Monday, January 5, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 10 – உணவின் முக்கியத்துவம்

கேள்வி : ஹிந்து மத நூல்களில், ‘சோறு’ விசேஷமாகப் பேசப்படுகிறது – இல்லையா?

சோ : ஆமாம். நீங்கள் ‘சோறு’ என்று சொல்கிறீர்கள். ஹிந்து மத நூல்கள், ‘அன்னம்’ என்று கூறுகின்றன; அதில் ‘சாதம்’ – அல்லது ‘சோறு’ மட்டும் அடக்கம் அல்ல. பொதுவாக ‘உணவு’ என்பதையே அது குறிக்கிறது. தமிழில் கூட ‘அன்னம் இட்ட வீட்டில் கன்னம் வைப்பது…’ பற்றிப் பேசப்படுகிறது; ‘அன்னதானம்’ பற்றிக் கூறப்படுகிறது. இதெல்லாம் கூட, ‘உணவு’ என்பதையே குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.



கேள்வி : அதிருக்கட்டும். ‘அன்னம்’ என்றே சொல்கிறேன். அது என்ன அவ்வளவு விசேஷம்? சாப்பாடு அவ்வளவு முக்கியமா? அதை ஏன் போற்ற வேண்டும்? சாதாரண விஷயத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

பதில் : சாதாரண விஷயம் என்று சொல்கிறீர்கள். அந்த அன்னம் – அந்த சோறு – அந்த உணவு இல்லாமல் வாழ முடியுமா? உண்ணாவிரதம் இருப்பவர்கள் கூட, இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள்? காலையில் நன்றாக டிஃபன் சாப்பிட்டு விட்டு, ‘உண்ணாவிரத’த்தில் அமர்ந்து, மீண்டும் பசி வரும் நேரத்தில், உண்ணாவிரதத்தை ‘வெற்றி’கரமாக முடித்துக் கொள்கிறார்களே! இதற்குப் பெயர் ‘அடையாள உண்ணாவிரதம்’! எதற்கு அடையாளம் இது? பட்டினிக்கு அடையாளம் – இரு உணவுகளுக்கு இடையில் சாப்பிடாமல் இருப்பதா? போயும், போயும் சோறு விஷயத்தில் இப்படி ஒரு போராட்டமா? அதாவது – உண்ணாவிரதம் இருப்பவருக்குக் கூட, சாப்பாடு முக்கியம்தான்.

‘அன்னம் ந நிந்த்யாத்’ – என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது உபநிஷத வார்த்தை. ‘உணவை இகழாதே!’ என்பது பொருள். ஏனென்றால், அது முக்கியமானது, புனிதமானது.

‘அன்னம் பஹு குர்வேத்’ – இதுவும் உபநிஷதச் சொல்தான். ‘உணவை அதிகம் உற்பத்தி செய்’ என்பது இதன் பொருள். இதை வைத்துக் கொண்டுதான் ‘க்ரோ மோர் ஃபுட்’ என்ற ‘காம்பெய்ன்’ நடந்தது.
பகவத் கீதையில், உணவின் முக்கியத்துவம் பேசப்படுகிறது :
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்னஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யஞ: கர்ம ஸமுத்பவ:
‘அன்னத்தினால் ஜீவராசிகள் வாழ்கின்றன; அந்த உணவு மழையினால் விளைகிறது; மழை, யாகங்களினால் பொழிகிறது; யாகங்கள் நற்காரியங்களினால் நடைபெறுகின்றன’.

இதையே முடிவிலிருந்து பார்த்தால், நற்கர்மங்களினால் யாகங்களும்; யாகங்களினால் மழையும்; மழையினால் உணவும் விளைகின்றன; இப்படி உண்டாகிற உணவினால், ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன.


 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :