச் சொல்லலாம்! இருள் என்பது குறைந்த ஒளி! நிசப்தம் என்பது குறைந்த சப்தம்! அவ்வளவே!)

ஆக இப்படி பிரபஞ்சமுழுதும் வெளியும் ஒளியுமாகத்தான் உள்ளது! ஒளி என்பது அடைத்து வைக்க இயலாதது! அது பரந்து இருக்கும்!அதே போல்தான் வெளி என்பதும் பரந்தே உள்ளது. 'வெளிக்கும்' முடிவில்லை! ஒளிக்கும் முடிவில்லை! இரண்டுமே பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்து உள்ளன! சரி இதற்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!

நம் இந்து மதம் மட்டுமின்றி இதர பல நாடுகளிலும் ஒளியையே தெய்வமாக வணங்குகின்றனர். அதையே 'ஜோதி வழிபாடு' என்கிறோம். அந்த ஜோதிக்கு எல்லைகள் இல்லை! வடிவம் இல்லை! ஆக 'வெளியே' இறைவன்! 'ஒளியே ' இறைவன்! ஆக மேலைநாட்டு விஞ்ஞானிகள் பலப் பலவாறாக சிந்தித்து ஆராய்ச்சிகள் செய்து எல்லையில்லாதது வடிவில்லாதது 'பிரபஞ்சம்' என்று எதைச் சொன்னார்களோ அதையே நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடி வைத்துள்ளனர்!

''ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியே!'' என்று

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :