Wednesday, January 7, 2015

Keerthivasan

கீதையின் முத்துக்கள் - 6


குற்றமான செயல்கள் ஒருவர் செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் என்ன காரணத்தினால் அவர் தவறிழைக்க நேர்கிறது?


காரணம்: ஆசை.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சல்யம் ஆகிய ஆறுகுணங்கள் மனிதனுக்குச் சத்ருக்கள் ஆகும். தமிழில் ஆசை அல்லது பேராசை, கோபம், பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, ஏற்றதாழ்வு மனப்பான்மை, வஞ்சகம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஆறில் தலையான சத்ரு ஆசையே!
தவறை திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்க ஆசையை ஒழிக்க அல்லது அடக்க வேண்டும். படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட ஆசையை ஆடக்க இயலாது அவமானப் பட நேர்கிறது.
ஆசை நிரந்தரமாகப் பூர்த்தி அடைவதில்லை என்றும். உதாரணமாக விலை உயர்ந்த ஆடை ஒன்றினை வாங்கி அணிய விரும்புபவர் அதை வாங்கி உடுத்திய பிறகும் அதனால் நிரந்தரமாக சமாதானம் அடைவதில்லை. சிறிது நாள் கழித்து அவ்வாசை மீண்டும் தலை தூக்கும்.
இது மண்ணாசை, பணம், சொத்து, உணவு, பெண்ணாசை என்று சகலத்திற்கும் பொருந்தும்.



கற்றறிந்த ஆன்மீக அறிவை ஒருவர் எப்போது இழக்கிறார்?


ஆசை அல்லது காமம் ஒரு மனிதனை ஆனிமீகப் பாதையில் பயணிப்பதைத் தடுக்கிறது. நெருப்பு எரிவதை புகை சூழ்ந்து தடுக்கிறது, அழுக்கு படிந்த கண்ணாடி அதன் பிரதிபலிப்பு தன்மையைக் குறைக்கிறது, கருவை கருப்பை சூழ்ந்து தன்னுள்ளேயே வைத்திருக்கிறது. அதைப் போல சரி - தவறு எதுவென்று மனிதனின் சிந்திக்கும் திறனை, ஆசை சூழ்ந்து மட்டுப்படுத்துகிறது.

இந்த மூன்று எடுத்துக் காட்டுகளும் மூன்று விதமான மனிதர்கள் கொண்டிருக்கும் ஆசைகளுடன் ஒப்பிடலாம்.

அதாவது, நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையை சற்று வேகமான காற்று அப்புறப்படுத்தி தீ எரிவதற்கு வழி வகுக்கும், அதைப் போல சிறப்பான மனிதர்கள் எளிதாக ஆசையை அடக்கி நல்வழிப்படலாம்.

தூசு படிந்த கண்ணாடியைச் சுத்தப்படுத்த சற்று முயற்சி அவசியம், அதைப் போல சாதாரண நிலையில் உள்ள மனிதர்கள் சற்று அதிகமான முயற்சியினால் ஆசையினை அடக்கி நல்வழிப்படலாம்.

கீழான நிலையில் இருக்கும் மக்களோ ஆசையை அடக்குவது கடினம். ஒரு கருவானது கருப்பையிலிந்து தப்பிக்க இயலாது. அதைப் போல் தான் இந்த நிலை மக்களும்.

இந்த மூன்று நிலைகளில் உள்ள மக்களும் இறைவனை தியானிப்பது மூலமாக ஆசை அல்லது காமத்தினை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :