Monday, January 12, 2015

Keerthivasan

தேசபிரிவினையின் சோக வரலாறு - 13

ஜத்தின்தாஸ் இதே காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று பின் பகத் சிங், ஆசாத் போன்ற புரட்சியாளர்களோடு சேர்ந்து கைதாகி, லாகூர் சிறையில் வைக்கப்பட்டார்.  அங்கிருந்த அரசியல் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உடைகள் பல மாதங்களாக துவைக்கப்படாத அணிந்தாலே சரும நோய் வரக்கூடிய உடைகள்.  எலிகளையும் கரப்பான்பூசிகளையும் நாம் சாப்பிடும் தட்டிலிருந்து விரட்டிவிட்டு சாப்பிடவேண்டும் என்ற நிலைமை.  கைதிகள் மனிதத்தன்மையுடன் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கையுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  15 ஜூன் 1929 லிருந்து 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.  63 நாட்கள் ஒருவர் உண்ணாவிரதம் இருந்ததை அதுவரை வரலாறு கேட்டதில்லை.  அதிர்ந்தது உலகம்.  அவரது இறுதி ஊர்வலமே 2 மைல் நீளம் இருந்தது என்கிறார்கள்.  இவர்களா MISGUIDED PATRIOTS?


1923 ஆம் வருடம், காக்கிநாடா மாநாட்டில் முகமது அலி மாநாட்டின் தலைவராக தீர்ந்மாநிக்கப்பட்டார்.  இது காந்திஜியால் மிக பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.   காங்கிரஸ் மாநாட்டிற்கு வர ஹிந்துக்கள் தங்கள் கைகாசு போட்டு, தங்க இடம், உணவு என்று அனைத்திற்கும் தாங்களே ஏற்பாடு செய்துகொண்டு வருவார்கள்.  ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் அனைத்தும் இலவசம்.  அவ்வர்கள் வர அணைத்து செலவுகளும் காங்கிரஸ் ஏற்றுகொண்டது.  மாநாட்டில், வழக்கம்போல விஷ்ணு திகம்பர பலுஸ்கர் என்பவர் எழுந்து வந்தே மாதரம் பாட வந்தார்.  8 ஆண்டுகளாக இதை அவர் செய்து வந்தார்.  உடனடியாக முகமது அலி எதிர்ப்பு தெரிவித்தார்.  பலுஸ்கர் திரும்பி பார்த்தார். சொன்னார், " இது உங்கள் மசூதி கட்டிடமல்ல.  காங்கிரஸ் மாநாடு.  உங்களுக்கு இசை பிடிக்காதென்றால் உங்களை பல்லக்கில் தூக்கி மேள வாத்தியத்தோடு கொண்டு வந்தார்களே அப்போது தடுத்திருக்க வேண்டும்.  நான் அப்படிதான் பாடுவேன்.  என்னை தட்டுக்க முடியாது.  உங்களுக்கு பிடிக்கவில்லைஎன்றால் மாநாட்டை விட்டு வெளியே போகலாம்."  என்று கூறி பாட ஆரம்பித்துவிட்டார்.  அவமானமாக போய்விட்டது அலிக்கு.  கோபப்பட்டு எழுந்தார். தங்கள் மதத்தை சேர்ந்தவருக்கு அவமானம் என்றவுடன் எந்த கட்டளையும் இல்லாமலே அனைத்து முஸ்லிம்களும் எழுந்தார்கள்.  வெளி நடப்பு செய்தார்கள்.

பின்னர் காந்திஜி அவரை சமாதானபடுத்த முயன்றார்.  இந்த பாடலில் ஹிந்து கடவுள்கள் பெயர்கள் வருகின்றன, அதுதான் உங்களுக்கு விருப்பமில்லை என்று நினைக்கிறேன் என்று இழுத்தார்.  இல்லை வந்தே மாதரம் என்ற பாடல் மட்டுமல்ல, வந்தே மாதரம் என்ற கோஷமே கூடாது.  இஸ்லாமியனின் தலை அல்லாவை தவிர வேறு ஒருவனை வணங்காது.  வந்தே மாதரம் என்றால், தாயே உன்னை வணங்குகிறேன் என்று பொருள், இதை எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்றார்.  வாயடைத்து போனார் காந்திஜி.


முகமது அலி சொன்னதில் முஸ்லிம்களை பொருத்தவரை தவறேதும் இல்லை.  குரான் சொல்வதை அவர் சொன்னார்.  அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.  நாம்தான் அனைத்தும் ஒன்று.  எல்லாம் ஏக இறைவன், அனைத்தும் அவன் நாமமே, அவன் செயலே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இஸ்லாம் அல்லாத எதையும் அவர்கள் மதிக்க தயாராகள் இல்லை.  நமக்கு எல்லாமே இறை சொரூபம்.  அவர்களுக்கு அப்படியே நேர் எதிர் கொள்கைகள்.  

இசை, விக்ரஹம், பாடல், பஜனை, பூஜை என்று அனைத்தையும் எதிர்க்கிறார்கள்.  சென்னையில் சில ஆண்டுகள் முன் நடந்த ஒரு முஸ்லிம் கூட்டத்தில், முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்க பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று சொன்னார்கள்.  ஏனென்றால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்கிறார்களாம்.  இஸ்லாமியனுக்கு தாய் தந்தை இறைவன் அல்ல ஆகவே அனுப்பாதீர்கள் என்றார்கள்.  நாத்தீகம் பேசும் தமிழர்கள் கூட தாயை வணங்குவதை தடுக்கமாட்டான்.  அதை அவன் பண்பாடாக பார்க்கிறான்.  ஆனால் முஸ்லிம்களுக்கு எதிலும் உடன்பாடு இல்லாமல் இருந்தது.  தங்களை வேறுபடுத்தி காட்டுவதில் அவர்கள் குறியாக இருந்தனர். 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :